Saturday 29 March 2014

மக்களவைத் தேர்தலை நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவு


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கு மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கு சராசரியாக ரூ.10 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும், மொத்தமாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படும் எனறு தேர்தல் ஆணையர் சமபத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரபிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.1,000 கோடி செலவாகும் என்றும் கூறினார். மேலும், இந்தத் தேர்தலில் வேட்பாளர் செலவு, பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமாகவும், சிறிய மாநிலங்களில் ரூ.54 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment