Friday 25 April 2014

கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களுக்கு உணவு முறைகள்

பரம்பரைக் காரணங்களால் சிறுவயதிலேயே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கத் துவங்கி விடும். எனவே பரம்பரையாக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.

பரம்பரைக் காரணங்களால் மட்டுமில்லாமல் நமது உணவு விஷயங்கள் மற்றும் அதிகமாக காணப்படும் நீரழிவு நோய் ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
பரம்பரைக் காரணங்களால் கொலஸ்ட்ரால் மிகுந்துள்ளது என்றால், கொலஸ்ட்ரால் அளவுகள் சாதாரண அளவை விட பல மடங்குகள் உயர்ந்திருக்கும்.

நோய் அறிகுறிகளும், பிற பாதிப்புகளும் ஏற்படும். எனவே இவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பரம்பரைக் காரணங்கள், மரபணு கோளாறுகள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். இதனால் இவர்களின் வாரிசுகளுக்கு இப்பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.
சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரப்பி நோய்கள், தைராய்டு நோய்கள் போன்றவைகள் காரணமாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக் கூடும்.
எனவே நோயாளிகளுக்கு இதுபோன்று ஏதாவது நோய் குறிப்பாக நீரழிவு, ரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவுகள் குறித்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட், டின் உணவுகள் அதிக கலோரிகள் தருபவை. டிரான்ஸ் வகை கொழுப்பு நிறைந்தவை.

நார்ச் சத்து குறைந்தவை. உப்பு மிகுந்தவை. வைட்டமின்களும், தாது உப்புகளும் குறைந்தவை. எனவே இது குறித்து விழிப்புணர்வு தேவை. உடல் எடை பருமனாக இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்கள் இவற்றைக் குறைக்க வேண்டும். உணவில் அதிகளவு காய்கறி, கீரைகள், தானியங்கள், பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் தங்களின் ரத்த குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சமைக்கும் எண்ணெய்யில் கவனம் தேவை. , ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

வெண்ணெய், நெய், டால்டா, கொழுப்பு மிகுந்த பால், இறைச்சி, கல்லீரல், சிறுநீரகம், இறால் ஆகிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், ஆகிய பூரிதமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்த எண்ணெய்யைத் தவிர்த்து விட வேண்டும். பேக்கரி உணவுகள், கேக் வகைகளையும் தவிர்த்து விட வேண்டும்.

ஆலிவ் எண்ணெய், safflower எண்ணெய், Flax Seed Oil, Canola Oil ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். மேலும் ஒமேகா-3 நிறைந்த மீன்கள், கொட்டைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment