Saturday, 29 March 2014

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள்!!!

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் அதிகம் வாந்தி எடுப்பதால், பெண்களால் சரியாக உணவுகளை சாப்பிட பிடிக்காது.
மேலும் சிலருக்கு புளிப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருப்பதால், இரத்தமானது சுண்ட ஆரம்பிக்கும். ஆகவே இக்காலத்தில் பெண்களின் உடலில் இரத்தத்தின் அளவானது குறைய ஆரம்பித்து, இரத்த சோகையானது வர ஆரம்பிக்கும்.
இப்படி கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வந்தால், அது குழந்தைகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இங்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வருவதைத் தடுக்கும் உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்கும்.
பேரிச்சம் பழம் கர்ப்பிணிகள் தினமும் இரண்டு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியானது அதிகரித்து, இரத்தத்தின் அளவானது அதிகரிக்கும்.
ஓட்ஸ் கர்ப்பிணிகள் ஓட்ஸ் சாப்பிட்டால், அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை அதிகரிக்காமல் இருப்பதுடன், இரத்த சோகை வராமலும் தடுக்கும்.
உலர் திராட்சை உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
ப்ராக்கோலி கர்ப்பிணிகளுக்கு ப்ராக்கோலி ஒரு சிறப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இதனால் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
வாழைப்பழம் இரத்த சோகை இருப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
மாதுளை இரத்த சோகையை தடுப்பதில் மாதுளையை விட சிறந்த பொருள் வேறு ஏதும் இல்லை. ஏனெனில் மாதுளையில் மற்ற பழங்களை விட அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கிறது. ஆகவே இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு மாதுளையை கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும்.

அதிகமா வியர்குதா? அதை தடுக்க இதோ சில வழிகள்!!!

எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியர்வையினால் ஆடைகளின் மேல் பல ஓவியங்கள் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இதனைப் பார்க்கும் போதே, நமக்கு வெட்கமாக இருக்கும். இத்தகைய வியர்வை பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என்று பலர் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில இயற்கை நிவாரணிகளைக் கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது அக்குளில் தடவி படுத்தால், அதிகமாக அக்குள் வியர்ப்பதைத் தடுக்கலாம்.
இல்லாவிட்டால், தினமும் காலையில் குளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் அக்குளில் தடவி, பின் குளித்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம். இருப்பினும் இரவில் பயன்படுத்தினால் தான் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அக்குள் வியர்க்காமல் வறட்சியுடன் இருப்பதை நன்கு காணலாம்.
கார்ன் ஸ்டார்ச் அக்குளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிது கார்ன் ஸ்டார்ச் தடவினால், அது அக்குளில் உள்ள அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சி, வியர்வை துர்நாற்றம் வருவதைத் தடுக்கும்.
குறிப்பாக இப்படி செய்யும் போது அடர் நிறம் கொண்ட ஆடைகளை உடுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது நன்கு வெளிப்படும்.
எலுமிச்சை எலமிச்சைக்கு அதிகமாக வியர்ப்பதை தடுக்கும் சக்தி உள்ளது. அதற்கு எலுமிச்சை துண்டை அக்குளில் தடவி தேய்த்து, கழுவ வேண்டும். இதனால் வியர்ப்பது குறைவதுடன், அக்குள் கருமையும் நீங்கும்.
காட்டன் ஆடைகள் காட்டன் ஆடைகளை உடுத்தினால், அது அதிகப்படியன வியர்வையை உறிஞ்சி, அக்குளில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
காரமான உணவுகளைத் தவிர்க்கவும் அதிகமாக வியர்ப்பதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உண்பது தான. ஆகவே காரமான உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

பெண்களே! உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா? அது உங்களின் அழகையே கெடுக்கிறதா? இதனைப் போக்க அழகு நிலையங்களுக்கு செல்ல சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.
ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.
சருமத்தில் உள்ள மருக்களை போக்க உதவும் இயற்கை பொருட்கள்!!!
அதிலும் கோடை ஆரம்பித்துவிட்டது. பலருக்கு வெளியே செல்லவே மிகுந்த கடுப்பாக இருக்கும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு எப்படி உதட்டின் மேலே வளரும் தேவையற்ற முடியை போக்குவது என்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.
சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்...
அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். இதனால் எந்த பக்கவிளைவும் இல்லாமல், உதட்டின் மேலே உள்ள முடியைப் போக்கலாம். சரி, அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!
மஞ்சள் தூள் பெண்களின் உதடுகளுக்கு மேல் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதில் மஞ்சள் சிறந்த பொருளாக உள்ளது.
ஆகவே மஞ்சள் தூளை பாலில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, உலர வைத்து, பின் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வந்தால், உதடுகளுக்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சி நாளடைவில் நின்றுவிடும்.
எலுமிச்சை தேவையற்ற முடியை எலுமிச்சையைப் பயன்படுத்திக் கூட நீக்கலாம். அதற்கு எலுமிச்சை சாற்றில் சர்க்கரை மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதனை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முட்டை முட்டையின் வெள்ளைக் கருவில் சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி உலர வைத்து உரித்து எடுக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, நாளடைவில் முடியின் வளர்ச்சி நின்றுவிடும்.
கடலை மவு கடலை மாவில், பால் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ம் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்தால், உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியானது குறைந்துவிடும். அதிலும் இதனை வாரத்திற்கு 2 முறையாவது செய்து வர வேண்டும்.
சர்க்கரை ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு கிளறி, பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி 1 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைத்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, அதன் மேல் ஒரு காட்டன் துணியை வைத்து, மேலும் கீழும் தேய்த்து, பின் அதனை கீழிருந்து மேலாக உடனே இழுக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலை நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவு


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும், மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் எனறு தேர்தல் ஆணையர் சமபத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரபிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.1,000 கோடி செலவாகும் என்றும் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் வேட்பாளர் செலவு, பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ரூ.54 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரைக்குடி சிக்கன் (karaikudi chicken)

தேவையான பொருட்கள்:
சிக்கன் 
வெங்காயம் 
தக்காளி 
பச்சைமிளகாய் 
இஞ்சி 
கருவேப்பிலை 
கொத்தமல்லிதழை
அரைக்க:
பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் -6 
மிளகு -2ஸ்பூன் 
சோம்பு 
காய்ந்தமிளகாய் -10 
கொத்தமல்லிவிதை -2ஸ்பூன் 
சீரகம் 
தேங்காய் 
உப்பு 
எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் காய்ந்தமிளகாய் ,கொத்தமல்லிவிதை ,சீரகம்,மிளகு, பட்டை,கிராம்பு, ஏலக்காய் ,கருவேப்பிலை சேர்த்து வறுத்து அதனுடன் தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும். 
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும். 
மற்றொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு,கருவேப்பிலை தலித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 
அதனுடன் சிக்கன் சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு,சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும் . 
சிக்கன் நன்றாக வெந்ததும் அதனுடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லிதழை, கருவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான காரைக்குடி சிக்கன் ரெடி .இதை இட்லி,மெதுமெது தோசை ,நெய் சோறுடன் சாப்பிட அருமையாக இருக்கும் .

கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான காரணங்கள்!!!

திருமணமான தம்பதியர்கள் எவ்வளவு தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருசில சண்டைகள் அன்றாடம் வரத் தான் செய்கிறது. இதற்காக அவர்களுக்குள் காதலே இல்லை என்று அர்த்தமில்லை. நாள் முழுவதும் அன்பாக நடந்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது என்று அர்த்தமில்லை.
சிறுசிறு சண்டைகளும் இருந்தால் தான், வாழ்க்கையானது சுவாரஸ்யமாக செல்லும். அப்படி திருமணமான தம்பதியர்கள் அன்றாடம் ஒருசில விஷயங்களுக்காக சண்டைகளைப் போடுவார்கள்.

அந்த சண்டைகள் அனைத்தும் சாதாரணமானவை மட்டுமல்லாமல், அதுவே அவர்கள் ஆரோக்கியமான திருமண வாழ்க்கை மேற்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்.
மேலும் தம்பதியர்கள் போடும் சண்டைகள் அனைத்தும் எதிர்பார்ப்புக்கள், அதிகப்படியான அன்பு மற்றும் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களால் தான் வருகிறது.

இங்கு கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவதற்கான சில பொதுவான விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றில் நீங்கள் எதற்காக அன்றாடம் சண்டை போடுவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மாமியார், நாத்தனார்

வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு முதன்மையான காரணம் மாமியார். இந்த மாமியார் பிரச்சனையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சந்திக்கின்றனர். இந்த காரணம் தான் பெரும்பாலான வீடுகளில் சண்டை வருவதற்கு முதன்மையாக உள்ளது.

போதிய நேரம் செலவழிக்காதது

திருமணமான தம்பதிகள் சண்டைகள் போடுவதற்கு மற்றொரு காரணம் தான் இது. இன்றைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், நிறைய தம்பதிகளால் ஒருவருடன் ஒருவர் போதிய நேரத்தை செலவழிப்பதில்லை என்று சண்டைப் போடுகின்றனர்.

சுத்தமின்மை

இன்றைய காலத்தில் நிறைய தம்பதிகளுக்கு சண்டை வருவதற்கு சுத்தமின்மையும் ஒரு காரணம். அதிலும் படுக்கையில் துணியை அப்படியே போடுவது, காலையில் எழுந்ததும் பயன்படுத்திய போர்வையை மடிக்காமல் அப்படியே போட்டுவிடுவது போன்றவற்றால் கூட சண்டைகள் வருகின்றன.

ரொமான்ஸ் இல்லாமை

 தம்பதியர்களுள் ஒருவர் ரொமான்ஸாக அருகில் வரும் போது, புரிந்து கொண்டு, ரொமான்ஸ் செய்யாமல், சோர்வாக உள்ளது என்று சொல்லி, அவர்களை புறக்கணிப்பதால், தற்போது பலருக்கு சண்டைகள் வருகின்றன.

அளவுக்கு அதிகமான அன்பு

அளவுக்கு அதிகமாக அன்பு அதிகரிக்கும் போது, துணை தம்மிடம் சிறிது கோபமாக நடந்து கொண்டாலும், அவரின் மீது கோபம் அதிகரித்து, புரிந்து கொள்ளும் திறன் குறைந்து சண்டைகள் வந்துவிடும்.

குழந்தைகளைப் பராமரிப்பது

சில நேரங்களில் குழந்தைகளை கவனித்து கொள்வதிலும் சண்டைகள் வரும். அதில் பெரும்பாலான ஆண்கள் குழந்தைகளை கவனிப்பது பெண்களின் பொறுப்பு என்று நினைக்கின்றனர். ஆனால் பெண்களோ, கணவன், மனைவி இருவருமே சரிசமமாக கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருக்க, தம்பதியர்களுக்குள் சண்டைகள் எழும்.

Thursday, 27 March 2014

நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா ? இதை கடைபிடியுங்கள்

நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரம்மாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது.
நாம் ஏன் சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக் கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா?
இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.
மூளைக்கு மீன் வேண்டும்
ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணைய் மிகுந்த மீன்களை வாரந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்க முடியும். நாம் 3 வயதை அடையத் தொடங்கிய நாள் முதல், மூளையின் அளவு சுருங்கத் தொடங்கி, மன ரீதியாக தளர்வு ஏற்படத் தொடங்கும்.
நண்பர்களை அருகில் வைத்திருங்கள்
'நல்ல நண்பர்களை அருகில் வைத்திருப்பது தான் 100 வயது வரை வாழ்வதற்கான சாவி' என்று ஆஸ்திரேலியாவில் 100 வயதை அடைந்தவர்களிடம் செய்த ஒரு ஆய்வு முடிவு சொல்கிறது. ஏனெனில், நண்பர்கள் மன ரீதியான ஆதரவை அளிப்பதால், மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களின் உடலில் நன்றாக இருப்பதற்கான வேதிப்பொருட்களான டோபாமைன் மற்றும் ஆக்ஸிடோசின் ஆகியவை உருவாக உதவுகிறது. மேலும், இதன் காரணமாக மூளையின் வளர்ச்சி மேம்பட்டு, முதுமையும் தள்ளிப் போகிறது.
ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்கள்
ஆப்பிள்கள், குறிப்பாக ஆப்பிள் சாறு மூளையை இளமையாக வைத்திருக்க உதவுகிறது என்று அல்சைமர் நோய் பற்றிய பத்திரிக்கை (Journal of Alzheimer's Disease) நடத்திய சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு 2 கப் ஆப்பிள் சாறு அருந்துவதன் மூலம் டிமென்சியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளைகளில் ஏற்படும் கறைகள் குறைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!
மூளைக்கு வேலை
சுடோகு மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவற்றை செய்து வருவதால் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும்
சருமத்திற்கு காய்கறிகளும், பழங்களும்
வானவில்லின் வர்ணங்களில் ஜொலிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், மஞ்சள், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. செயின்ட் ஆண்டுரூஸ் பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நெடு நாட்களுக்கு ஆரோக்கியமான சருமம் இருப்பதாகவும் மற்றும் அவை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வாரம் இருமுறை தாம்பத்ய உறவு
இராயல் எடின்பர்க் மருத்துவமனை நடத்திய ஆய்வு ஒன்றின் படி, ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை (வாரம் இரண்டு முதல் மூன்று முறை உடலுறவு கொள்ளுதல்) வாழ்ந்து வரும் தம்பதிகள், மற்றவர்களை விட 7 வயது குறைந்தவர்களாக தோற்றமளிக்கிறார்கள். ஏனெனில், தாம்பத்ய உறவு மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் இரவில் ஆழ்ந்த உறங்கவும் உதவுகிறது.
கருப்பைக்கு பால் அவசியம்
முழுமையான கொழுப்பு நிரம்பிய பாலை தினமும் குடித்து வந்தால் போதும், பெண்களுக்கு இருக்கும் மலட்டுத்தன்மை 25 சதவீதம் குறைந்துவிடும் என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வு குறிப்பிடுகிறது. ஏனெனில், பால் பொருட்களில் உள்ள கொழுப்பு கருப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்தும். காலை நேர உணவுடன், ஒரு கப் பாலை தினமும் சேர்த்துக் கொள்வதும், ஒரு கப் தயிர் மற்றும் பாலாடைக்கட்டியில் ஒரு சிறு துண்டு ஆகியவற்றையும் உணவுடன் சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்
பெண்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சியிலும் மற்றும் அவர்களுடைய கருத்தரிக்கும் தன்மையை குறைப்பதற்கும் மன அழுத்தம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஆண்களின் உயிரணுக்கள் உற்பத்தியாகும் அளவை குறைத்து, லிபிடோவையும் குறைத்து விடுகிறது. எனவே, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள, தினமும் 10 நிமிடமாவது ரிலாக்ஸாக டிவி பார்த்தல் அல்லது படித்தல் போன்ற பொழுதுபோக்குகளை செய்து வாருங்கள்.
தொப்பை
சாதாரணமாக உடற்பயிற்சி செய்வதை விட, இசையை கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் போது கணிசமான அளவு எடை அதிகமாக குறைகிறது என்று கனடாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உங்களுடைய உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் வகையில் இசையை சேர்த்துக் கொண்டு, அதீத சக்தி தரும் பாடல்களை iPod அல்லது mp3 பிளேயரில் போட்டுக் கேளுங்கள். மேலும், நீங்கள் ஜிம்முக்கு செல்பவராக இருந்தால் அல்லது வாக்கிங் மட்டும் செல்பவராக இருந்தால், பாட்டு கேட்டுக் கொண்டே அவற்றை செய்யுங்கள்.
பொட்டாசியம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்
பொட்டாசியம் உடலின் நீர்மத்தை சமநிலை செய்யவும் மற்றும் தேவையற்ற வகையில் வயிறு உப்புசமடைவதையும் குறைக்க உதவுகிறது. அதிகளவு பொட்டாசியம் உள்ள உணவுகளாக வாழைப்பழம், பரங்கிக்காய், மாம்பழம், கீரைகள், தக்காளி, நட்ஸ் மற்றும் தண்ணீர்விட்டான் கொடி ஆகியவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இவற்றில் உள்ள அஸ்பாரகின் என்ற அமினோ அமிலம், நமது உடலில் அதிகமாக உள்ள நீர்மங்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஓய்வு தேவை
யோகாசனம் அல்லது தியானம் போன்ற ஓய்வு நிலை உடற்பயிற்சிகள், கடினமான உடற்பயிற்சிகளான ஓட்டம் அல்லது ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விட அதிகமான கலோரிகளை எரிப்பதாக அமெரிக்காவிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்த எளிய உடற்பயிற்சிகள், நம்மை அதிகமாக சாப்பிடத் தூண்டும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவை குறைத்திட உதவுகின்றன.
பாதத்திற்கேற்ற பந்து சிகிச்சை (Try ball therapy)
ஒரு டென்னிஸ் பந்தின் மேலாக உங்களுடைய பாதத்தை வைத்து, சுழற்றிக் கொண்டிருந்தால் பாதம் மசாஜ் செய்யப்பட்டு, இரத்த ஓட்டம் உந்தப்படும் மற்றும் இறுக்கமான அல்லது வலி தரும் வகையில் உள்ள தசைகள் ஓய்வு நிலைக்கு திரும்பும். இன்னும் சற்றே தீவிரமான பலன் வேண்டுமென்றால், கோல்ஃப் விளையாடும் பந்தை எடுத்துக் கொண்டு, நின்ற நிலையில் இதே செயலை செய்யவும். இதனை தினமும் திரும்பத் திரும்ப செய்து வந்தால், பிளான்டர் பேஸ்சியா என்ற மிகவும் பரவலான ஆனால் மிகவும் வலி தரக்கூடிய எரிச்சல் தரும் நிலையிலிருந்து உங்களுடைய பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கண்களுக்கும் தேவை நிழல்
நீங்கள் எவ்வளவு அதிகமாக சூரியனின் புறஊதாக் கதிர்களால் நேரடியாக தாக்கப்படுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய கண்களிலுள்ள விழித்திரையில் அதிகமான சேதம் ஏற்படும். இதன் காரணமாக உங்களுக்கு வயது ஏற ஏற, கண்புரை மற்றும் வயது-சார்ந்த மாகுலர் திசு-செயலிழப்பு (AMD) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளியிடங்களில் நேரத்தை செலவிடும் போது சூரியஒளிக் கண்ணாடிகளை அணியுங்கள். குளிர்காலங்களிலும், மேக மூட்டமாக இருக்கும் நேரங்களிலும் கூட புறஊதாக் கதிர்களின் தாக்கம் இருக்கும்.
நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க...
கண்களுக்கான தினசரி பயிற்சிகள்
இங்கு தரப்பட்டுள்ள எளிமையான டெக்னிக்கை பயன்படுத்தி உங்களுடைய கண் தசைகளுக்கு பயிற்சியளித்து வந்தால், கண்களிலுள்ள அழுத்தம் குறைந்து தலைவலி மற்றும் கண் வலி போன்றவை குறையும்.
இதோ அந்த பயிற்சி:
உங்களுடைய கண்களுக்கு முன், 10 அடி தூரத்தில் பெரிய அளவில 8 என்ற எண் உள்ளதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த எண்ணை ஒரு பக்கமாக சாய்த்து, அந்த வடிவத்தை உங்களுடைய கண்களால் வரைய முயற்சி செய்யுங்கள், மெதுவாக. இவ்வாறு சில நிமிடங்களுக்கு செய்து வரவும்.
மூக்கு
நீங்களாகவே செய்யக்கூடிய இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சைனஸ் அழுத்தம் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் காணுங்கள். எப்படியெனில் உங்களுடைய நாக்கை அதன் மேல் பகுதியை எதிர்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து, கண்ணிமைகளில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தவும். மூக்கின் துவாராங்கள் வழியாக வாய்க்கு செல்லும் வோமர் எலும்பில், அடைப்புகளை இலக்கி, நீக்க இந்த வழிமுறை உதவும்.அதிலும் 20 நொடிகள் இவ்வாறு செய்து பாருங்கள், சைனஸ் தொல்லை இல்லாமல் போகும்.
'சத்தங்களுக்கு தேவை கட்டுப்பாடு'
நாம் பிறக்கும் போது இயக்கம் பெறும் காதுகள், கடைசி வரையிலும் நம்முடைய பிரதான உணர்வு உறுப்பாக உள்ளது. வயது ஏற ஏற, நமது மூளைக்கு ஒலியை கொண்டு செல்லும் நரம்புகள் சேதமடையவும், பலவீனமாகவும் துவங்குகின்றன. எனினும், நாம் கேட்கும் ஒலியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால், இந்த சேதத்தின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும். அதாவது, அமைதியை விரும்புங்கள்.
கிரீன் டீக்கு கிரீன் சிக்னல்
வாயில் ஒலியை ஏற்படுத்தவும், உணவை அரைக்கவும், முகத்தின் அமைப்பை உருவாக்கவும் உதவும் 32 நண்பர்களை பாதுகாக்க விரும்பினால், தினமும் கிரீன் டீ குடியுங்கள். கிரீன் டீ பாக்டீரியாக்களை தடுக்கவும், உங்களுடைய பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.
ப்ளாஸிங் செய்யுங்கள்
தினமும் ப்ளாஸிங் செய்வது கடினமான விஷயமாக உங்களுக்குத் தோன்றினால், அது ஒன்றும் குடி முழுகிப் போய்விடும் விஷயம் என்று கவலை கொள்ள வேண்டாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ப்ளாஸிங் செய்து வாருங்கள். இந்த பழக்கத்தின் காரணமாக கிருமிகள் வாயில் தொற்றி ஒட்டிக் கொள்ளாமல் தவிர்க்க முடியும். இதன் மூலம் ஈறுகளில் நோய்கள் தாக்காமலும் தவிர்க்க முடியும்.
சீக்கிரம் படுக்கைக்கு செல்லுதல்
ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு முடிவில், ஒரு நாளைக்கு 7 மணி நேரங்கள் உறங்குபவர்கள் அல்லது இரவில் குறைவான நேரம் உறங்குபவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக படுக்கைக்கு தூங்கச் சென்றால், அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய வலி போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
'நான் செய்வேன்' என்று சொல்லுங்கள்
திருமணம் ஆகாத ஆண்களை விட, திருமணமானவர்கள் தான் இதய நோயினால் மூன்று மடங்கு அதிகமாக இறக்கிறார்கள். அதே நேரம், திருமணமான பெண்கள் இதய நோயினால் இறப்பது, திருமணமாகாதவர்களை விட 50 சதவீதம் குறைவு என்றும் 2009 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு சொல்கிறது.
சமநிலையை மேம்படுத்துங்கள்
உங்களுடைய மூட்டுகளை நெகிழக் கூடியவையாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருக்க விரும்பினால், ஒவ்வொரு நாள் காலையிலும், ஒவ்வொரு பாதத்தையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு சமநிலையுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இந்த எளிய பயிற்சி, உங்களுடைய கால்களின் தசைகளை வலுப்படுத்தவும், அவற்றின் உணர்வுகளை மேம்படுத்தவும், நிலைத்தன்மை மற்றும் வயதாகும் போது கீழே விழாமல் தவிர்க்குமாறும் செய்ய உதவுகிறது.
சத்தாக சாப்பிட்டு வீக்கத்தை வற்றச் செய்யுங்கள்
மூட்டுகள் இணையும் இடத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தி ஆர்த்ரிடிஸ் நோயை வரவழைக்கும் வேலையை வீக்கங்கள் செய்கின்றன. இவ்வாறு வீக்கத்தை வரவழைக்கும் காரணிகளை எதிர்த்துப் போராடும் உணவுகளான கிரீன் டீ, பெர்ரிகள், கொழுப்புச்சத்து மிகுந்த மீன்கள், சுத்தமான ஆலிவ் எண்ணெய், சிவப்பு திராட்சைகள் மற்றும் ஆப்பிள்கள், பூண்டு, வெங்காயம், ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள், மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவற்றை சாப்பிட்டு, வீக்கத்திற்கு சொல்லுங்கள் பெரிய 'NO'.