Sunday, 27 April 2014

வாழ்க்கையின் ரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும் கவர்ச்சி விதியை பயன்படுத்துவது எப்படி?

 

* கவர்ச்சி விதி என்பது, புவி ஈர்ப்பு விதி போல. அனைவருக்கும் பொது.
* அனுபவங்கள் எண்ணத்தினால் மட்டுமே ஏற்படுபவை.
* சிந்தனைகளை அறிய உங்கள் உணர்வுகளை அறியுங்கள். நேர்மறையான உணர்வும் நேர்மறையான சிந்தனையும் தொடர்பு கொண்டவை.
* உங்கள் சிந்தனைகள்தான் உணர்வுகளை நிர்ணயிக்கின்றன.
* எண்ணங்களை மாற்ற உங்கள் உணர்வுகளை மாற்றுங்கள். அது சுலபமான வழி. எந்த செயல்கள் உங்கள் உணர்வுகளை மாற்றுகின்றனவோ அவை தான் Secret Shifters. நல்ல இசை, நல்ல நினைவு, பிடித்த மனிதர்கள் - உணர்வுகளை மாற்ற உதவும்.
* உலகின் மகா சக்தி அன்பு
* உங்கள் வாழ்க்கை எனும் கரும்பலகையில் உங்கள் எண்ணங்கள் தான் அனுபவங்களாய் எழுதப்படுகின்றன. உங்கள் எண்ணங்களை பராமரியுங்கள்.
* உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சக்தியும் உங்களுக்கு உள்ளே உள்ளது.
* எவ்வளவு சக்தியை உள்ளுக்குள் உணர்கிறீர்களோ அவ்வளவு சக்திகளை வெளியிலிருந்து கவர்வீர்கள்.
* உங்கள் முக்கிய பணி நல்ல உணர்வுடன் இருப்பது.
* சிறந்த தருணம்: இப்பொழுது.
*எது உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகிறதோ தொடர்ந்து செய்வது.

கவர்ச்சி விதியை எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் ஹாலில் உட்கார்ந்து ஹாயாக டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் 4 வயது மகள் (அல்லது பேத்தி) ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீர் எடுத்தவாறு உங்களை நோக்கி வருகிறாள். அதைக் கணடவுடன் பதட்டமாக “பாத்து பாத்து கீழ போட்டுரப் போறே!” என்று அலறுகிறீர்கள்! கலவரமாக குழந்தை அழுத்தி பிடிக்க நினைத்து டம்ளரை தவறவிடுகிறது.

“நான் சொன்னேன்ல...உன்னை யார் இதை எடுக்கச்சொன்னா? எனக்குத் தெரியும் நீ கீழ போடுவேன்னு!!”

குழந்தை டம்ளரை போட்டதற்கு யார் காரணம்? 
குழந்தை காயப்பட்டுவிடும் என்கிற உங்கள் பயம் “எதிர் மறை செய்தி” (கீழ போட்டுரப் போறே) சொல்கிறது. குழந்தையும் அதை காட்சிப்படுத்தி நினைக்கையில் எதிர் மறை சிந்தனை எதிர் செயலாக மாறி, நீங்கள் எது கூடாது என்று நினைத்துச் சொன்னீர்களோ, அது நடக்கிறது. பின்னர் அதற்கு நீங்கள் உங்கள் குழந்தையை காரணம் சொல்வது தான் உச்சபட்ச குற்றம்.

என்ன சொல்லியிருக்கலாம்? 
குழந்தை என்ன செய்ய வேண்டும். ஜாக்கிரதையாக பிடிக்கணும்; அவ்வளவு தானே? “டம்ளர ஒரு கையில கீழ பிடி கண்ணு. பத்திரமா மெதுவா வா!” என்றால் போதுமே!

ஆரோக்கியமோ, உறவுகளோ, செல்வமோ, வேலையோ எங்கு சிக்கல் இருந்தாலும் உங்கள் எண்ண ஓட்டத்தை கண்காணியுங்கள். எது வேண்டாம் என்பதை நினைப்பதை விட எது வேண்டும் என்று நினைத்தால் நினைப்பது நடக்கும்

No comments:

Post a Comment