கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஃபோலேட் உணவுகள்!!!
பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் அனைத்து சத்துக்களும் கருவின் வளர்ச்சிக்கு தேவைப்படும்.
குறிப்பாக கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாத ஒன்று. அத்தகைய சத்துக்கள் ஒருசில உணவுகளில் நிறைந்துள்ளன. அந்த உணவுகளை கர்ப்பிணிகள் தவறாமல் உட்கொண்டு வந்தால், அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமின்றி ஃபோலேட் சத்தானது டி.என்.ஏ மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கும். இங்கு கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஃபோலேட் நிறைந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆரஞ்சு கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழத்தை உட்கொண்டு வருவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலேட் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.
பசலைக்கீரை எப்போதுமே கீரைகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் கர்ப்ப காலத்தில் கீரைகளில் பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அது உடலில் ஃபோலேட் சத்தின் அளவை அதிகரித்து, சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
முட்டை ஃபோலேட் அதிகம் நிறைந்த உணவுகளில் ஒன்று தான் முட்டை. இத்தகைய முட்டையில் ஃபோலேட் மட்டுமின்றி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் இதனை நன்கு வேக வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
ப்ராக்கோலி ப்ராக்கோலியில் கூட ஃபோலேட் அதிகம் உள்ளது. மேலும் இதில் பீட்டா கரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து என்று பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
அஸ்பாரகஸ் அதேப்போன்று அஸ்பாரகஸில் ஃபோலேட் அதிகம் இருப்பதால், இதனை வேக வைத்து கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அவகேடோ அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்திலும் ஃபோலேட் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இதுவும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத சத்து. இந்த சத்து இதில் மட்டுமின்றி, சால்மன் மற்றும் வால் நட் போன்றவற்றிலும் உள்ளது.
பருப்பு வகைகள் பருப்பு வகைகளிலும் ஃபோலேட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவையும் உள்ளது. எனவே பருப்பு வகைகளை கர்ப்பிணிகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது
No comments:
Post a Comment