Saturday, 8 February 2014

எப்படி சாப்பிடலாம்...!

*நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

*எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

*தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

*சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

*அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

*பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

*பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

*ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

*இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

*சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

*சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

*சாப்பிடும் முன்பும் பின்பும் உணவைக் கொடுத்த இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள்

முடக்கத்தான் கீரை சூப்

முடக்கத்தான் கீரை சூப் 

தேவையான பொருட்கள் :

முடக்கத்தான் இலை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 1
கேரட் - 1
பீன்ஸ் - 5
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன் 
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 2

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

• முடக்கத்தான் இலை நன்றாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவிடவும்.

• இதில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்து கொதிக்கவிட்டு மசிக்கவும். 

• கடைசியாக இரண்டு டீஸ்பூன் சோள மாவு சேர்த்து இறக்கவும்..  

• 48 நாட்கள் தொடர்ந்து இந்த சூப்பை குடித்து வந்தால், சர்க்கரை நோய், வாதம், வாயுத் தொல்லை, வயிற்றுப் புண், முடக்குவாதம், மூட்டுவலி, பக்கவாதம் குணமடையும்.

சரும அழகை காக்கும் வேப்பிலை

வேப்ப மரத்தை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் என்று சொல்லலாம். இந்த வேப்ப மரம் நமக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம். இந்த வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.

அதிலும் இந்த வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். வேப்பிலை எப்படியெல்லாம் அழகுப் பொருளாகப் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

* வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

* ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

* வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

* வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

* வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

அதுமட்டுமின்றி, இது பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

சரும பொலிவை காக்கும் முல்தானிமட்டி

முல்தானிமட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானிமட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. முல்தானிமட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும்.

இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்குகிறது. முல்தானிமட்டி அதிக அளவில் அடங்கியுள்ள ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகளை பெருமளவில் பலரும் பயன்படுத்துகின்றனர்.

முல்தானிமட்டியானது, மாவு போல பிசையப்பட்டு நேரடியாக முகத்தில் தடவலாம். இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை.

முல்தானிமட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இது தோலின் நிறத்தையும், அழகையும் கூட்டுகிறது.

முல்தானிமட்டி முகத்தில் தேய்த்து கழுவும் ஸ்கரப்பராகவும் பயன்படுகிறது. இதை முகத்தில் தேய்க்கும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் வெண் புள்ளிகளையும் நீக்குகிறது. சருமத்தின் தன்மையையும் பொலிவையும் மெருகூட்ட, முல்தானிமெட்டியை எப்போதும் பயன்படுத்தலாம்.

முல்தானிமட்டி தோலில் உள்ள பழுப்பு நிறத்தை போக்கி, நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் முல்தானிமட்டியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இது ஏற்படும். பழுப்பு நிறத்தை மாற்றும்.

சோப்புகள் மற்றும் முகம் கழுவ பயன்படும் க்ரீம்கள் கடைகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இவை அனைத்திலுமே முல்தானிமட்டியே முக்கிய உட்பொருளாக உள்ளது.

முல்தானிமட்டி நிறமிகளை குறைத்து தோலை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அழற்சி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க உதவுகிறது முல்தானிமட்டி

உடலுக்கு வலிமை தரும் ஹெர்பல் சூப்

தேவையான பொருட்கள் :

சுக்கு, மிளகு, திப்பிலி -2 டீஸ்பூன்

எலுமிச்சை பழம் -1/2 மூடி

இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்

வேக வைத்த பருப்பு -1/2 கப்

மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

அரிசி மாவு -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித் தழை- சிறிதளவு

செய்முறை :

• வேக வைத்த பருப்பை மசித்துக் கொள்ளுங்கள்.

• அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான நீர் விட்டுக் கொதிக்க வையுங்கள்.

• கொதித்ததும் நீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள்.

• இந்த நீரை மீண்டும் கொதிக்க விட்டு அதில் அரிசி மாவை நீரில் கரைத்து ஊற்றுங்கள்.

• ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு பிழிந்து கொத்தமல்லித் தழை தூவிப் பருகவும்.

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வாய்ப்பு குறையும்: ஆய்வாளர்கள் தகவல்

டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின்(தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்.

உயர்ரக புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களுக்கு பால் பொருட்கள் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் கொழுப்பு சத்தும் அதில் நிறைவாக இருப்பதால் உணவு விதிமுறைகள் மக்களை இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றன.

ஆயினும் குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் 85 சதவிகித அளவு தயாரிக்கப்படும் தயிரினை ஆய்வு செய்யும்போது நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது.

இந்த சோதனை தனியாரிடத்தில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை முடிவுகள் சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன.

மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் நமக்கு அதிகம் கிடைக்கும்போது தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நமது உடலுக்கு நன்மை தரும் என்று தெரிவிக்கும் இத்தகைய ஆய்வுகளும் நமது சுகாதாரத்திற்கு உறுதியளிக்ககூடிய ஒன்றாகும் என்று டாக்டர் பரோஹி கூறுகின்றார்.

உடல் நலத்தை கவனியுங்கள்

* மூளையின் வேகமான இயக்கத்திற்கு காலை உணவு மிக முக்கியம். அதனால் தினமும் சரியான நேரத்தில் காலை உணவை உட்கொள்ளுங்கள்.
* தினமும் இருமுறையாவது உணவில் பழம் சேருங்கள். அழகுக்கும் அது ஏற்றது.
* இடைவேளை நேரங்களில் உணவு பதார்த்தங்களை கொரிப்பதற்கு பதில் உலர்ந்த முந்திரி, பாதாம் பருப்பு, அவல் போன்றவைகளை உண்ணவேண்டும்.
* உடல் எடை அதிகரிப்பதுபோல் தோன்றினால், உடனே இனிப்பு கலந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.
* உணவுகளை வேகமாக அள்ளிக்கொட்டாதீர்கள். நிதானமாக மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் அது உடலில் முறைப்படி சத்தாக மாறும்.
* சாலை ஓரத்தில் ஏதாவது ஒரு கடை அருகில் பத்து நிமிடங்கள் நின்று பாருங்கள். அவர்கள் சிப்ஸ், பக்கோடா, பரோட்டா போன்றவைகளை தயாரிப்பதை காணுங்கள்.
சுகாதாரமற்ற அவை உங்கள் உடலுக்குள் சென்று எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அப்போதே உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.
* எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகளும்- சீஸ், கிரீம் போன்றவைகளும் உடலை குண்டாக்கும். முகப்பருவையும் தோற்றுவிக்கும்.
* ஓட்டல்கள் எங்கேயாவது சாப்பிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சாப்பிட்டு முடிந்த பின்பு ஒரு கப் அன்னாசி பழ ஜூஸ் பருகுங்கள். வயிற்று தொந்தரவு ஏற்படாது.
* தினமும் 2 அல்லது 3 நெல்லிக்காய்களை அவித்து, அந்த சாறை ரசத்தில் சேர்த்துவிட்டு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.

* முழு கோதுமையில் உருவாக்கும் பிரவுன் பிரட் அடிக்கடி சாப்பிடுங்கள்.