Sunday 20 April 2014

மங்கி போகும் அழகை மிளிர வைக்கும் குறிப்புகள்

சமையலறைக்குள்ளேயே கிடந்து, இப்படி சருகா போயிட்டேனே’ என்ற அந்த வழக்கமான புலம்பலைத் தவிர்க்க, சருமத்தை ‘வளவளப்பா’க்கும் அழகுக் குறிப்புகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* விடிற்காலையில் எழுந்து சமையலை முடித்துக் கொள்வது, வெப்பத்தாக்கத்தில் இருந்து ஓரளவு விடுபட உதவும்.

* வியர்வையின் உப்பு நீரில் சருமம் பொலிவு இழந்து காணப்படும் சமயங்களில், புடவை தலைப்பாலோ, டவலினாலோ அழுத்தித் துடைக்கக் கூடாது. உடனடியாக சூடான தண்ணீரில் குளிக்கவும் கூடாது. ஈரத்துண்டினால் வியர்வையை ஒற்றி எடுப்பதே நலம்.

* சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, தலையில் நல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெயை தடவி வாரிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு வேலையைத் துவங்கும் போது, உடம்பில் உஷ்ணம் நேரடியாக தாக்காமல் இருக்கும்.

* தாளிக்கும் போது சில சமயம் முகத்தில் கடுகு தெறிப்பதுண்டு. ஒரு வேளை அது பருக்கள் மீது பட்டுவிட்டால், சீழ் பிடித்து செப்டிக்கூட ஆகலாம்.

இத்தகைய தாளிப்புக் கொப்புளங்களைத் தவிர்க்க, சமையலைத் தொடங்குவதற்கு முன்பு இரண்டு பல்பூண்டுடன், ஒரு வெற்றிலையை அரைத்து முகத்தில் பூசுங்கள். வெற்றிலை, கிருமிநாசினியாக செயல்படும். பூண்டு, பருக்களின் மீது பாதிப்பு ஏற்படுத்தாமல் நம்மைப் பாதுகாக்கும்.

* சிறிது வெங்காயத்தை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். தலைக்குக் குளிக்கும் போது வெங்காய விழுதை தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசிப் பாருங்கள்... உடம்பு குளு குளு குளிர்ச்சி பெறும்.

* பாத்திரம் தேய்ப்பதால், வாழை, சேனை போன்ற காய்கறிகளை நறுக்குவதாலும் கைகள் சொர சொரப்பாகி விடும். நான்கு சொட்டு நல்லெண்ணெயுடன், நான்கு சொட்டு தண்ணீரைக் கலந்து நுரை வரும் வரை கைகளை தேய்த்துக் கழுவுங்கள். கைகள் மிருதுவாகி மினுமினுக்கும்.

* சமையலறைப் புகையால் ஏற்படும் கண் எரிச்சலால் கண்கள் சோர்ந்த போகலாம். 
வெள்ளரிக்காயுடன் இளநீர் சேர்த்து அரைத்து, கண் மற்றும் முகம் முழுவதும் இழந்த கலரையும் மீட்டுத் தரும். தக்காளிப் பழத்தை முகத்தில் பூசுவதால் சருமத்தில் உள்ள துளைகள் மறையும்.

* ஒரு கப் சூடான தண்ணீரில், எட்டு ரோஜா இதழ்களைப் போட்டு மூடி வைத்துவிடுங்கள். ரோஜா எசென்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கி விடும்.

பூக்களை எடுத்து விட்டு அந்தத் தண்ணீரில் முகத்தைக் கழுவினால், பனிப் படர்ந்த ரோஜாபோல் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். இந்த வாட்டரில் சிறிது பணங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். மன உளைச்சல் நீங்கி, நிம்மதி பிறக்கும்!

No comments:

Post a Comment