Sunday, 20 April 2014

ஆஸ்டியோபோரோசிஸ் என்ற அபாயம்


'ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்பு பாதிப்பு ஆகும். எலும்பின் அடர்த்தி, பருமன் ஆகியவற்றில் சுரப்பிகளின் மாறுதல்களால் ஏற்படும் கோளாறாகும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு மூட்டுக்களில் வலி ஆகியவை ஏற்படுகின்றன.

கால்சியம் சீரமைப்புப் பணியை பெண்களிடத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், ஆண்களிடத்தில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோ னும் செய்கின்றன. இந்த சீரமைக்கும் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை 60 வயது ஆன பெண்களுக்கும், 70 வயது ஆன ஆண்களுக்கும் குறையத் துவங்குகிறது.

ஆகையால் வயதானவர்கள் இத்தகைய நோய்க்கு பெருமளவு ஆளாகிறார்கள். இதைச் சரிசெய்வ தற்காக பல ஹார்மோன்களின் மாத்திரைகள் கிடைக்கின்றன. இதைக் கொண்டு எலும்புகளில் ஏற்படும் இக்குறைபாட்டை இயற்கையாக நீக்கலாம்.
அதிலும் உணவு முறைகளை சரியாகக் கடைப்பிடிக்கும்போது, இத்தகைய குறைகளைக் குறைக்க முடியும். அதுவும் பின்வரும் ஊட்டச்சத்துகளை தினசரி உட்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க முடியும்.

கால்சியம்:

இது உடலின் செயல்களை சீராக அமைக்க உதவுகிறது. நமக்குத் தேவையான அளவு கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் எங்கு அதிகம் கால்சியம் உள்ளதோ அந்த இடத்திலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்கிறது.

இதனால் எலும்புகளின் சக்தி குறைந்து, அவை உடையும் தன்மைக்கு வந்து விடுகின்றன. இப்படி இருந்தால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியத்தை உண்ணவேண்டும்? ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000, 2000 மில்லி கிராம் வரையிலும் கால்சியம் தேவைப்படுகிறது.
இதை நாம் தயிர், பால், சோயா, சோயா பால், டோபு, கெட்டித்தயிர், குறைந்த கொழுப்புள்ள ஐஸ்கிரீம், வெள்ளை பீன்ஸ், சைனீஸ் கோஸ், கேல், கொலார்டு கிரீன்ஸ், புராக்கோலி, பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இருந்து பெறலாம்.

வைட்டமின் 'டி':

வைட்டமின் 'டி' இல்லாமல் கால்சியத்தை உண்பது உபயோகமில்லாமல் போய் விடும். கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்வதற்கு வைட்டமின் 'டி' தேவைப்படுகிறது. மனித உடல், சூரிய வெளிச்சத்திலிருந்து வைட்டமின் 'டி'யை பெறமுடியும்.

ஆனால் உடம்பை அதிக அளவு சூரிய ஒளிக்கு வெளிப்படுத்துவது கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயை தூண்டுவதாகவும் உள்ளது.

ஆகையால் இதை நாம் உணவாக எடுத்துக் கொண்டு ஈடு செய்ய முடியும். சாலமன், மத்தி, கானாங் கெளுத்தி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் 'டி' அதிகள வில் உள்ளது.

தினசரி உடற்பயிற்சி, எடை தூக்குதல், சக்தியை அதிகரிக்கும் பயிற்சி ஆகியவற்றைக் கலந்து செய்வது உடம்பில் உள்ள எலும்புகளைவலு வடையச் செய்யும்.

ஓடுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, யோகா ஆகியவற்றின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எலும்புகளும் உறுதிப்படுகின்றன.

மது அருந்துவதைக் குறைத்தல்:

மது அருந்துவது உடம்பில் ஆல்கஹால் அளவை அதிகப்படுத்தி எலும்புகளை நாசம் செய்கின்றது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடல் ஈர்த்துக் கொள்ளவிடாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாராதைராய்டு சுரப்பியை அதிகரித்து கால்சியம் மற்றும் வைட்டமின் டியை உடைக்கின்றது.

அது மட்டுமல்லாமல் கார்டிசோல் என்று கூறப்படும் கால்சியம் சேகரிக்க உதவும் சுரப்பியை குறைவாக சுரக்கச் செய்கின்றது. எலும்புகளை உருவாக்கும் அணுக்களான ஓட்டியோபிளாஸ்ட்களை உருவாக விடாமல் தடுக்கின்றது. புகை பிடிப்பதும் எலும்புகளின் அடர்த்தியைப் பாதிக்கிறது. எனவே மது வையும், புகைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment