பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாடுகளின் அறிகுறிகளும்... தீர்வுகளும்...
உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வகைகளில் ஒன்று கால்சியம். இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் மிகவும் தேவையான ஒரு சத்தாகும். இது தினசரி உணவின் போது சாப்பிட வேண்டிய கட்டாய உணவாகும். இதனால் வலுவான எலும்புகளும் பற்களும் உருவாகும்.
இது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆண் பெண் இருவருக்கும் சமமான அளவு தேவைப்படாது. முக்கியமாக பெண்களுக்கு இது கட்டாயமாக அதிக அளவில் தேவைபடுகின்றது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்!!!
பெண்கள் பொதுவாக வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் கணவர் ஆகியவர்களை பார்த்துக் கொள்ளும் பெண்கள், தங்களையும் தங்கள் உடல் நலனையும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வது கிடையாது.
இது அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதையும் அவர்களை கவனித்துக் கொள்வதிலும் அசட்டையாய் இருந்து விடுகின்றனர். கால்சியம் உடலில் இல்லாவிட்டால் ஏற்படும் குறைகளை பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, கால்சியத்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
கால்சியத்தின் நன்மைகள்
1.கால்சியமானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
2.கால்சியத்தால் தான் தசைகள் நல்ல முறையில் செயலாற்ற முடியும். இதே போல் தான் எலும்பின் தன்மையும்.
3.கால்சியத்தால் தான் தசைகள் நல்ல முறையில் செயலாற்ற முடியும். இதே போல் தான் எலும்பின் தன்மையும்.
4.கால்சியம் அதன் மருத்துவக் குணத்தால் தான் அதிக அளவு விற்பனையாகும் மருந்தாகவும் இது உள்ளது.
கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் 1000 முதல் 2000 மில்லி கிராம் கால்சியம் பெண்களுக்கு தேவையாகும். இதற்கு கீழ் இருந்தால் அது குறைபாடு என்று கருதப்படும். இதை உடனடியாக மருத்துவரை பார்த்து சரி செய்துக் கொள்வது அவசியம்.
கால்சியம் குறைவாக இருந்தாலும் பெரிய அளவில் அதன் விளைவுகள் தென்படாது. எலும்பு முறிவுகள் ஏற்படும் போது தான் தெரியவரும் அது ஏன் நடந்தது என்று. ஆகையால் வயதானவர்களின் முக்கியமாக பெண்களின் உடலில் தேவையான அளவு கால்சியம் இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்துப் பார்ப்பது நல்லது.
1.பெண்களிடையே உள்ள கால்சியம் குறைபாட்டை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்புப்புரை என்ற பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதற்கான இரத்தப் பரிசோதனையை செய்து பெண்கள் தங்களுக்கு உள்ள குறைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது நல்லது.
2.உணர்வின்றி போவதும் மற்றும் நரம்புகள் மற்றும் தசைப்பிடிப்புகள் ஆகியவையும் கால்சியம் குறைவினால் ஏற்படும் பிரச்சனைகளாகும். இதை நாம் அப்படியே விட்டு விட்டால் நரம்புகள் சிக்னல்களை அனுப்பும் வேலையை நிறுத்தி விட வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
3.ஒரு பெண்ணின் உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அவர்களின் இதயத்துடிப்பும் சீராக இருப்பது கிடையாது. ஆகையால் இதை வைத்தும் பெண்களின் குறைபாட்டை கண்டறிய முடியும்.
4.குழப்பம், மனநோய், மயக்கம் ஆகியவை கால்சியம் குறைவாக இருப்பதால் வரக்கூடிய பாதிப்புக்களாகும். இது ஏனெனில் நமது மூளைக்கும் கால்சியம் தேவைப்படுகின்றது.
மிக முக்கியமாக வயதான பெண்களுக்கு கால்சியம் அவசியம் தேவை. இது அவர்களை நல்ல முறையில் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள உதவும்.
5.கால்சியம் உள்ள உணவுகளையும் அல்லது இணை சேர்க்கை உணவுகளையும் உணவாக சேர்த்துக் கொள்வது அவசியமானதாகும். இத்தகைய குறைபாடுகளை குறைக்க கால்சியம் உதவுகின்றது.
முக்கியமாக வயதான பெண்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கொடுப்பது மிக முக்கியமானது. மருத்துவருடன் ஆலோசிக்காமல் இதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அதிக கால்சியத்தை உட்கொள்ளாமல் இருப்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment