Tuesday 29 April 2014

சோனியா மருமகன் வாத்ரா மீது பாஜக எழுப்பிய 13 கேள்விகள்!


சோனியா மருமகன் சொத்துக் குவிப்பு பற்றி பாஜக எழுப்பிய 13 கேள்விகளுக்கு காங்கிரஸ் கட்சி பதில் கூற முடியாமல் திணறி வருகிறது.

பாஜாக எழுப்பிய 13 கேள்விகள் இதோ:

வங்கியில் ரொக்கக் கையிருப்பு வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே இருக்கும்போது 607251 என்ற எண் கொண்ட ரூ.7.5 கோடி காசோலை 9.2.2008 அன்று எப்படி கொடுக்கப் பட்டது? ஸ்டாம்ப் வரியாக ரூ.45 லட்சத்தை 12/8 அன்று கொடுத்தது யார்?

2. 607251 என்ற எண்ணிடப்பட்ட ரூ.7.5 கோடிக்கான காசோலை ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தைச் சேர்ந்ததா? இந்த காசோலை பணமாக மாற்ற வங்கிக்கு அளிக்கப்பட்டதா?

3.ஆங்கரேஷ்வர் ப்ராப்பர்டீஸ் என்ற நிறுவனத்தினால் பயனடையும் உரிமையாளர்கள் யார்?

4. DLF ரியல் எஸ்டேட் நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டிக்கு ரூ.6.5 கோடிக்கு காசோலை வழங்கியதன் உண்மையான நோக்கம் என்ன?

5. நிலத் தொகை ரூ.7.5 கோடி மற்றும் ஸ்டாம்ப் டூட்டி ரூ.45 லட்சம் சேர்த்து ரூ.7.95 கோடித் தொகை அளிக்கப்பட்டது டி.எல்.எஃப். அளித்த தொகையிலிருந்து செலுத்தப்பட்ட தொகையா?

6.2 லட்சம் சதுர அடியில் வணிக வளாகம் கட்ட அதன் தொழில்நுட்ப மற்றும் நிதி திறன்கள் முறையாக மதிப்பிடப்பட்டதா? அதற்கு அனுமதியை 18 நாட்களில் அவசரம் அவசரமாக அளித்தது ஏன்?

7. 5.8.2008 அன்று 2 லட்சம் சதுர அடியில் வணிக வளாகம் கட்ட சகிலைட் நிறுவனமும் டி.எல்.எஃப் நிறுவனமும் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கு உரிமம் அளிக்க அதிகாரம் படைத்தவர்கள் ஏன் பதிவு செய்யப்படாத இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர்? இதன் மூலம் மாநிலத்திற்கு வரவேண்டிய கோடிக்கணக்கான வருவாய் இழப்பிற்கு என்ன பதில்?

8. வணிக வளாகம் கட்டுவது தொடர்பான கடித போக்குவரத்து மற்றும் உண்மையாக கட்டிடம் கட்டும் பணி டி.எல்.எஃப். நிறுவனமாக இருக்கும்போது ஸ்கைலைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது எவ்வாறு?

9. ஏற்கனவே அந்த நிலத்தை ஸ்கைலைட் விற்பதான ஒப்பந்தம் போடப்பட்டு இதற்காக ரூ.50 கோடி அட்வான்ஸும் கொடுத்து முடித்த பிறகு வணிக வளாக கட்டுமான ஒப்பந்தம் ஏன் ஸ்கைலைட் பெயரில் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது?

10. வணிக வளாகம் மற்றும் காலனி கட்டுமானம் எந்த சட்ட அடிப்படையில் உரிமம் மாற்றப்பட்டது?

11. நிலத்தை மாற்றிக் கொடுக்கும் நடைமுறை ஆகஸ்ட், 2008-ற்கு முன்னரே முடிந்துவிட்டது. ரூ.50 கோடி வருவாய் வந்த ஸ்கைலைட் நிறுவனம் வரியை செலுத்தியதா? அப்படி செலுத்தவில்லையெனில் அபராதம் கட்ட என்ன நடைமுறை மேற்கொள்ளப்பட்டது?

12.ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ராபர்ட் வாத்ராவின் இந்த வர்த்தக மாடலை ஆதரித்தனரா?

13. இது குறித்து தலைமை தணிக்கை ஆணையத்தின் தணிக்கை விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன?

இதுதான் அந்த 13 கேள்விகள்

No comments:

Post a Comment