Tuesday, 22 March 2016

சமையல் சந்தேகங்கள்: சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸ் சேர்த்து சப்பாத்தி செய்யலாமா?

சீஸில் புரதச்சத்து நிரம்பி உள்ளதால், தாராளமாக உபயோகப்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய க்யூப் சீஸ்களை வாங்கி, மெல்லிய சீஸ் துருவியின் உதவியால் துருவி, மாவுடன் கலந்து சப்பாத்தி இடலாம். சமைக்கும் சீஸை (குக்கிங் சீஸ்) இதற்கு உபயோகப்படுத்த வேண்டாம். பதப்படுத்தப்பட்ட சீஸ் க்யூப்ஸ் உபயோகிக்கவும். ஓர் ஆழாக்கு மாவுக்கு 25 கிராம் (ஒரு க்யூப்) உபயோகப்படுத்தவும்.

ஊறுகாய் கெடாமல் இருக்க, என்ன சேர்க்க வேண்டும்?

ஊறுகாய் கெடாமலிருக்க, வினிகர் மற்றும் சோடியம்-பென்சோவேட் சேர்க்கலாம். தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால், மட்டும் இவ்வித பிரிசர்வேட்டிவ் உபயோகப்படுத்தவும். முடிந்தவரை வீட்டில் தயார் செய்த கடுகுப்பொடி, வெந்தயப்பொடி தூவி, சரியான பக்குவத்தில் தயார் செய்து, உலர்ந்த பாட்டிலில் வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
காலிஃபிளவர் வறுவலை முறுகலாகச் செய்வது எப்படி?

காலிஃபிளவரை பெரிய பூக்களாகப் பிரித்தெடுத்து புழுக்கள் இல்லாமல் நன்கு கழுவவும். பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்துவரும் போது காலிஃபிளவரைச் சேர்த்து உடனே அடுப்பை அணைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீரை வடிகட்டவும். 

ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், சிறிது பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியான தோசை மாவு பக்குவத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் உலர்ந்த ரொட்டித்தூளை வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை மைதா மாவுக் கலவையில் முக்கியெடுத்து, பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடான தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

தயிர் உறை ஊற்ற மண் கிண்ணத்தை உபயோகிக்கலாமா? இதை சுத்தம் செய்வது எப்படி?

தயிர் உறை ஊற்ற தாராளமாக மண் கிண்ணத்தை உபயோகிக்கலாம். வெயில் காலத்துக்கு மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கும். இந்தப் பாத்திரத்தை ‘லிக்விட்’ சோப் கொண்டு கழுவி உபயோகப்படுத்தவும்.

கடைகளில் கிடைக்கும் சோயா உருண்டைகள் மற்றும் சோயா துகள்களை எப்படி உபயோகப்படுத்துவது? எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம்?

சோயாவை அரைத்துப் பதப்படுத்தி சுலபமாக ஜீரணிக்கும். அளவுக்கு மாற்றப்பட்டு, உலர வைத்துச் செய்யப்படுவதே சோயா உருண்டைகள். உங்கள் சமையலில் காய்கறிகள் உபயோகப்படுத்திச் செய்யும் எந்தப் பொரியலோடும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பிரஷர் குக்கரில் சோயா உருண்டைகளைச் சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, வெயிட் வைத்த பிறகு ஒரே ஒரு விசில் வந்தவுடன் அணைத்து விடவும். ஆறிய பிறகு தண்ணீரை வடித்து உருண்டைகளைப் பிழிந்து விட்டு, மறுபடியும் ஒருமுறை குளிர்ந்த நீரில் போட்டுப் பிழிந்தெடுத்து உபயோகப்படுத்தினால், சோயாவின் வாடை வராது.

பொடியாகக் கிடைக்கும் சோயாவைப் பொரியலுக்கும் உருண்டைகளாகக் கிடைப்பதை பிரியாணி, மசாலா, குருமா, கட்லெட், குழம்பு சூப் வகைகள் போன்ற பலவற்றுக்கும் காய்கறிகளோடு சேர்த்து உபயோகப்படுத்தப் பழகவும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, இது சிறந்த புரதச்சத்து உள்ள உணவாக அமையும்.

பதப்படுத்திய அரிசி மாவு தயாரிப்பது எப்படி?

பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக வடிய விடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் ஆற விடவும். இதை மெஷினில் கொடுத்து நைசாகத் திரித்து ஒரு பெரிய தட்டில் பரவ விட்டு ஆற வைக்கவும். பிறகு சலித்து பாட்டிலில் சேர்த்து வைக்கவும். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இதுதான் பதப்படுத்திய அரிசி மாவு செய்யும்முறை.
இனிப்பு கலந்த குழிப்பணியாரம் தயாரிப்பது எப்படி? எவ்வளவு மாவுக்கு எவ்வளவு வெல்லம் சேர்க்க வேண்டும்? 

ஓர் ஆழாக்கு பச்சரிசிக்கு அரை ஆழாக்கு அவல் என்ற விகிதத்தில் எடுத்து தனித்தனியே கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்கும் போது இரண்டையும் ஒன்றாக அரைத்து, கடைசியில் ஓர் ஆழாக்கு துருவிய வெல்லம் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். பணியாரக் கல்லைச் சூடாக்கிக் குழிகளில் நெய் விட்டு மாவை ஊற்றி சுட்டெடுக்கவும். மாவு அரைத்த உடனேயே பணியாரம் சுடலாம்.

பேக்கிங் பவுடர் மற்றும் ஆப்ப சோடா இரண்டும் ஒன்றா? 

ஆப்ப சோடா என்பது சமையல் சோடா எனப்படும் சோடியம்-ைப-கார்பனேட் (sodium-bi-corbonate) பேக்கிங் பவுடர் என்பது இதே சோடியம்-பை-கார்பனேட்டுடன் சிறிது ஸ்டார்ச் மற்றும் டார்டாரிக் ஆஸிட் கலந்து தயாரிக்கப்படுவது. கேக் மற்றும் பிஸ்கட்டுகளில் பேக்கிங் பவுடர் சேர்க்கும் போது சிறிது சிறிதாக கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. இதனால் கேக் உப்பி பெரிதாக வரும்.

பலவகை சாதங்கள் செய்யும் போது கையால் பிசையலாமா? அப்படிக் கையால் பிசைந்தால் சாதம் கெட்டுப் போய்விடுமா?


சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் கைகள் பட்டால், பெரும்பாலும் கெட்டுப்போய்விடும். எனவே எதையுமே கைகள் படாமல் பயன்படுத்துவதே நல்லது.
மைக்ரோவேவ் அவனில் சமைக்கும் போது காய்கறிகளில் உப்பு எப்போது சேர்க்க வேண்டும்?

காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றில் சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன்) தண்ணீர் தெளித்து மூடி, வேகும் வரை சமைக்க வேண்டும். பொரியல் செய்யும் போது எண்ணெய், உப்பு அதற்கு வேண்டிய காரம் (தேங்காய், மிளகாய் விழுது) எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அவனில் வைக்கலாம்.

குழம்புக்குச் செய்யும்போது காய்கறி வெந்த பிறகு, வேகவைத்து மசித்த பருப்பு, புளிக்கரைசல், சாம்பார்பொடி எல்லாவற்றையும் சேர்க்கும் போது உப்பையும் சேர்க்கலாம். உப்பைக் குறைத்துச் சேர்க்க வேண்டும். அவனில் வேகவைக்கும்போது உப்பு, காரம் போன்றவை அதிகமாகி விடும். எனவே, கவனமாக சமைக்க வேண்டும்.
‘காஸ் அடுப்பில் சமைக்கும் போது சிம்மில் வைத்தால், காஸ் வீணாகி விடும்’ என்று என் வீட்டில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் சரியா?

‘சிம்மில்’ வைத்தாலும் காஸ் வீணாகும் என்பது தவறு. எந்தெந்த சமையலுக்கு எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

சிறிய பாத்திரங்கள், காப்பர் பாட்டம் பாத்திரங்கள், நான்-ஸ்டிக் பாத்திரங்கள் போன்றவற்றுக்கு முடிந்தவரை மிதமான தணலில் வைப்பது நலம். குக்கர் போன்றவற்றை உபயோகப்படுத்தும்போது முழு பிரஷர் வந்த பிறகு, குறைந்த தணலில் வைப்பது நலம். அதிக தணல்தான் காஸ் வீணாவதற்கு வழி வகுக்கும்.

மேலும் எந்தப் பாத்திரத்தை வைத்தாலும், பாத்திரத்தின் அடிபாகத்துக்கு உள்ளாகவே தணல் இருக்க வேண்டும். பக்கங்களில் மேலே வருவது போல வைக்கக் கூடாது. சமையல் பண்டங்களில், சரியான தண்ணீரும் அளவுக்கு தகுந்த பாத்திரமும் வைக்கும் போது கேஸ் மிச்சப்படும்.
ஒரு கிலோ சாதாரண சர்க்கரையைப் பொடி செய்தால் எவ்வளவு சர்க்கரைப் பொடி கிடைக்கும்? கேக் பிஸ்கட் செய்யும் போது சாதாரண சர்க்கரை அளவு எடுக்க வேண்டுமா? பொடித்த சர்க்கரை அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவும்.

பொதுவாக சர்க்கரையை ஆழாக்கில் அளந்தால் ஒரு கிலோவுக்கு 5 ஆழாக்கு வரும். அதாவது ஒரு ஆழாக்கு என்பது 200 கிராம் என்ற அளவு சரியாக இருக்கும். அதுவே பொடி செய்த சர்க்கரையானால் ஒரு ஆழாக்கு தலைதட்டி அளந்தால், 150 கிராம் அளவு வரும். கேக், பிஸ்கட் போன்றவைகளில் பொதுவாக பொடித்த சர்க்கரைதான் உபயோகப்படுத்தப்படுகிறது. வெயிட் போட்டு அளப்பதென்றால் எல்லோர் வீடுகளிலும் வெயிட் மிஷின் இருக்காது என்பதால், இந்தக் கணக்கை எடுத்துக் கொள்ளலாம்.
வடநாட்டில் ‘ஜல்ஜீரா’ என்ற பானம் கோடையில் தயாரிக்கப்படுகிறது. அதை வீட்டில் செய்வது எப்படி? 

சிறிது புளியை ஊற வைத்து, நீர்த்த புளிக் கரைசலாகக் கரைத்து வடிகட்டி 3 டம்ளர் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ருசிக்கேற்ப உப்பு 2 டீஸ்பூன், சர்க்கரை 3 டீஸ்பூன், அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய்த்தூள், துருவிய இஞ்சி, வறுத்துப்பொடி செய்த சீரகத்தூள் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, எலுமிச்சைத் துண்டுடன் மேலே ஐஸ்கட்டிகளைக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், சிறிது உலர்ந்த மாங்காய்த்தூளை (அம்சூர் பொடி) கலந்து கொள்ளலாம்.

மாங்காயை வைத்து செய்யப்படும் ஊறுகாய்களுக்குத்தான் கடுகு எண்ணெய் உபயோகிக்க வேண்டுமா?

எந்தவித ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் உபயோகப்படுத்தலாம். பச்சையாக ஊற்றாமல் சூடு செய்து ஆறவிட்டு, அதற்கு பிறகு ஊறுகாயில் உபயோகப்படுத்தலாம். வதக்கி செய்யும் (பச்சைமிளகாய் போன்றவை) ஊறுகாய் வகைகளுக்கும் உபயோகப்படுத்தலாம்.

அவல் வடாகமும், ஜவ்வரிசி வடாகமும் பொரிக்கும் போது சிவந்து விடுகிறது. பளிச்சென்று வெண்மையாக வருவதில்லை ஏன்?

பொதுவாக ஜவ்வரிசி வடாகத்தில் புளித்த மோர் சேர்ப்பதால் சிவக்கும். வடாகம் செய்ய ஜவ்வரிசியை, தயாரித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறியதும், இத்துடன் எலுமிச்சை ஜூஸ் எடுத்துச் சேர்த்துக் கலக்கவும். பிறகு காய வைத்துப் பொரித்தெடுத்தால் வடாகம் அவ்வளவாக சிவக்காது. அவல் வடாகம் போன்றவை எப்படியும் சிவக்கத்தான் செய்யும். 

Saturday, 25 April 2015

உங்கள் மொபைல் அடிக்கடி Hang ஆகுதா ? அப்போ இதை படிங்க..!

Someone using a Samsung Galaaxy smartphoneநாம் அனைவரும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் Android Osஐ நமது மொபைல்களில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் இதை நாம் அனைவரும் உபயோகிக்க காரணம் என்ன தெரியுமா கூகிள் நிறுவனம் இதை இலவசமாக வெளியிட்டதாலதான் பல மொபைல் நிறுவனங்கள் இதனை தன்னுடைய மாடல்களில் உட்படுத்தி மிகவும் குறைந்த விலையில் உலகச் சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தார்கள் மிகக்குறைந்த விலை என்பதால் மக்களிடத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அது எல்லாம் சரி என்றாவது இதனை நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? கூகிள் ஏன் இப்பேர்பட்ட இயங்கு தளத்தை (O S)ஐ இலவசமாக வெளியிட வேண்டும்?
பதில் மிகவும் சுலபம்
அதில் நிறைய தவறுகள் இருக்கும் ஒரே காரணத்தினால்தான் அவைகளில் முதன்மை வகிப்பது Mobile Hanging . . . . இதை சோதனை செய்து அதிலுள்ள அனைத்து தவறுகளையும் திருத்திய பின் இந்த Android Os இலவசமாக கிடைக்காது என்பதே யாரும் எதிர்ப்பார்த்திடாத உண்மை
அதற்காண சோதனையாளர்கள்தான் நாம் நம்மை வைத்து இவர்கள் இதனுடைய குறைகளை கண்டறிந்து அதை திறுத்தம் செய்வதற்காக பலபேர் கொண்ட குழுக்களை நியமித்திருக்கிறார்கள் அவர்கள் இதனுடைய குறைகளை திருத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஆனாலும் இதை உபயோகிக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிரார்கள் இந்த OS வேண்டாம் என்று விலகி இருந்த Nokiaவும் தற்பொழுது இதை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது ஏனென்றால் பல பல புதிய applicationகள் Android மொபைல்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றன
சரி நாம் வந்த விசயத்தை கவனிக்கலாம் நமது மொபைல்களில்Hang ஆவதை எப்படி சரி செய்வது ?
அதை முழுமையாக சரிசெய்ய முடியாது ஆனால் அதை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அதற்கான தீர்வுதான் இந்த பதிப்பு நாம் மொபைல் வாங்கிய புதிதில் அது Hang ஆவதில்லை அதில் நாம் பல Applicationகளை நிறுவிய பின்னர்தான் அதனுடைய வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாற்றம் ஏற்படுகிறது அப்படியென்றால் Applicationகளை எல்லாம் அழித்து விடவேண்டுமா என்று நினைக்க வேண்டாம் அதை அழிப்பதினால் உங்களது போனின் வேகம் கூடப்போவது இல்லை அதனுடைய உபயோகத்தை நிறுத்த வேண்டும்
அதாவது சில பேர் எனது மொபைலில் நிரைய இடம் இல்லை ஆதலால் Applicationகளை Memory cardல்தான் வைத்துள்ளேன் இருந்தாலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்ன செய்ய என கேட்பார்கள்
என்னதான் நாம் அனைத்து Applicationகளையும் மெமரி கார்டிற்க்கு Move செய்தாலும் அந்த Applicationனின் சில முக்கிய fileகள் மெமரி கார்டிற்க்கு மூவ் ஆவது இல்லை அது நமது போனிலேயே தங்கி விடுகிறது இதுதான் இந்த இடப்பற்றாக்குறைக்கு காரணம்
சில பேர் கேட்பீர்கள் அதாவது என்னுடைய போனில் நிரைய இடம் இருக்கிறது மெமரி கார்டிலும் அதிக இடம் இருக்கிறது ஆனாலும் மொபைல் Hang ஆகிறது அவர்கள் அனைவரும் இந்த படத்தை உற்று பாருங்கள் இது Settings>app >running பகுதியில் Ram மெமரியின் உபயோக அளவுஇதுதான் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது நமது போன் வேகமாக இயங்க போன் மெமரியோ external memoryயோ freeஆக இருப்பதால் கிடையாது முழுக்க முழுக்க Ram மெமரியின்அளவில் அதிக இடம் இருக்க வேண்டும்
நீங்கள் உங்களது போனில் Settings>app >running என்ற பகுதிக்கு செல்லுங்கள் அங்கு உங்கள் அனுமதி இல்லாமல் இயங்க கூடிய அனைத்து Applicationகளையும் Force Stop கொடுத்து நிறுத்தி விடுங்கள் நாம் அவ்வாறு செய்வதினால் மட்டுமே Ram memoryன் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும் ,இப்பொழுது போனின் ram memoryன் அளவை பாருங்கள் எவ்வளவு இடம் Freeயாக உள்ளது என்று சரி இதை செய்து முடித்ததும் அடுத்து நாம் செய்ய வேண்டியது அதில் குறிப்பிட்டிருக்கும் data அது அனைத்து Applicationகளிலும் நம் உபயோகத்தை பொருத்து இருக்கும் அதை ஒரு முறை clear செய்து விடுங்கள் பிறகு நமது போனில் இருக்கும் 3D மற்றும் ANIMATION WALLPAPERகளை நிறுத்தி விடுங்கள்.
HOME SCREEN இருக்கும் அதிக APPLICATION SHORTCUT களை அழித்து விடுங்கள் history, call logs, messages போன்றவற்றை அதிகம் மொபைலில் தேக்கி வைக்காதீர்கள் மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் கடைபிடிப்பதினால் உங்களது போன் வேகமாக இயங்குவதை உங்களால் உணர முடியும்.

தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்

10360204பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்:
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரை
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்

Thursday, 4 September 2014

ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர்.
சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளங்களேன்…
ஆல்கஹால்-
மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் ஒரு எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்துவிடுகின்றன. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைப்பட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் உடல் நோய் சரியாக வேண்டுமென்றால், இந்த ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள்-
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைத்து, மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படக்கூட வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து உணவுகள்-
எப்போது ஆன்டிபயாட்டிக்களை எடுத்துக் கொள்ளும் போதும், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சிவிடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
அமிலத் தன்மை உள்ள உணவுகள்-
அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி மற்றும் மற்ற உணவுகள், எப்படி ரோட்டில் சிக்னல் போட்டால், வண்டிகள் நகர முடியாமல் ஒரே இடத்தில் நிற்கிறதோ, அதேப்போல் இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்துவிடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
ஹெவி ஃபுட்-
மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவ்வாறு நன்கு சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சி கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்


எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற முதுமொழி, உடல் அமைப்புக்கு மட்டுமல்ல, நம் உணவருந்தும் பழக்கத்துக்காகவும் கூட சொல்லப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். வயிறு நிறைய, கிடைத்ததையெல்லாம் உண்டு வாழும் நமக்கு, ஏதாவது நோய் வந்து தொல்லை கொடுக்கும்போதுதான், உடல் நலத்தின் மீது கவனம் திரும்புகிறது. தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முழுவதுமாக செரிக்கப்படுவதும் இல்லை; செரித்த உணவு முழுமையாக உடலை விட்டு வெளியேறுவதும் இல்லை. சில சமயங்களில், இந்த கழிவுப் பொருட்கள் உடனடியாக வெளியேறாமல் உள்ளேயே தங்கிவிடும்.

இன்றைக்கு பலருக்கும் இதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகளுக்கான அஸ்திவாரம். இப்படிச் சேர்ந்துவிடும் கழிவுகள் நச்சுக்களாக மாறி, பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு, செய்யவேண்டிய வழிமுறைகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி.

''தேவை இல்லாத கழிவுகள் உடலில் சேரும்பட்சத்தில் அடிக்கடி நெஞ்செரிச்சல், ஏப்பத்தின்போது கெட்ட வாடை வீசுதல், மலம் கழித்தல் தொடர்பான பிரச்னைகள், உடல் எடை கூடுதல், வயிறு உப்புதல், சோர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் அடுக்கடுக்காய் தலைதூக்கும். இப்படிக் கழிவுகள் சேர்வதற்குக் காரணம், இன்றைய செரிக்க கடினமான உணவு முறைதான். தினமும் காலையில் சிறுநீர், மலம் எளிதாக வெளியேறினாலேயே, அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கழிவுகளை வெளியேற்ற என்ன சாப்பிடலாம்?

இரண்டு நாட்களுக்கு மேல் மலம் கழிக்காமல் இருந்தால், தேவையில்லாத காற்று வயிற்றை நிரப்பி தொப்பை வர வழிவகுக்கும். அதனால், தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடலிலுள்ள கழிவுகள் சுலபமாக வெளியேறும். மிதமான சூட்டில் டீ, காபி எடுத்துக்கொள்ளலாம்.

எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பச்சைப் பயறு, சோயாபீன்ஸ், பழச் சாறு, காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மோர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்ந்த கரைசலைக் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வெந்நீர் அருந்த வேண்டும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். காலை வேளையில் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கு வேகவைத்த காய்கறி நீர், முளைக்கட்டிய பயறு நீர் போன்றவற்றைக் கொடுப்பதால் சத்துக்கள் கிடைப்பதுடன், செரிக்காத உணவுகளை எளிதில் வெளியேற்றிவிடும். சர்க்கரை நோயாளிகளைத் தவிர, மற்றவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாம். சரியான வேளையில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். என்னென்ன உணவுகள் சாப்பிடக் கூடாது? சுலபத்தில் செரிக்காத கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், கீரை உணவுகள், தேங்காய் சேர்த்த உணவுகள் போன்றவற்றை இரவில் உண்பதை அறவே தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்த உணவுப்பொருட்கள், காரம் அதிகமான பண்டங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். தேங்காயில் செய்த பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்

நலமான வாழ்வுக்கு நான்கு வகை இலை!
நம் வீட்டுக் கொல்லையிலும் சுற்றுப்புறத்திலும் கிடைக்கும், எளிய இலைகளை வைத்தே பல நோய்களைக் குணமாக்கும் முறைகளை நம் முன்னோர்கள் தெரிந்துவைத்திருந்தனர். அப்படி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சில மூலிகை இலைகள், அதன் மருத்துவக் குணங்கள், பயன்கள் பற்றி சென்னை சித்த மருத்துவர் செல்வசண்முகம் விளக்கமாகக் கூறினார். மா, வேப்பிலை, வெற்றிலை, துளசி ஆகியவற்றின் பலன்களைச் சொன்ன டாக்டர், 'இவற்றை ஆரோக்கியமானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நோய்வாய்ப்பட்டவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துகொள்வதே நல்லது' என்று ஆலோசனையும் வழங்கினார்.

 மாவிலை
வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டுவதற்குக் காரணமே இதில் உள்ள மருத்துவக் குணங்கள்தான். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.
 இலைகளில் நீர் விட்டுக் காய்ச்சி, வடிகட்டி தேன் கலந்து, சிறிது சிறிதாகக் கொடுத்தால் வாந்தி வருவது குறையும்.
 கொழுந்து இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்து மென்று சாப்பிட்டால்தொண்டைக் கட்டு, குரல் கம்மல் நீங்கிவிடும்.
 இலைகளை எரித்து, அதன் சாம்பலுடன் பசு வெண்ணெய் சேர்த்துத் தீப்புண் மீது தடவினால், வலி உடனடியாகக் குறையும்.
 இலைக்காம்பை ஒடித்தால் வரும் பாலை பித்த வெடிப்பின் மீது தடவினால் சரியாகும்.
 மாவிலைச் சாறுடன் பொன்னாங்கண்ணிச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்து வந்தால், இளநரை, முடி கொட்டுதல் பிரச்னைகள் தீரும்.
 பழுப்பு நிறமுள்ள கொழுந்துகளை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டுக்கு முன் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும்.

 வேப்பிலை
பல்வேறு வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்து. வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இயற்கைக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், பூச்சிக்கொல்லி மருந்தாகவும் பயன்படுகிறது.
 வேப்பந்துளிருடன் ஓமம், சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் காமாலை நோய் மற்றும் மாலைக்கண் நோய் தீரும்.
 வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து, நீர் விட்டு அரைத்து உடம்பின் மேல் தேய்த்தால் அம்மை, வியர்க்குரு, கரப்பான், சொரி, சிரங்கு மற்றும் முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
 வேப்பிலைச் சாறு, எலுமிச்சைச் சாறு, தேன் மூன்றையும் கலந்து இரவில் குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். * வேப்பிலை, மிளகு இரண்டையும் 8:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு பெரியவர்களுக்கும், சுண்டைக்காய் அளவு சிறியவர்களுக்கும் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
 வேப்பங்கொழுந்து, மஞ்சள், தாளகம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இந்த மூன்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை, பெண்களுக்கு தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது பற்றுப்போடலாம். மூன்று மணி நேரம் கழித்து கழுவ, முடிகள் அகன்றுவிடும்.

 வெற்றிலை
விழாக்களிலும், தமிழர் விருந்துகளிலும் தவறாது இடம்பெறும் இலை. இதில் இரும்புச் சத்து, தாது உப்புகள் அதிகம்.
 வெற்றிலை, இஞ்சி, தேன் மூன்றையும் வெறும் வாயில் மென்று சாப்பிட்டால், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்னைகள் சரியாகும்.
 இலையை மிதமாக சூடு செய்து சாறு எடுத்து, இந்தச் சாறை மூக்கில் சில சொட்டுக்கள் விட்டால், தலைவலி, தலைபாரம், தும்மல் சரியாகும்.
 வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, பூச்சி, தேள் கொட்டிய இடத்தின் மேல் தடவினால், வலி உடனடியாக நீங்கும்.
 வெற்றிலை, அருகம்புல், மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால், விஷக்கடிகள், ஃபுட் பாய்சன் போன்றவை சரியாகும்.
 வெற்றிலை, ஜாதிக்காய், கிராம்பு மூன்றையும் மென்று சாப்பிட்டால், இல்லற இன்பம் கூடும்.
 இலையை எரித்துச் சாம்பலுடன் பசுவெண்ணெய் கலந்து நாவில் தடவினால், உச்சரிப்புக் கோளாறுகள் நீங்கி, பேச்சு தெளிவாகும்.
 காலை வேளையில், வெற்றிலையுடன் பாக்கை அதிகமாகவும், மதியம் சுண்ணாம்பு அதிகமாகவும், மாலையில் வெற்றிலை அதிகமாகவும் சேர்த்துவந்தால், உடல் இயக்கம் சீராக இருக்கும்.
 துளசி:
எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து மிக்க ஒர் இலை. பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிதும் உதவும். காசநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நுரையீரல் மற்றும் மூச்சுக்குழலையும் பாதுகாக்கும். அதே நேரத்தில் மனரீதியான நோய்க்கும் பயன்படக்கூடியது.
 துளசியை இளஞ்சூட்டில் அல்லது நீராவியில் காட்டினாலே சாறு கிடைக்கும். இந்தச் சாறில் 10 துளி எடுத்து, ஒரு அரிசி அளவு மிளகு சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சளி விரைவில் குணமாகும்.
 துளசி, மிளகு, வேப்பிலை கஷாயமாக்கிக் கொடுத்தால், சளி, உடல் வலி விரைவில் குணமாகும்.
 200 மில்லி பசும் பாலில், 10 துளசி இலைகளைப் போட்டு வடிகட்டி எடுத்தால், பாலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி தூய்மையான பால் கிடைக்கும்.
 வெந்நீரில் இலைகளைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, தலைவலி சரியாகும்.
 துளசி இலை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறையாமல், உற்பத்தி மட்டும் தற்காலிகமாகத் தடைபடும். அந்த காலத்தில் ஆண்கள் பயன்படுத்தி வந்த இயற்கைக் கருத்தடை முறையாகவும் இது இருந்தது.
 பெண்களுக்கு பிரசவ காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை 30 மில்லி துளசி சாறைக் கொடுத்தால், வலி குறைந்து கருப்பையின் இயக்கம் அதிகமாகும்.
 துளசியுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்துத் தடவும்போது, தோல் புண், பூச்சிக்கடிக் காயங்கள் சரியாகும்.
அருகம்புல்லின் மகத்துவம் :-
அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால்கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்ந்ததைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

* அருகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

* தீராத வயிற்றுவலிக்கு அருகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

* அருகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

* வெட்டுக்காயம் ஏற்பட்டால் உடனே அருகம்புல்லுடன் அரிவாள் மூக்கு பச்சிலையை சேர்த்து அரைத்து வைத்துக்கட்ட ரத்தம் வடிவது உடனே நிற்பதுடன், காயமும் வெகுவிரைவில் ஆறிவிடும். அருகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.

* ஒரு பிடி அருகம்புல், மிளகு-10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும். அருகம்புல் வேர், ஆவாரம்பூ இவை இரண்டையும் நிழலில் உலர்த்தி இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து, அதை நெய்யுடன் கலந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

* அருகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

* அருகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும். சிறுநீர்ப்பை பலப்படும்.

* அருகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

* அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

* அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும். அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் வெல்லம் தேவையான அளவு சேர்த்து பருகிவர சிறு நீரக நோய்கள் குணமாகுவதுடன், உடலும், முகமும் அழகு பெறும்.

* நரம்பு தளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் நீங்கும். மலச்சிக்கல், தூக்கமின்மை குணமாகும். வயிற்றின் அமிலத் தன்மை குறையும். உடலில் தேங்கியுள்ள கழிவுகள், விஷத்தன்மை வெளியேறும். நீரிழிவு, தொழுநோய், கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவை குணமாகும்.

* பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும். உடலுக்கு அழகும், வசீகரமும் தரும்.

உடல் வெப்பம் தணியும். இந்த பலன்களை நீங்களும் பெறவேண்டுமா? தினமும் டீ, காபிக்கு பதிலாக அருகம்புல்சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள்.

ஒரே ஒரு “நிபந்தனை” தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.