Wednesday, 9 April 2014

பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடுகளின் அறிகுறிகளும்... தீர்வுகளும்...

உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வகைகளில் ஒன்று கால்சியம். இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் மிகவும் தேவையான ஒரு சத்தாகும். இது தினசரி உணவின் போது சாப்பிட வேண்டிய கட்டாய உணவாகும். இதனால் வலுவான எலும்புகளும் பற்களும் உருவாகும்.

இது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆண் பெண் இருவருக்கும் சமமான அளவு தேவைப்படாது. முக்கியமாக பெண்களுக்கு இது கட்டாயமாக அதிக அளவில் தேவைபடுகின்றது.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!

பெண்கள் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கணவர் ஆகியவர்களை பார்த்துக் கொள்ளும் பெண்கள், தங்களையும் தங்கள் உடல் நலனையும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது கிடையாது.

இது அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதையும் அவர்களை கவனித்துக் கொள்வதிலும் அசட்டையாய் இருந்து விடுகின்றனர். கால்சியம் உடலில் இல்லாவிட்டால் ஏற்படும் குறைகளை பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, கால்சியத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

கால்சியத்தின் நன்மைகள்

1.கால்சியமானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

2.கால்சியத்தால் தான் தசைகள் நல்ல முறையில் செயலாற்ற முடியும். இதே போல் தான் எலும்பின் தன்மையும்.

3.கால்சியத்தால் தான் தசைகள் நல்ல முறையில் செயலாற்ற முடியும். இதே போல் தான் எலும்பின் தன்மையும்.

4.கால்சியம் அதன் மருத்துவக் குணத்தால் தான் அதிக அளவு விற்பனையாகும் மருந்தாகவும் இது உள்ளது.

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் 1000 முதல் 2000 மில்லி கிராம் கால்சியம் பெண்களுக்கு தேவையாகும். இதற்கு கீழ் இருந்தால் அது குறைபாடு என்று கருதப்படும். இதை உடனடியாக மருத்துவரை பார்த்து சரி செய்துக் கொள்வது அவசியம்.

கால்சியம் குறைவாக இருந்தாலும் பெரிய அளவில் அதன் விளைவுகள் தென்படாது. எலும்பு முறிவுகள் ஏற்படும் போது தான் தெரியவரும் அது ஏன் நடந்தது என்று. ஆகையால் வயதானவர்களின் முக்கியமாக பெண்களின் உடலில் தேவையான அளவு கால்சியம் இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்துப் பார்ப்பது நல்லது.

1.பெண்களிடையே உள்ள கால்சியம் குறைபாட்டை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்புப்புரை என்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதற்கான இரத்தப் பரிசோதனையை செய்து பெண்கள் தங்களுக்கு உள்ள குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது நல்லது.

2.உணர்வின்றி போவதும் மற்றும் நரம்புகள் மற்றும் தசைப்பிடிப்புகள் ஆகியவையும் கால்சியம் குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளாகும். இதை நாம் அப்படியே விட்டு விட்டால் நரம்புகள் சிக்னல்களை அனுப்பும் வேலையை நிறுத்தி விட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

3.ஒரு பெண்ணின் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அவர்களின் இதயத்துடிப்பும் சீராக இருப்பது கிடையாது. ஆகையால் இதை வைத்தும் பெண்களின் குறைபாட்டை கண்டறிய முடியும்.

4.குழப்பம், மனநோய், மயக்கம் ஆகியவை கால்சியம் குறைவாக இருப்பதால் வரக்கூடிய பாதிப்புக்களாகும். இது ஏனெனில் நமது மூளைக்கும் கால்சியம் தேவைப்படுகின்றது.

மிக முக்கியமாக வயதான பெண்களுக்கு கால்சியம் அவசியம் தேவை. இது அவர்களை நல்ல முறையில் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள உதவும்.

5.கால்சியம் உள்ள உணவுகளையும் அல்லது இணை சேர்க்கை உணவுகளையும் உணவாக சேர்த்துக் கொள்வது அவசியமானதாகும். இத்தகைய குறைபாடுகளை குறைக்க கால்சியம் உதவுகின்றது.

முக்கியமாக வயதான பெண்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுப்பது மிக முக்கியமானது. மருத்துவருடன் ஆலோசிக்காமல் இதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அதிக கால்சியத்தை உட்கொள்ளாமல் இருப்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா? நிரூபித்துக் காட்டிய 9 வயதுச் சிறுவன் (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க் கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத், சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் 4ம் வகுப்பில் கற்றுவரும் குறித்த சிறுவன், வகுப்பில் தொடர்ந்தும் முதல் மாணவனாக திகழ்வதாக அப்பாடசாலையின் அதிபர் பி.கமலநாதன் சான்று பகர்கிறார்.
குறித்த சிறுவனின் தந்தை ரகுநாதன் வெல்டிங் தொழில் செய்து வருபவராவார். பல வசதியீனங்களுக்கு மத்தியில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் ஒரு சிறுவனின் முயற்சியை பாடசாலை சமூகத்தினர் பாராட்டுகின்றனர்.
இச்சிறுவன் சூரிய ஒளியை குவிவு வில்லையைப் பாவித்து ஒளியை ஓரிடத்தில் குவியச் செய்கிறார்.
சூரிய ஒளியை அசையக் கூடிய கைவில்லையைப் பயன்படுத்தி ஒடுக்கி அவ் ஒளியால் சித்திரம் வரைகிறான் எழுதுகிறான்.
இச்சிறுவன் 03 மாத காலம் முயற்சி செய்திருக்கிறான். கடதாசியில் எழுதி பார்த்திருக்கிறான். றெஜிபோமில், றப்பரில் வரைந்து பார்த்திருக்கிறான்.
அதன் செருப்பில் பெயர் பொறித்துப் பார்த்திருக்கிறான். இறுதியாக கார்ப்பட் துணியில் எழுதி, வரைந்து பார்த்தான்.சரி வந்தது. அதன் பின்னரே இதனை பலருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதற்காக தனது தந்தையின் உதவியுடன் ஒரு உபகரணத்தைத் தயாரித்து இதனை தற்சமயம் செய்து காட்டுகிறார். அவரது இளவயது ஆக்க முயற்சியை பாராட்டுவோம்.

Wednesday, 2 April 2014

இதயத்தை பாதுகாக்கும் இயற்கையின் வளமிகு வெந்தயக்கீரை


வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.   சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் உடலுக்கு நல்ல பலம் தரும்.

.  ht2200

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும்.   வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர்  விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி,  காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர்  வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு  இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு  நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு  உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது    வாய்ங்குவேக்காடு வராது. வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும்,  சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி  சிரங்கு, இரத்தசோகை ஆகியவை  குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

கலோரி என்றா என்ன…? தெரிந்து கொள்வோம் வாங்க

 


திரும்பின பக்கமெல்லாம் டயட் ஆலோசனைகள்… அறிவுரைகள்… போதாக்குறைக்கு பிரபலங்களின் ஸ்லிம் சீக்ரெட்ஸ் வேறு… எது சரி, எது தவறு  என்கிற குழப்பம் ஒரு பக்கம்… பி.எம்.ஐ… மெட்டபாலிக் ரேட்… பேலன்ஸ்டு டயட் என ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உணவியல்
ஆலோசகர்களின் பயமுறுத்தல் இன்னொரு  பக்கம்…
ht2234

படித்தவர்களுக்கே குழப்பம் உண்டாக்கும் பி.எம்.ஐ கணக்கீடும், பேலன்ஸ்டு டயட் பட்டியலும் பாமர மக்களுக்கு எங்கிருந்து புரியும்?
உணவு மற்றும் ஊட்டம் தொடர்பான அத்தனை சந்தேகங்களையும் இங்கே தெளிவுப்படுத்துகிறார் டாக்டர் தேசிகாச்சாரி. நீரிழிவு, ரத்த அழுத்தம்,  பருமன், வளர்சிதை மாற்றச் சீர்கேடுகள் போன்ற தொற்றாத நோய்களின் உயிர்குறிப்பான்களை மதிப்பீடு செய்வதிலும், வாழ்க்கைமுறை மாற்ற  நடவடிக்கைகள் மூலமாக இவற்றை சரி செய்ய உதவுவதிலும் நிபுணரான இவர், உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, யுனிசெஃப், டேனிடா  போன்றவற்றில் சுகாதார ஆலோசகராக பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.
பி.எம்.ஐ. (பாடி மாஸ் இன்டக்ஸ்)
ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு இவ்வளவு எடைதான் இருக்க வேண்டும் என ஒரு கணக்கீடு உண்டு. அந்தக் கணக்கீட்டை வைத்து தான்  ஒருவர் சரியான எடையுடன் உள்ளாரா, கூடுதல் எடையுடன் உள்ளாரா, சராசரியைவிட குறைவான எடை கொண்டவரா அல்லது உடல் பருமன்  உள்ளவரா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணத்துக்கு…

எப்படிக் கணக்கிடுவது?
பி.எம்.ஐ. =    எடை (கிலோ கிராம்களில்) உயரம் (மீட்டர் ஸ்கொயர்) பி.எம்.ஐ.
* 18.5 க்கும் கீழ் என்றால் சராசரியை விட குறைவான எடை கொண்டவர்கள்.
* 18.6 முதல் 24.9 வரை என்றால் நார்மல் எடை கொண்டவர்கள்.
* 25 முதல் 29.9 வரை என்றால் அதிக எடை கொண்டவர்கள்.
* 30 மற்றும் அதற்கு மேல் என்றால் உடல்
பருமன் கொண்டவர்கள்.

பி.எம்.ஐ.க்கு ஏற்ப ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை
18.5க்கும் கீழ்… 30-35 முதல் 35-40 கிலோ கலோரிகள்.
19 முதல் 25 வரை… 25 முதல் 30 கிலோ கலோரிகள்.
25 முதல் 30 வரை… 20 முதல் 25 கிலோ கலோரிகள்.
30 பிளஸ்… 15 முதல் 20 கிலோ கலோரிகள்.

இது தவிர ஒவ்வொருவரின் மொத்த கலோரி தேவை என்பது ஓய்வு வளர்சிதை மாற்றம் (ரெஸ்டிங் மெட்டபாலிக் ரேட்) மற்றும் உடலியக்கங்களின்  தன்மையைப் பொறுத்து வேறுபடும். வயது, பாலினம் போன்றவையும் கணக்கில் கொள்ளப்பட்டே ஒவ்வொருவருக்குமான கலோரி தேவை  கணக்கிடப்பட வேண்டும்.
ஒவ்வொருவரின் உடலமைப்பையும் எக்டோமார்ஃப், மெசோமார்ஃப் மற்றும் என்டோமார்ஃப் என 3 வகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகையைச் சேர்ந்தவர்கள், மெலிதான எலும்பு அமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது வளர்சிதை மாற்ற விகிதமும்,  கார்போஹைட்ரேட் சகிப்புத் தன்மையும் அதிகமாக இருக்கும். இவர்களது உணவில் 55 சதவிகிதம் காம்ப்ளக்ஸ் (மெதுவாக செரிக்கக்கூடிய)  கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 15 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும்.
மெசோமார்ஃப் வகையைச் சேர்ந்தவர்கள் நடுத்தர உடல்வாகு கொண்டவர்களாக, விளையாட்டு வீரர்களைப் போன்ற உடலமைப்புடன் இருப்பார்கள்.  இவர்களது உணவில் 40 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டும், 30 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் கொழுப்பும் இருக்க வேண்டும். கடைசி  வகையைச் சேர்ந்தவர்கள் பெரிய உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். 25 சதவிகித கார்போஹைட்ரேட், 35 சதவிகித புரதம், 40 சதவிகித  கொழுப்பு நிறைந்த உணவு  இவர்களுக்கு அறிவுறுத்தத்தக்கது.
பேலன்ஸ்டு உணவு

‘பேலன்ஸ்டு உணவு’ அதாவது, சரிவிகித உணவு என்பது நமது உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளையும் தருவதாக இருக்க வேண்டும். நாம்  சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. ‘சரிவிகித உணவு’ என்பது, பல்வேறு உணவுப் பிரிவுகளைச் சேர்ந்த மாறுபட்ட  பல உணவுகளிலிருந்து குறிப்பிட்ட அளவுகள் மற்றும் அளவீடுகளில் போதுமான ஊட்டச்சத்து தேவைகளோடு மன அழுத்தத்திற்கான கூடுதல்  சக்தியையும் வழங்குகிற உணவு என்று பொருள் வரையறை செய்யப்படுகிறது.
எந்த உணவு எதற்கு?

* ஆற்றலைக் கொடுக்கும் உணவுகள்
(கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு).
* முழு தானியங்கள், சிறு தானியங்கள் – புரதம், நார்ச்சத்து, தாதுச் சத்து, கால்சியம், இரும்பு மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்.
* தாவர எண்ணெய், வெண்ணெய், நெய் – கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், அவசிய கொழுப்பு அமிலங்கள்.
* நட்ஸ், எண்ணெய் வித்துகள் – புரதம், வைட்டமின் மற்றும் தாதுச் சத்து.
* சர்க்கரை – ஒன்றுமில்லை. பாடி பில்டிங் உணவுகள் (புரதங்கள்)
* பருப்பு, நட்ஸ் மற்றும் எண்ணெய் வித்துக்கள் – பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு மற்றும் நார்ச்சத்து.
* பால் மற்றும் பால் பொருள்கள் – கால்சியம், வைட்டமின் ஏ, ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி 12.
* இறைச்சி, மீன் -  பி காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, அயோடின் மற்றும் கொழுப்பு.பாதுகாக்கும் உணவுகள் (வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்கள்)
* பச்சைக் காய்கறிகள், கீரைகள் – ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், நார்ச்சத்து மற்றும் இதர கேரட்டீனாயிட்ஸ்.
* பிற காய்கறிகள் மற்றும் பழங்கள் – நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்.
* முட்டை, பால், பால் பொருள்கள், அசைவ உணவுகள் – புரதம் மற்றும் கொழுப்பு.

வலி நிவாரண மாத்திரைகளால் ஆபத்து!


எந்த ஒரு பிரச்னைக்கும் மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே சுய மருத்துவம் செய்வது தவறானது. குறிப்பாக வலிகளை விரட்ட  நீங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்…’’ எச்சரிக்கிற உதாரணங்களுடன்  ஆரம்பிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி நிவாரண மாத்திரைகளின் பின்னணியில் மறைந்திருக்கிற பேராபத்துக்களைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.
‘‘இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிற மக்கள் 35 சதவிகிதம் பேர். அவர்களில் பாதி பேர்  படித்தவர்கள், வசதியானவர்கள். 70 சதவிகித மக்கள் வலி நிவாரண மாத்திரைகளைப் பற்றித் தெரிந்தும், 30 சதவிகிதத்தினர் அவற்றைப் பற்றித்  தெரியாமலும் எடுத்துக் கொள்பவர்கள். இவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மருத்துவரின் பழைய மருந்துச்சீட்டை வைத்துக் கொண்டு, வருடக்  கணக்காக மாத்திரைகள் எடுப்பவர்கள். இன்னும் ஒரு பிரிவினர், தெரிந்தவர்கள் சொல்வதைக் கேட்டு மாத்திரைகள் எடுப்பவர்கள்.

இப்படி சுய மருத்துவம் செய்வதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
- நோயின் ஆரம்பக் கட்ட அறிகுறி அப்படியே அமுக்கப்படும்.
- நோய் சரியாகத் தீர்க்கப் படாமல் முற்றிப் போகலாம்.
- நோயும் சரியாகாமல், அறிகுறிகளும் மறைக்கப்படுவதால், நீண்ட காலமாக எடுத்துக் கொள்கிற மருந்துகளின் பக்க விளைவுகள் ஒரு பக்கம் பாதிக்க  ஆரம்பிக்கும். பண விரயமும் அதிகமாகும்.

ஒரு முறை எடுத்துக் கொள்கிற மாத்திரை வலியைக் குறைப்பதால், அடுத்தடுத்த முறைகளும் அதையே தொடர்ந்து எடுத்துக் கொள்ளப் பழகுவார்கள்.  பிரச்னைக்கான உண்மையான காரணம் அறியாமல், தவறான மருந்தை, தவறான அளவுகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வலிக்கான காரணம்  உடம்புக்குள் ஒரு பக்கம் தீவிரமடைவதுடன், மருந்துகளின் பக்க விளைவுகளும் இன்னொரு பக்கம் மறைமுகமாகத் தீவிரமடையும். சாதாரண  வலிதானே, இதற்குப் போய் மருத்துவரைப் பார்ப்பதா என்கிற அலட்சியம் வேண்டாம்.


மருத்துவரிடம் போனால் ஏதேனும் வியாதியைச் சொல்லி பயமுறுத்துவாரோ என்கிற எண்ணமும் பலருக்கு உண்டு. மருத்துவரால் மட்டுமே  வலிக்கான காரணத்துக்கேற்ப, நோயாளியின் வயது, உடல்நலம், ஏற்கனவே உள்ள பிரச்னைகள் போன்றவற்றைப் பார்த்து சரியான மருந்தைப்  பரிந்துரைக்க முடியும். யாருக்கு, என்ன மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, எல்லா வலிகளுக்கும் தாமாக சுய மருத்துவம் செய்வதும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதும், உயிருக்கே  ஆபத்தாக முடியலாம். ரத்த அணுக்களைக் குறைப்பது, குடல் புண்களை ஏற்படுத்துவது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளில் தொடங்கி, சிறுநீரக  பாதிப்பு, கல்லீரல் பழுது வரை பெரிய பயங்கரங்களுக்கும் அது காரணமாகலாம்…’’
ht2378

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்-யாழ்மீடியாகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம். 

தேவையான பொருட்கள்
:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் வெற்றி பெற இணை தேர்வு வழிமுறைகள்

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் ht2154
என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.

1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.

3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.

6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில்  இருந்து அறிந்துகொள்ள முடியும்.

7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.

8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.

9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.

10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.