Saturday 8 February 2014

உடல் நலத்தை கவனியுங்கள்

* மூளையின் வேகமான இயக்கத்திற்கு காலை உணவு மிக முக்கியம். அதனால் தினமும் சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்ளுங்கள்.
* தினமும் இருமுறையாவது உணவில் பழம் சேருங்கள். அழகுக்கும் அது ஏற்றது.
* இடைவேளை நேரங்களில் உணவு பதார்த்தங்களை கொரிப்பதற்கு பதில் உலர்ந்த முந்திரி, பாதாம் பருப்பு, அவல் போன்றவைகளை உண்ணவேண்டும்.
* உடல் எடை அதிகரிப்பதுபோல் தோன்றினால், உடனே இனிப்பு கலந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
* உணவுகளை வேகமாக அள்ளிக்கொட்டாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் அது உடலில் முறைப்படி சத்தாக மாறும்.
* சாலை ஓரத்தில் ஏதாவது ஒரு கடை அருகில் பத்து நிமிடங்கள் நின்று பாருங்கள். அவர்கள் சிப்ஸ், பக்கோடா, பரோட்டா போன்றவைகளை தயாரிப்பதை காணுங்கள்.
சுகாதாரமற்ற அவை உங்கள் உடலுக்குள் சென்று எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அப்போதே உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
* எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகளும்- சீஸ், கிரீம் போன்றவைகளும் உடலை குண்டாக்கும். முகப்பருவையும் தோற்றுவிக்கும்.
* ஓட்டல்கள் எங்கேயாவது சாப்பிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சாப்பிட்டு முடிந்த பின்பு ஒரு கப் அன்னாசி பழ ஜூஸ் பருகுங்கள். வயிற்று தொந்தரவு ஏற்படாது.
* தினமும் 2 அல்லது 3 நெல்லிக்காய்களை அவித்து, அந்த சாறை ரசத்தில் சேர்த்துவிட்டு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.

* முழு கோதுமையில் உருவாக்கும் பிரவுன் பிரட் அடிக்கடி சாப்பிடுங்கள்.

No comments:

Post a Comment