நாடாளுமன்றத் தேர்தல்:கட்டம் என்ன சொல்லுது? - தலைவர்களின் சுவாரசிய ஜாதக கணிப்பு!
|
தமிழக ஜோதிட உலகத்தில் மாயவரம் ரமேஷ் ஸ்வாமி முக்கியமானவர். பாரம்பரியமான ஜோதிடக் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதிலேயே இக்கலையை கூர்ந்து கற்றுக் கொண்டார். மேலும் கோள்களை பற்றி ஆராய்கிற வானவியல் சாஸ்திரங்களிலும் ஆய்வு செய்தவர். இந்தியாவின் முக்கிய பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாகக் கணித்து, பிரபல இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.
மலேசியாவில் பிரதமருக்கான தேர்தல் நடந்தபோது உலகின் அத்தனை நாடுகளின் கருத்துக் கணிப்பாளர்களும் அங்கிருந்தனர். அந்த நாட்டில் ஜோதிடத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்போது அங்கு ரமேஷ் ஸ்வாமியை வரவழைத்து ''கணிப்பு'' கேட்டார்கள். பெரும்பாலான ஜோதிடர்கள் அரசுக்கு ஆதரவான கணிப்பை வெளியிட்டனர். ஆனால், இவர் மட்டும் ''அரசுக்கும், பிரதமருக்கும் செல்வாக்கு இழப்பு'' என்று கணிப்பை வெளியிட்டார். இவரது கணிப்பு மெய்யானது.
இதனால் மனம் நெகிழ்ந்த மலேசிய பிரதமர் மஹாதீர், ரமேஷ் ஸ்வாமிக்கு மலேசியாவில் நிரந்தர குடியுரிமை தர விரும்பினார். ''கோள்கள் சூழல்கிற தஞ்சை மண்டலத்திலேயே என் வாழ்க்கை கழிக்க விரும்புகிறேன்'' என்று அன்போடு மறுத்து ஊர் திரும்பியிருக்கிறார். நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு, எதிர் தரப்பு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை அரசியல் பிரமுகர்கள் கருத்து கேட்கின்றனர். திரையுலகத்தினர் படங்களின் தலைப்பு, நட்சத்திரங்களின் வெற்றிப் பலன், படங்களின் வெளியீட்டுத் தேதி போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர் தலைப்பு, வெளியீட்டு தேதி குறித்துக் கொடுத்த படங்கள் வெள்ளிவிழா கண்டவை என்ற புள்ளி விவரங்களும் உண்டு.
ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் முக்கிய தலைவர்களின் ஜாதகங்கள் எப்படி இருக்கும் என்று மாயவரம் ரமேஷ் ஸ்வாமி தற்போது கணித்திருக்கிறார். தலைவர்களின் ஜாதங்கள் எப்படி கிடைத்தது என்றால், 'கடந்த காலங்களில் இந்தத் தலைவர்களின் ஜாதங்களை அவர்களது நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் கொண்டுவந்து என்னிடம் காட்டி நிலவரம் கேட்டறிந்தார்கள். அந்தவகையில், என் கைக்கு வந்த ஜாதகங்களை வைத்து இப்போது பலன்களை சொல்கிறேன்'' என்கிறார் ரமேஷ் ஸ்வாமி.
இனி, தலைவர்களின் ஜாதங்கங்கள் பற்றி...
நரேந்திர மோடி
பிறப்பு -
ராசி - விருச்சிகம், நட்சத்திரம் - அனுஷம்
லக்னம் - விருச்சிகம்
* விருச்சிகராசி அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த நரேந்திரமோடி ஜாதகத்தில் தற்சமயம் ராஜ கிரகமாகிய சூரியன் இவருடைய ஜாதகத்தில் புதனுடன் அமர்ந்துள்ள காரணத்தினாலும் குரு பகவான் நான்காம் இடமாகிய பதவிஸ்தானத்தில் ஜாதகத்தில் வலுவாக இருக்கின்றதாலும் செவ்வாய் பலம் பெற்று ஆட்சியில் இருப்பதால் எதிரிகள் இவரை வெல்வது கடினமாகும். தற்சமயம் ஏழரை நாட்டு சனி நடைப் பெற்றாலும் இவருக்கு அதிக பாதிப்புகளைக் கொடுக்காது.
வரும் பாராளுமன்ற தேர்தல் வரும் மாதத்தில் கோள்களின் ஆதிக்கங்கள் வலுவாக இருப்பதாலும் கூட்டணி கிரகங்களின் ஆதிக்கம் வலுவாக இருப்பதாலும் இவர் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகள்.
இவருடைய கட்சியான பாரதிய ஜனதா கட்சி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
சோனியா காந்தி
பிறப்பு: 06.12.1946
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - மிருகசீரிஷம்
லக்னம் - கடகம்
* மிருகசீரிஷம் நட்சத்திரம் கடக லக்னத்தில் பிறந்த சோனியா காந்தி ஜாதகத்தில் தற்சமயம் இவருக்கு புதன் திசை நடைபெற்று வருகிறது.
* இவர் ஜாதகத்தில் பதவி வகிக்கக்கூடிய புதன் சூரியனுடன் இணைந்து இருப்பதால் சூரியன் மறைவுப் பெற்றக் காரணத்தினால் இவரால் பிரதமர் ஆக முடியவில்லை.
* இவருக்கு எதிரிக்கிரகமாகிய கேது, சூரியன், செவ்வாய், புதன் இவர்களுடன் 6-ம் இடத்தில் இணைந்துள்ள காரணத்தினால் தற்சமயம் எதிரிகளால் வெல்லக்கூடிய கோள்களின் நிலைகள் சரியில்லாத காரணத்தினால் இவர் பிரதமராக கூடிய சூழ்நிலைக் கிடையாது.
* இவருடைய ஜாதகத்தில் பகை கிரகமாகிய சனிபகவான் இவர் பிறக்கும்பொழுது குடும்பத்தில் செல்வாக்கு நிலையில் அமர்ந்த காரணத்தினால் அந்த சனி பகவான் தற்சமயம் துலாம் ராசியில் உச்சம் பெற்றுக் காரணத்தினால் இவருடைய முயற்சிகள் பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்கின்றது.
* கூட்டு கிரகங்களின் ஆதிக்கம் தற்சமயம் வலுவாக இருப்பதால் எதிரிகளை சிரமப்பட்டு வெல்ல வேண்டிய சூழ்நிலை இவரது ஜாதகத்தில் உள்ளது.
* இவருக்கு புத்திர கிரகமாகிய குருபகவான் ஜாதகத்தில் பிறந்தபொழுது வலுவாக இருப்பதால் வருங்காலத்தில் இவருடைய மகன் - ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஜெ.ஜெயலலிதா
பிறப்பு: 24.02.1948
ராசி: சிம்மராசி, நட்சத்திரம்: மகம்
லக்னம் - மிதுனம்
* சிம்மராசி மகநட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதாவின் ஜாதகத்தில் தற்சமயம் குருதிசை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்.
*இவர் ஜாதகத்தில் பிறக்கும் பொழுது ராஜகிரகமாகிய செவ்வாய் பதவி ஸ்தானத்தில், தைரிய ஸ்தானத்தில் அமர்துள்ள காரணத்தினால் இவர் செவ்வாய் திசையில் முதல்முதலாக முதலமைச்சர் ஆனார்.
* அரசியல் கிரகமாகிய சூரியனும், புதனும் ஜாதகத்தில் ஒன்பதாம் (9) இடத்தில் வலுபெற்ற காரணத்தினால் பிரபல அரசியல் தலைவியாக திகழ்கிறார்.
இவருக்கு ஜாதகத்தில் சனியானவர் பிறக்கும்பொழுதே வக்கிரத்தில் இருப்பதால் இவர் மூன்று முறை தேர்தலில் ஜெயித்து முதல்வர் பதவியில் மர்ந்தார்.
* தற்சமயம் சனிபகவான் வக்கிரத்தில் இருப்பதால் இவருடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து தமிழ்நாட்டில் அதிக பாராளுமன்ற தொகுதிகளை பெறுவதற்கு உறுதுணையாக கோள்களின் நிலைகளும் இவருக்கு சாதகமாக இருப்பதால் அதிகமான இடங்களை வெல்வார்.
கலைஞர் கருணாநிதி
பிறப்பு: 03.06.1924
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - மிருகசீரிஷம்
லக்னம் - கடகம்
* ரிஷபராசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி ஜாதகத்தில் தற்சமயம் சுக்கிரமகா திசை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் இவருக்கு பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கூட்டுகிரகங்களின் ஆதிக்கம் வலுவாக இல்லாததால் இவருக்கு சாதக பலன்கள் குறைவாகவே உள்ளது. காரணம்! சனியானவர் துலாம் ராசியில் உச்சம்பெற்று எதிரிகள் ஸ்தானத்தில் இருப்பதால் எதிரிகளுடன் போராடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
* இவருடைய கட்சியான திராவிட முன்னேற்றம் கழகம் (தி.மு.க) வரும் பாராளுமன்ற தேர்தலில் போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில் ஜாதகம் இவருக்கும், இவருடைய கட்சிக்கும் சில இடையூறுகள் ஏற்பட்டு சில தொகுதிகளில் வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்படும்.
நடிகர் விஜயகாந்த்
பிறப்பு: 25.08.1952
ராசி - துலாம், நட்சத்திரம் - சித்திரை
லக்னம் - கும்பம்
* துலாராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த விஜயகாந்த் ஜாதகத்தில் தற்சமயம் இவருக்கு புதன் மகாதிசை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
* இவருடைய ஜாதகத்தில் புதன், கேது ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள காரணத்தினால் இவருக்கு எப்பொழுதும் எதிரிகள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்.
* அரசியல் கிரகமாகிய சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் வலுவாக இருப்பதால் இவர் அரசியலுக்கு வரமுடிந்தது.
* தற்சமயம் இவருக்கு ஏழரை சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் சனியும், ராகுவும் ஒன்றாக இருப்பதால் பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கோள்களின் நிலைகள் இவருக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் இவருடைய கட்சி அதிக இடங்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை இவருக்கு ஏற்படும்.
* கூட்டுகிரகங்களின் ஆதிகத்தில் வரவிருக்கும் தேர்தல் அமைந்திருப்பதால் கூட்டணி கட்சிகளால் இவருக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
வை.கோபால சாமி
பிறப்பு: 22.05.1944
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - கார்த்திகை
லக்னம் - சிம்மம்
* ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த வை.கோபாலசாமி ஜாதகத்தில் தற்சமயம் சனி திசையில் குரு புக்தி நடைபெறுகின்ற காரணத்தினாலும் ஜாதகத்தில் அரசியல் கிரகமாகிய குரு வலுவாக உள்ள காரணத்தினாலும் பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கோள்களின் ஆதிக்கம் இவருக்கு சாதகமாக இருப்பதால் இவருடைய கட்சி அதிக இடங்களை தமிழ்நாட்டில் பெறுவதற்கு இவருடைய ஜாதகம் சாதகமாக உள்ளது.
* 2015ம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு அரசியலில் மிகபெரிய திருப்பம் ஏற்படும் வாய்ப்பு இவருடைய ஜாதகத்தில் உள்ளது.
thanks:v
|
No comments:
Post a Comment