பூசணிக்காய் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள் :
பூசணிக்காய் - அரை கிலோ,
தயிர் - புளிப்பு இல்லாதது 2 கப்,
தேங்காய் - 2 துண்டு (துருவியது)
இஞ்சி - சிறிது,
துவரம்பருப்பு, பச்சரிசி, கடலைப்பருப்பு - தலா கால் கப்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
• துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி மூன்றையும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
• இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் இவற்றை தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
• உப்பு, பருப்புகளையும் இத்துடன் விழுதாக அரைக்கவும்.
• பூசணிக்காயை தோல் சீவி, பெரியத் துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவிடவும்.
• இது நன்றாக வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கை விடாமல் கிளறி (கட்டி படாமல்) கொதிக்க விடவும்.
• பின்னர் பூசணிக்காய் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, தயிரை கடைந்து உடனே சேர்த்து பிறகு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.
• தேங்காய் எண்ணெய் மணத்துடன் மலையாள மோர்க்குழம்பு தயார்.
No comments:
Post a Comment