Friday, 11 July 2014

மத்திய நிதிநிலை அறிக்கை 2014-15 - முக்கிய அம்சங்கள்

புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ள மத்திய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2014 ஜூலை 10ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் இங்கே.
* தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு
* சேமிப்புக்கான 80 சி பிரிவில் வரிச் சலுகை, ரூ.1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்வு
* வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை, ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்வு
* சேமிப்பை அதிகரிக்கும் வகையில் மீண்டும் கிசான் விகாஸ் சேமிப்பு பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
----------
* காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு.
* எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரிப்பு.
* காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும்.
* சிகரெட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாக உயர்வு.
* பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் தான வரி 16 விழுக்கடாக உயர்வு.
---------------
* கம்ப்யூட்டர், சோப்பு, சிறிய எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி. விலை குறையும்.
* சோப்பு தயாரிப்பிற்கான உற்பத்தி வரி குறைப்படும்.
* பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி 5 விழுக்காட்டிலிருந்து. 2.5 விழுக்காடாக குறைப்பு.
* வைரம், நவரத்தினக் கற்கள் விலை குறையும்.
* தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு.
---------------------
* காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களுக்கு வரி குறைப்பு.
* எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரிப்பு.
* காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 விழுக்காடாக குறைக்கப்படும்.
* சிகரெட் மீதான வரி 12 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாக உயர்வு.
* பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களின் தான வரி 16 விழுக்கடாக உயர்வு.
---------------
* கம்ப்யூட்டர், சோப்பு, சிறிய எல்.இ.டி., எல்.சி.டி. டி.வி. விலை குறையும்.

* சோப்பு தயாரிப்பிற்கான உற்பத்தி வரி குறைப்படும்.

* பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கான சுங்க வரி 5 விழுக்காட்டிலிருந்து. 2.5 விழுக்காடாக குறைப்பு.

* வைரம், நவரத்தினக் கற்கள் விலை குறையும்.

* தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு.

---------------------

* 25 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் முதலீட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்படும்.

* கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சங்க வரி ரத்து.

* புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.

* நேரடி வரிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

* கல்வி வரியில் மாற்றம் இல்லை.



25 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யும் முதலீட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்படும்.

* கொழுப்பு அமிலம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு சங்க வரி ரத்து.

* புதிய மின் திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது.

* நேரடி வரிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

* கல்வி வரியில் மாற்றம் இல்லை.

------------------

* குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவ ரூ.200 ஒதுக்கீடு.

* நவாமி கங்கா என்ற கங்கையை தூய்மைப்படுத்தும் புதிய திட்டத்திற்கு ரூ.2,307 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின் சக்தி திட்டம் தொடங்கு ரூ.500 நிதி ஒதுக்கீடு.

* தூத்துக்குடியில் வெளிப்புறத் துறைமுகம் அமைக்கப்படும்.

* சென்னை - பெங்களூரு தொழிற்பாதை திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

----------

* இளைஞர்களின் திறமையை வெளிக்கொணர ஸ்கில் இந்தியா என்ற பெயரில் புதிய திட்டம்.

* நதிகளை இணைக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

* கங்கை நதியை சுத்தப்படுத்த அயல் நாடு வாழ் இந்தியர் நிதித் திட்டம் உருவாக்கப்படும்.

* அலகாபாத்தில் இருந்து ஹல்டியா வரை கங்கையை இணைக்க ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.

* அசாம், ஜார்க்கண்டில் புதிய விவசாய ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

------------



* சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 விழுக்காடு வரி உயர்வு.

* அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.

* டி.வி.களில் பயன்படுத்தப்படும் பிக்சர் டியூப்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு.

* வரி செலுத்துவோர் நலனிற்காக 60 புதிய சேவை மையங்கள் அமைக்கப்படும்.

* பெண் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்கு புதிய சேமிப்புத் திட்டம்.

------------

* பெங்களூரு, ஃபரிதாபாத்தில் உயிரி தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படும்.

* ஹைதராபாத், சிலிகுரி உள்ளிட்ட 6 இடங்களில் கடன் வசூல் மையங்கள் அமைக்கப்படும்.

* உத்தரகாண்டில் தேசிய இமாலய கல்வி மையம் அமைக்கப்படும்.

* காஷ்மீரில் உள், வெளி விளையாட்டு அரங்குகள் உலகத் தரத்தில் உருவாக்கப்படும்.

* தேசிய விளையாட்டு ஆணையம் விரைவில் உருவாக்கப்படும்.

------------

* விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க ரூ.100 கோடி.

* காவல் துறை சீரமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி.

* புதுச்சேரிக்கு பேரிடர் நிதி உதவியாக ரூ.188 கோடி ஒதுக்கீடு.

* ஆசிய, காமன்வெல்த் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

* ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகம் செய்யப்படும்.

* உரிமை கோரப்படாத பி.எஃப். பணத்தை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்படும்.

* மூத்த குடிமக்களின் கோரப்படாத பி.எஃப்., தபால், வங்கி கணக்குகளை முறைப்படுத்தக் குழு அமைக்கப்படும்.

* வங்கி அல்லாத சேமிப்பாக ‌கிசான் விகாஸ் பத்திரங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

* பொதுப் போ‌க்குவர‌த்‌தி‌ல் பய‌ணி‌க்கு‌ம் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

* புதிதாக 5 ஐஐஎம், ஐஐடி, கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

* சென்னை மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம், காச நோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும்.

* கல்விக் கடன் விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.

* அனைத்து அரசுப் பெண்கள் பள்ளியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரப்படும்.

* குத்துச்சண்டை, வில் வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி தர புதிய பயிற்சி மையங்கள்.

----------------

* லக்னோ, அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.100 கோடி.

* நாட்டில் புதிதாக 7 நவீன தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.

* தங்க நாற்கர பாதையில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்து தர ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகர கட்டுமான வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்படும்.

----------------

* டெல்லியைப் போன்று சென்னையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை விரிவுபடுத்தப்படும்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும்.

* 2019 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

* அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அடுத்த 6 மாதங்களில் 9 விமான நிலையங்களில் மின்னணு விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். புதிய விமான நிலையங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

* 2018 ஆம் ஆண்டிற்குள் வங்கிகளுக்கு ரூ.2.4 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும். வங்கிகளுக்கு தன்னாட்சி அளித்து கூடுதல் பொறுப்புடைமை ஆக்க பரிசீலனை.

--------------------

* வருங்கால வைப்பு நிதி கணினி மயமாக்கப்படும்.

* அரசின் அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கப்படும்.

* மென்பொருள் தொடர்பான சிறு தொழில் தொடங்குவோர் ஊக்குவிக்கப்படுவர்.

* பிராட்பேண்ட் மூலம் கிராமப்புறங்கள் இணைக்கப்படும்.

* மின்னணு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

--------------------

* நடப்பாண்டில் புதிதாக 16 துறைமுகங்கள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* கூடுதலாக 15,000 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய் அமைக்கப்படும்.

* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* உயர் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் திட்டப் பணிகளுக்கு ரூ.100 கோடி.

* வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்பிற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு.

-----------------


* பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

* கா‌ப்‌பீ‌ட‌்டு‌த் துறை‌யிலு‌ம் அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு 49 ‌விழு‌க்காடாக அ‌திக‌ரி‌க்க‌ப்படு‌ம்.

* ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் ‌அ‌ந்‌நிய நேரடி முத‌லீடு மூல‌ம் ‌நி‌தி ஆதார‌ம் ‌திர‌ட்டட‌ப்படு‌ம்.

* முதலீட்டளார்களுக்கு சாதகமான வரி கொள்கைகள் உருவாக்கப்படும்.

* தொழில் துறையுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தத் தனிக் குழு அமைக்கப்படும்.

-------------------

* வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.33,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய வீட்டு வசதித் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறு தொழில் முனைவோரின் திட்டங்களை ஊக்குவிக்க ரூ.100 கோடி.

---------------------

* 100 நகரங்களை மேம்படுத்த ரூ.7,060 கோடி ஒதுக்கீடு.

* பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி.

* அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரம் மின்சாரம் ஏற்படுத்துவதே இலக்கு.

* தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.50,047 கோடி ஒதுக்கீடு.

* மின் விநியோகத் திட்டங்களுக்கு ரூ.500 கோடி.

-------------------


* அனைத்துப் பணப் பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு.

* அயல் நாட்டு நிதி உதவியை வரையறைப்படுத்த புதிய வரித் திட்டம்.

* அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக் கணக்கு துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரு குடும்பத்திற்கு இரண்டு வங்கக் கணக்குகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இராணுவ வீரர்களுக்கு பதவிக்கு ஏற்ற வகையில் ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம்.

-----------------

* பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2.29 லட்சம் கோடி. பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு சிறப்பு சேமிப்புத் திட்டம்.

* சமுதாய வானொலி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுரங்கத் தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டம் திருத்தப்படும்.

* மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.

-------------------

* விவசாயத்தில் 4 விழுக்காடு வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* விவசாய விளை பொருட்களைப் பாதுகாக்க ரூ.5,000 கோடியில கிடங்குகள் அமைக்கப்படும்.

* ஆந்திரா, ராஜஸ்தானில் புதிய வேளாண்மை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

* நகர்ப்புறங்களில் விவசாயிகளே சந்தைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும்.

* நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடன் உதவி திட்டம்.

* தெலங்கானா, அரியானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

* அனைத்து விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* கிடங்குகளின் திறனை அதிகரிக்க ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* நிலங்களுக்கு ஏற்ற பயிர்களை தேர்வு செய்யும் மண் பரிசோதனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆராய புதிய நிறுவனம்.

No comments:

Post a Comment