உலகக் கோப்பை கால்பந்து : சுவையான தகவல்கள்!
பல்வேறு சர்ச்சைகள், பொருளாதார சிக்கல்களுக்கு இடையே பிரேசிலில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 65 நாட்கள் உள்ளன. உலகக் கோப்பை கால்பந்து பற்றிய சில சுவையான தகவல்களைப் பார்ப்போம்:
நாள் முழுதும், வருடம் முழுதும், எப்போதும் கால்பந்தாட்டமே தங்களது உயிர் மூச்சு என்று காட்டிக்கொள்ளும் நாடு இங்கிலாந்து. ஆனால் இத்தனையாண்டு கால வரலாற்றில் அந்த அணி 1966ஆம் ஆண்டுதான் உலக சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட் என்பவர் அந்த இறுதியில் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். அதுதான் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலும் கடைசியுமான ஹேட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அடித்த 2வது கோல் இன்றும் பெரிய சர்ச்சைக்குரிய கோலாகவே உள்ளது. அது கோட்டைக் கடந்ததா இல்லையா என்பதுதான் பிரச்சனை.
முதலில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய வீரர்:
1970ஆம் ஆண்டு மெக்சிகோ உலகக் கோப்பை போட்டிகளில்தான் சிகப்பு அட்டை, மஞ்சள் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அதில் எந்த வீரரும் வெளியேற்றப்படவில்லை.
1974ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனிக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் சிலி வீரர் கார்லோஸ் கேசிலே ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். இவர்தான் முதன் முதலில் ரெட் கார்டு வாங்கிய சர்வதேச வீரர்.
சர்வதேச கோல்கள்:
68 சர்வதேச கோல்கள் மூலம் ஜெர்ட் முல்லர், மிராஸ்லாவ் க்லோஸ் ஜெர்மனி வீரர்கள் இணை ரெக்கார்ட் வைத்துள்ளனர்.
இதில் அபாரம் யார் என்றால் ஜெர்ட் முல்லர்தான் அவர் 62 சர்வதேச போட்டிகைல் 68 கோல்கள் ஆனால் க்லோஸ் 131 போட்டிகளில் 68 கோல்கள் அடித்து சமம் செய்துள்ளார்.
அதிக ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை:
1994ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ.வில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். சராசரியாக ஒரு போட்டிக்கு 69,000 ரசிகர்கள் வர மொத்தமாக 35,87,538 பேர் மைதானத்தில் வந்து போட்டியைக் கண்டு களித்துள்ளனர்.
இதன் இறுதி போட்டி பிரேசிலுக்கும் இத்தாலிக்கும் இடையே நடைபெற்றது, இதனைப் பார்க்க 94,164 ரசிகர்கள் வந்ததே இதுவரை சாதனை. பெனால்டியில் பிரேசில் இத்தாலியை வீழ்த்தியது.
No comments:
Post a Comment