Sunday 20 April 2014

ஜூ.வி. மெகா சர்வே ரிசல்ட்!
12 நாட்கள்... 90 நிருபர்கள், புகைப்படகாரர்கள்... தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் சுற்றிச் சுழன்று 25,247 பேரை சந்தித்து எடுத்த மாபெரும் கருத்துக்கணிப்பு இது!

16-வது நாடாளுமன்றத் தேர்தல் திருவிழாவை முன்னிட்டு நாம் இதுவரை எடுத்துவந்த கருத்துக் கணிப்புகளின் வரிசையில் இதுதான் மெகா சர்வே. சுமார் 25 ஆயிரம் மக்களின் நாடித்துடிப்பை அறிவதன் மூலமாக தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தை இதன் மூலமாக உணர முடிகிறது. அந்த மெகா சர்வே ரிசல்ட் இப்போது உங்கள் பார்வைக்கு...
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது மக்கள் மனதைப் படம் பிடிக்கும் கருத்துக் கணிப்புகளை 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து வாசகர்களுக்கு வெளியிட்டு வருகிறோம். இவை மக்கள் மனதைப் படம் பிடிப்பதாக, வெற்றி, தோல்விகளுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் இந்தத் தேர்தலை முன்னிட்டும் கருத்துக் கணிப்புகளை எடுக்கத் தொடங்கினோம்.  
கூட்டணி பேச்சுவார்த்தைகள், விருப்பமனு கேட்டல், நேர்காணல் என, தேர்தல் முன்னோட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே மக்களின் மன ஓட்டத்தைத் தெரிந்துகொள்ள பல சர்வேக்களை தொடர்ந்து எடுத்து வந்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்காக இதுவரை ஜூ.வி. டீம் ஏழு சர்வேக்களை எடுத்துள்ளது. இந்த மெகா சர்வே எட்டாவது கணிப்புக் களம். இத்தனை சர்வேக்களிலும் மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் 85,507 பேரை சந்தித்திருக்கிறது நமது டீம்.
இதோ இந்த மெகா சர்வேயில் மட்டும் 25,247 பேரை நாம் சந்தித்தோம்.
க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில், வாக்குச்சீட்டு டைப்பில் சின்னங்களுடன் அச்சிடப்பட்ட சர்வே படிவங்களுடன் நமது டீம் களமிறங்கியது. 'அடுத்த பிரதமர் யார்? உங்கள் வாக்கு யாருக்கு?’ என்ற இரண்டே கேள்விகள்தான் இதில் இருந்தன.
பிரதமராக யார் வர வேண்டும் என்பதில் நரேந்திர மோடிக்கு அதிகம் பேர் டிக் அடித்தனர்.
உங்கள் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு பி.ஜே.பி. கூட்டணிக்கு அமோக ஆதரவு இருந்தது.  ஆனால், அடுத்த இடத்தில் இருந்த அ.தி.மு.க-வுக்கும் முதல் இடத்தில் இருந்த பி.ஜே.பி-க்குமான சதவிகிதம் மிக மிகக் குறைவு. மூன்றாவது இடத்தில் தி.மு.க. இருந்தது. அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கான வித்தியாசம் மிக மிக அதிகம். நோட்டாவுக்கும் குறிப்பிடும்படியான ஆதரவு இருந்தது கவனிக்கத்தக்கது.


thanks:v

No comments:

Post a Comment