Friday, 30 August 2013

உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்!!!

 
உறவுகள் என்பது ஒரு புதையல் போன்றது. அதை கையாளுவதை பொறுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட மென்மையான உறவுகள் பலவித பிரச்சனைகளால் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. காதல், செக்ஸ் மற்றும் பணம் - இந்த மூன்றும் தான் உறவுகளில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கும் முக்கிய பிரச்சனைகளாகும். சரி இதனை எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாமா?
ஏதாவது ஒரு பிரச்சனையால் ஒரு கட்டத்தில் உறவுகளானது பாதிக்கப்படும். பல பேர் இந்த பிரச்சனைகளை பற்றி பெரிதாக கவலை கொள்ளாமல் உறவை தொடரச் செய்வார்கள். ஆனால் இன்னும் சிலரோ பிரச்சனைக்கு தீர்வு காண எந்த ஒரு முயற்சியையும் எடுக்க மாட்டார்கள். உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளும் இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தாலும், உங்களால் தான் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று வேறு சிலர் நினைக்கலாம். சரி, அப்படி குழப்பங்களை ஏற்படுத்தும் சில பிரச்சனைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செக்ஸ்

ஆண்களுக்கு மட்டும் தான் செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது என்று எண்ணினால், மறுபடியும் ஒரு முறை யோசித்து பாருங்கள். 64 சதவீத பெண்களுக்கு தங்கள் கணவனிடம் உடலுறவில் ஈடுபடும் போது திருப்தி ஏற்படுவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. ஆகவே உங்களுக்குள் இந்த உறவை சரிசெய்ய பிரச்சனைகளை பேசி சரிசெய்து கொள்ளுங்கள்.

செக்ஸ் பிரச்சனைக்கான தீர்வுகள்

உங்கள் பிரச்சனைகளை பற்றி கணவன்/மனைவியிடம் பேச வெட்கப்படாதீர்கள். நீங்கள் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இல்லை என்பது நீங்கள் சொல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எப்படி புரியும்? ஆகவே வெளிப்படையாக பேசுங்கள்.

செக்ஸ் பிரச்சனைக்கான தீர்வுகள்

காம உணர்வை அதிகரியுங்கள். அதற்கு உங்கள் துணையிடம் படுக்கையில், அவர் சந்தோஷமாக இருக்கிறாரா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

செக்ஸ் பிரச்சனைக்கான தீர்வுகள்

செக்ஸ் விஷயத்தினால் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கு ஒரு மருத்துவரை அணுகலாம். இதனால் ஒருவேளை படுக்கையில் அந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது மறைமுக பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவர் உங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் அல்லவா?

பணம்

இது என் பணமா அல்லது நம் பணமா? இதுவே பிரச்சனைக்கு முதன்மையான காரணமாக விளங்குகிறது. கல்யாணத்திற்கு முன்போ அல்லது பின்போ, பணத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்போதெல்லாம் தம்பதிகள் தனித் தனியாகவே வங்கிக் கணக்குகள் வைக்க விரும்புகிறார்கள் என்று ஒரு சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்கா? என்று பார்த்தால், பல வல்லுனர்கள் ஆம் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டு செலவுக்கு சமமாக பணத்தை கொடுக்கும் போது தான், இது ஆரோக்கியமாக விளங்கும் என்றும் கூறுகிறார்கள். இத்தகைய பணப் பிரச்சனைகளை கீழ்கூறிய படி சமாளிக்கலாம்.

பணப் பிரச்சனைக்கான தீர்வுகள்

முதலில் கணவன்/மனைவியிடம் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவாக பேசி விடுங்கள்.

பணப் பிரச்சனைக்கான தீர்வுகள்

ஏதாவது ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, செலவளிப்பதற்கு ஒருவர், சேமிப்பதற்கு ஒருவர் என முடிவெடுக்கலாம் அல்லது சம அளவில் இருவரும் சேமிப்புக்கு கை கோர்க்கலாம். ஆனால் இருவரில் யாராவது ஒருவருக்கு பணப் பிரச்சனை ஏற்படும் போது இந்த அமைப்பை சற்று நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

பணப் பிரச்சனைக்கான தீர்வுகள்

முக்கியமாக கடன்களை ஒருவருக்கொருவர் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். மேலும் குறுகிய கால மற்றும் நீண்ட கால லட்சியங்களை திட்டமிட வேண்டும்

காதலின்மை

பல தம்பதியர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களிடம் அன்பாக இல்லை என்றும், தங்கள் பேச்சை கேட்பதில்லை என்றும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உட்கார்ந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இருவருமே நினைப்பதில்லை. உருவங்களில் ஏற்படும் பிரச்னையை பற்றி பேசுவது பல பேருக்கு முக்கியமாக படுவதில்லை. சரி அப்புறம் எப்படி தான் உறவை மேம்படுத்துவது?

காதலின்மை

பல தம்பதியர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவி தங்களிடம் அன்பாக இல்லை என்றும், தங்கள் பேச்சை கேட்பதில்லை என்றும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உட்கார்ந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று இருவருமே நினைப்பதில்லை. உருவங்களில் ஏற்படும் பிரச்னையை பற்றி பேசுவது பல பேருக்கு முக்கியமாக படுவதில்லை. சரி அப்புறம் எப்படி தான் உறவை மேம்படுத்துவது?


போதுமான காதலின்மைக்கான தீர்வுகள்

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நடு நடுவே உங்கள் துணையிடம் பேசும் பழக்கத்தை தவிர்க்கவும். அதே போல் உங்கள் துணையிடம் பேசி கொண்டிருக்கும் போது, மெசேஜ் படிப்பதிலோ, தொலைபேசியில் உரையாடுவதையோ தவிர்க்கவும். ஆகவே இருவரும் பேசும் போது தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு நேரத்தை இருவரும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

போதுமான காதலின்மைக்கான தீர்வுகள்

சில விதிமுறைகளை விதித்துக் கொள்ளுங்கள். கோபத்தினால் பிரச்சனைகளை பேச முடியாவிட்டால் அதற்கு என்ன வழி என்பதை யோசியுங்கள். ஒருவரை பார்த்து மற்றொருவர் கத்த கூடாது என்று முடிவெடுங்கள். புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுங்கள்.

போதுமான காதலின்மைக்கான தீர்வுகள்

முக்கியமாக பேசும் போது காது கொடுத்து கேளுங்கள். மேலும் உங்கள் துணை உங்களிடம் பேசும் போது, கண்களை வேறு எங்கோ கொண்டு செல்வது அல்லது கவனிக்காமல் இருப்பது என்றெல்லாம் நடக்காதீர்கள். அவரின் பிரச்சனையை தீர்க்க நீங்களும் ஆர்வம் காட்டுகிறீர்கள் என்பதை உங்கள் உடல்மொழி அவருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

போதுமான காதலின்மைக்கான தீர்வுகள்

எப்படி உங்கள் பிரச்சனை உங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, அதே போல் இந்த உறவில் உங்கள் துணை எதிர்பார்த்தது கிடைக்கிறதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சனையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

thanks:oi

தினமும் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

 
ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம். அது தான் ரன்னிங்/ஓடுதல்.
அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் ஓடுதல் சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது.
இப்போது ரன்னிங்/ஓடுதல் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய ஆரோக்கிய நலன்கள் பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.



உடல் எடையை குறைக்கும்

உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.


எலும்புகளை வலுப்படுத்தும்

ஓடுதல் பயிற்சியை பழகி, அதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்படும் மற்றும் எலும்புப்புரை, மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. அது மட்டுமல்லாமல் கால், இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்பின் பரப்பளவும் அதிகரிக்கும்.


நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்

ஜாக்கிங் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்கா


மன அழுத்தத்தை போக்கும்

ஓடுதல் உடலை ஆசுவாசபடுத்தும் பயிற்சி ஆகும். அதிலும் உடலின் சுகாதாரத்தை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயிற்சி ஆகும்.


இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

ஓடுதல் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சம்பந்தமான நோய்களின் தாக்கத்தில் இருந்து இதயத்தை காக்கிறது.


ஆற்றல்/எனர்ஜியை அதிகரிக்கும்

காலையில் விழிக்கும் போது, சோம்பலாக உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணர்ந்தால், உடனே ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான். ஏனெனில் ஓடுதல் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தி, தினசரி அலுவலில் ஈடுபட உதவும்.



செரிமானத்தை அதிகரிக்கும்

ஓடுதல், செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்படவும் தூண்டுகிறது. ஓடுதல் பயிற்சியானது கலோரிகளை எரிப்பதால், ஓடி முடித்தவுடன் அதிக பசி ஏற்படும். ஆகவே ஓடும் முன்பு ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்து கொள்ளுதல் அவசியம்.


கொழுப்பை குறைக்கும்

ஓடுதல் பயிற்சி கொழுப்பை உருவாக்கும் செல்களை சிதைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவுகிறது மற்றும் ஜீவத்துவ பரிணாமத்தை (Metabolism) ஒழுங்குப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.


மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது

ரன்னிங் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் மூளைக்கும் இரத்தம் சீரான அளவில் பாய்வதால், மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே மூளை ஆரோக்கியமாகவும் இருக்கும்


நன்றாக தூங்க உதவும்

தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பகலில் ஓடுவது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஏனெனில் ஓடுவதன் மூலம் உடல் களைத்து, இரவில் நிம்மதியான தூக்கம் வர வழிவகுக்கும்.

நீரிழிவு ஆபத்தை குறைக்கும்

தொடர்ந்து ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஆபத்தை தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
.

முதுமையை தாமதப்படுத்தும்

ஓடுதல் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மிளிரும் நிறத்தையும் ஏற்படுத்தி, அழகிய தோற்றத்துடன் இளமையாக இருக்க செய்யும். மேலும் முதுமை தொடர்பான சிக்கல்களை குறைத்து, வலுவான உடலமைப்புடன் இருக்க உதவுகிறது.


கொலஸ்ட்ராலை குறைக்கும்

ஓடுதல் பயிற்சி, உடலில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.


மூட்டு ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது

ரன்னிங், தசை நார்கள் மற்றும் தசை நாண்களை வலுபடுத்தி, மூட்டு வலிமையை அதிகப்படுத்துகிறது, அதனால் கணுக்கால் மற்றும் முழங்கால் காயங்கள் ஏற்படுவது குறைகின்றது.


ஒருங்கிணைப்பு மேம்படுத்துகிறது

வழக்கமாக ஓடுதல் பயிற்சியைக் கொண்டால், கை கண்களுக்கு இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, உடல் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.


ஆரோக்கியமான உடல்

பொருத்தமான உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்றால் ஓடுதல் அல்லது ஜாக்கிங் செய்ய வேண்டும். ஓடுதல் உடல் கட்டை பராமரிக்க ஒரு எளிய வழியாகும்.


குறைந்த செலவில் ஏரோபிக் உடற்பயிற்சி

ஓடுதல் பயிற்சியை வழக்கமாக கொண்டிருந்தால், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம். மேலும் இது நல்ல மன நிலையில் வைத்திருக்கவும், உடலையும் மனதையும் ஆரோக்கியமாய் வைத்திருக்கவும் உதவும்.


நன்றாக உணர வைக்கும்

ஓடுதல் பயிற்சியை பழக்கமாக கொண்டிருந்தால், நம்மை நன்றாக உணர முடியும். அதுமட்டுமல்லாமல் நோய்களில் இருந்து உடலை குணமடைய செய்து பாதுகாக்கும். இம்மாதிரி ஓடுதல் பயிற்சி உடல் நலத்தையும், மன நலத்தையும், உணர்ச்சிகளையும் மேம்படுத்த உதவுகிறது.


ஸ்டாமினாவை அதிகரிக்கும்

ஓடுதல் பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதால், தசை வலிமையை அதிகரிப்பதோடு, ஸ்டாமினாவை மேம்படுகிறது.

மனைவிகளை கணவன்மார்கள் ஏமாற்றுவதற்கான  முக்கிய காரணங்கள்!!!

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது உறவை வைத்துக் கொள்ள சில ஆண்கள். கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி கொண்டு குற்றம் கண்டுபிடிக்க காரணம் தேடி அலைவார்கள். பல நேரம் இப்படி நடப்பது தன் மனைவியை காயப்படுத்தி. அவளை பழிவாங்கவே.

 ஆனால் சில நேரம் தன் குற்றம் வெளிப்படாது என்ற தைரியத்தால், இந்த தவறுகளை ஆண்கள் செய்கின்றனர்.
ஆண்கள் ஏன் தங்களின் மனைவியை ஏமாற்றுகிறார்கள்? கமல் குரானா என்ற உறவு சார்ந்த ஆலோசகர், திருமணத்திற்கு பின் ஆண்கள் ஏன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற ஆய்வை நடத்தினார். இதற்காக அவர் பல தம்பதிகளிடம் கலந்துரையாடி தன் முடிவை மனைவிமார்கள் பார்வையிலிருந்து வெளியிட்டார். அப்படி அவர் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா.


திருமண பந்தத்தில் கோளாறு

 
வீட்டில் மனைவியுடன் தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டால், அந்த சண்டைகளுக்கு தீர்வு ஏற்படாமலே போய் விட்டால், ஆண்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டு அமைதியை தொலைப்பார்கள். இப்படிப்பட்ட சந்தர்பத்தில் ஒன்று அவர்கள் சண்டை போட முற்படுவார்கள் அல்லது தப்பி ஓட முடிவெடுப்பார்கள்.

இப்படிப்பட்ட தருணத்தில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டால், மனைவியுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பாமல், அந்த புதிய உறவுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இப்படி செய்யும் போது, இவ்வகை குடும்ப பிரச்சனைகளில் இருந்து விலகி, மற்றொரு துணையுடன் அவர்கள் நிம்மதி அடைவார்கள். அதனால் மனைவியை ஏமாற்ற முற்படுவார்கள்.


உறவில் சலிப்பு தட்டும் போது ஏமாற்ற தொடங்குவார்கள்

 
சில ஆண்களுக்கு ஒரே மாதிரி செல்லும் திருமண வாழ்க்கை அலுப்பை ஏற்படுத்தி விடும். இவ்வகை ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் புது உறவில் ஈடுபடுவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அலுப்புத் தட்டும் உறவை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, அதிலிருந்து விலகி புது உற்சாகத்தை பெற புது உறவையே நாடுவார்கள். சிக்கலில் இருக்கும் அலுப்புத் தட்டிய உறவை சரி செய்வதை விட, புது உறவில் உடனடியாக ஏற்படும் மன நிறைவையே அவர்கள் விரும்புவார்கள்.

இவ்வகையான புது உறவு அவர்களுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தரும். அந்த தைரியத்தில், அவர்கள் இடர்பாடுகளை சந்திக்க தயாராகி விடுவார்கள்.


உடலுறவில் விதவிதமான அனுபவம் பெற ஆண்கள் ஏமாற்ற நினைப்பதுண்டு

 
உடலுறவு என்பது எப்போதுமே தாம்பத்தியத்தில் முதன்மையான பங்கை வகித்து வருகிறது. சில ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்நாள் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதில் திருப்தி அடைவார்கள். ஆனால் இன்னும் சிலருக்கோ உடலுறவை பல பெண்களிடம் வைத்துக் கொள்ள அலாதி பிரியம் ஏற்படும். புது வகை இன்பங்களை சோதித்து பார்க்க, பல பெண்களிடம் பல முறை உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

அதனால் இவ்வகை உறவு வைத்துக் கொள்ளும் முன், அவர்கள் எதையும் யோசிப்பதில்லை. சொல்லபோனால் செக்ஸ் விஷயத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்கள் என்ற பெருமையே அவர்களிடம் மேலோங்கி நிற்கும்.


ஏமாற்றும் ஆண்கள் பாசத்தில் திருப்தி அடையாமல் இருப்பார்கள்

 
மனைவிகள் அவர்களுடைய வாழ்க்கையை கவனிப்பதில், வேலை பார்ப்பதில், குழந்தைகளை கவனிப்பதில், மாமனார் மாமியாரை கவனிப்பதில் அல்லது பெற்றோர்களை கவனிப்பதில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் போது, கணவன்மார்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆண்கள் மட்டும் என்ன மரக்கட்டைகளா என்ன?

தன் மீதும் தன் மனைவி அக்கறை காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் படும் பாட்டை மனைவிகள் புரிந்து, அவர்களை பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். பல ஆண்கள் தங்களை பாராட்ட வேண்டும் என்று கேட்பது குழந்தைத்தனம் என்று எண்ணுவதாலேயே அவர்களுக்குள் இந்த மனக்குழப்பம் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்கு இடையே உள்ள அலைவரிசை ஒத்துப்போவதில்லை. அதனால் மனைவி என்ன தான் மனம் விரும்பிய படி நடந்தாலும், சில ஆண்கள் ஏதாவது குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

சில நேரம் உடன் வேலை பார்க்கும் பெண்கள் அவர்களை புகழ்ந்து தள்ளி ஊக்கப்படுத்துவதால், அது கிடைக்காத வீட்டின் மீது நாட்டம் குறைந்து ஏமாற்ற தோன்றும்.

சிறு வயதின் பாதிப்பும் ஏமாற்ற தூண்டும்

 
சில ஆண்கள், தங்களின் குழந்தை பருவத்தில் தங்கள் பெற்றோர்கள் ஏமாற்றுவதை கண்டு வளர்ந்திருக்கலாம். இது அவர்கள் ஆழ் மனதில் தவறு என்ற தெரிந்த போதிலும், எங்கோ ஒரு மூலையில் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். நாம் அனைவரும் நம் பெற்றோர்களிடம் இருந்து பலவற்றை கற்பதால், இந்த விஷயத்தில் உள்ள இடர்பாட்டை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

 நம் மூத்த சகோதர சகோதரிகள், அண்டை வீட்டார்கள் மற்றும் உடன் பழகும் நபர்கள் ஏமாற்றுவதை நாம் காணும் போது, அது நம்மையும் தொற்றிக் கொள்ளும். சில நேரம் விடலை பையனாக, சில ஆண்கள் பல பெண்களிடம் காதல் வயப்பட்டிருக்கலாம். அவர்கள் வேண்டுமென்றே அல்லது எதேர்ச்சையாக தங்களின் பழைய காதலிகளை மறுபடியும் நாடுவதுண்டு. ஆனால் சிலரோ தங்கள் கடந்த காலத்தை போலவே, இப்போதும் பல பெண்களிடம் உறவு வைத்திருப்பார்கள்.

நம் மனம் என்ன நினைக்கிறதோ, அதை கண்டிப்பாக அடையும் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, இவ்வகை ஆண்களை விரும்பும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.


ஏமாற்றும் மனைவியை ஏமாற்றும் ஆண்கள்

 
தங்களை ஏமாற்றும் மனைவியை பழி வாங்க பல பெண்களிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள். அவர்களின் மனைவிகள் மனம் திருந்தி உண்மையை ஒப்புக் கொண்ட போதிலும் கூட இவ்வகை தொடர்புகளை சில ஆண்கள் துண்டிப்பதில்லை.


விவாகரத்து பெறுவதற்கு மனைவியை ஏமாற்றும் ஆண்கள்

 
சில ஆண்கள் வேண்டுமென்றே ஒழுக்கக்கேடாக இருப்பார்கள். இதை ஒரு சாக்காக வைத்து விவாகரத்தை நாடுவார்கள். நம் சட்டமும் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு விவாகரத்தை பெற்று தருகிறது. வேண்டுமென்றே மனைவிக்கு தெரியும் படி ஏமாற்றி, அவளை எரிச்சலடைய செய்து தானாக விவாகரத்து கேட்க வைப்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். இவ்வகை ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இவ்வகை ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.


தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்று எண்ணும் போது ஆண்கள் ஏமாற்றுவார்கள்

 
தன் மனைவிக்கு தான் தேவையில்லை என்ற உணர்வு ஒரு ஆணுக்கு எப்போது எழுகிறதோ, அப்போதே அவளைப் புரிந்து கொண்டு தலையில் வைத்து தாங்கும் வேறு ஒரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆண்கள் விரும்புவார்கள்.

இந்த புது உறவு ஏற்பட்ட காரணத்தினால் தான், எதிர்பார்த்ததை புதிதாக வந்த பெண்ணிடம் இருந்து பெறுவார்கள். அவர்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட நாட்களாக கிடைக்காத இந்த கவனிப்பு திடீரென்று வேறு ஒரு பெண்ணின் மூலமாக கிடைப்பதால், அந்த புது உறவுடன் ஐக்கியமாகி விடுவார்கள்.

thanks:oi

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.
அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம்

பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

இப்போது அந்த நெல்லிக்காய் ஜூஸை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும். அவ்வாறு குடிப்பதால், உடலுக்கு என்ன நன்மையெல்லாம் கிடைக்கும் என்பதனைப் பார்ப்போமா!!!

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது.

உடல் எடை

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்

ஆஸ்துமா

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.


மலச்சிக்கல்

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

இரத்த சுத்திகரிப்பு

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீர் எரிச்சல்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.


உடல் குளிர்ச்சி

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்.

அதிகமான இரத்தப்போக்கு

மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.

அழகான முகம்

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

இரத்தசோகை

உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

இதய நோய்

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

சரும பிரச்சனைகள்

நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம்.

கண் பார்வை

நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.

முதுமைத் தோற்றம்

நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும்.

thanks:oi

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்!!!

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்!!!

 
ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.

உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது.

அதிலும் இந்த பருப்பை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கண் பார்வை சீராக இருக்கும். சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும். மற்ற பருப்புகளை போன்று இதிலும் கொழுப்பு தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஈரத்தன்மை கிடைக்கின்றது. இப்போது அந்த பிஸ்தாவை அதிகம் உட்கொண்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!


ஆரோக்கியமான இதயம்

பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது. இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.

நோயெதிர்ப்பு அழற்சி தன்மை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள், உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.

நீரிழிவு நோயை தடுக்கின்றது

பிஸ்தாவில் உள்ள 60% பாஸ்பரஸ், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ், புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கின்றது.

இரத்தத்திற்கு ஏற்றது

இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கின்றது.

நரம்பிற்கு நல்லது

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. அமைன்கள் என்பது நரம்பு மண்டலத்தில் செய்தியைக் கொண்டு செல்லும் கூறுகளாகும். இதன் மூலம் அமினோ அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு, உடலுக்கு வலிமை அதிகரிக்கின்றது. மேலும் நரம்பு மண்டலத்தைச் சுற்றி ஒருவித மயிலீனை உருவாக்கின்றது மற்றும் இவை செய்திகளை ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பு இழைகளுக்கு கொண்டு செல்ல உதவுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 அமினோ அமிலங்கள் பிஸ்தாவினால் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவிழி சீரழிவு/கருவிழி சிதைவு

கருவிழி சீரழிவு காரணமாக எதைவும் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்று பெரியவர்கள் கூறுவர். பொதுவாக இது வயதான காலத்தில் வரும் ஒரு வித நோயாகும். இதனால் அடுத்த மனிதர்களை இனம் காண முடியாத அளவிற்கு பாதிப்பு உண்டாகின்றது. மாகுலர் திசு செயலிழப்பின் விளைவாக இந்த சேதம் ஏற்படுகின்றது. லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன், இந்த பாதிப்பை எதிர்த்து போராடுகின்றது. இத்தகைய பொருட்கள் மிகப்பெரிய அளவில் பிஸ்தாவில் இருப்பதால், இவை கண்களுக்கு மிகவும் நல்லது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.

ஆரோக்கியமான மூளை

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.

ஆரோக்கியமான சுரப்பிகள்

மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் (WBC) சரியாக பணி புரிய செய்கின்றது. இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன.

ஆரோக்கியமான சருமம்

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால், இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது.

வயதான தோற்றத்தை போக்குகின்றது

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி, இளமையான தோற்றத்தை அளிக்கின்றது. இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப்பசை தான் காரணம்.

புற்றுநோய்

இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.

நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்

பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். அது இயற்கையாகவே சருமத்தை மிகவும் மென்மையாக்கி ஈரப்பதத்துடன் விளங்க செய்கின்றது. எனவே வழக்கமான மாய்ஸ்சரைசருக்கு பதிலாக, இந்த எண்ணையை எடுத்துக் கொள்ளலாம்.

சரும வறட்சி

சரும வறட்சியினால் ஏற்படும் முதுமைத் தோற்றத்தைத் தடுக்க வல்லது. அதிலும் இதில் இருக்கும் ஆற்றல்மிக்க ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பல்வேறு வகைகளில் உதவி புரிந்து, இளம் வயதிலேயே முதிர்ச்சியான தோற்றத்தைப் போக்குகின்றது.

வெள்ளையான சருமம்

பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க முடியும். ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.

வேனிற்கட்டிகள்

பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ உடலின் ஒரு கொழுப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இது தோல் புற்றுநோய் மற்றும் வேனிற் கட்டி சிரமங்களை குறைத்து, சூரியக் கதிர்களால் சருமத்திற்கு சேதம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஆரோக்கியமான பார்வை

பிஸ்தாவை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், ஆரோக்கியமான பார்வையைப் பெற முடியும்.

கூந்தல் வளர்ச்சி

பிஸ்தாவில் இருக்கும் கொழுப்புத்தன்மை கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கின்றது. இதன் மூலம் கூந்தல் வளர்ச்சி அடைகின்றது.

வலுவான கூந்தல்

பிஸ்தாவை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்களால் மயிர் கால்களை வலுப்படுத்தப்பட்டு, கூந்தல் உதிர்தல் தடைபடுகிறது.

கூந்தல் வெடிப்பு

பிஸ்தாவின் மூலம் தயாரிக்கப்படும் மாஸ்க்கை கூந்தலுக்கு போட்டால், கூந்தலுக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கின்றது. இதனால் கூந்தலுக்கு பிளவு ஏற்படாமல் நன்றாக வளரவும் உதவுகின்றது.


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும்

பயோட்டின் குறைபாடு கூந்தல் உதிர்தலுக்கு காரணமாக விளங்குகின்றது. இத்தகைய பயோட்டின் பிஸ்தாவில் கணிசமான அளவில் உள்ளதால், இதனை தினமும் சாப்பிட, கூந்தல் உதிர்தல் நின்று, கூந்தல் ஆரோக்கியமாக வளரும்
 
thanks:oi