Tuesday 29 April 2014

இஸ்ரேல்: காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் அறிமுகம்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், காற்றிலிருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் புதிய இயந்திரம் ஒன்று இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டுள்ளது. 'ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்' என்ற இந்த இயந்திரத்தை 'வாட்டர்-ஜென்' நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன்மூலம் தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.15 செலவாகும் நிலையில், வெறும் ரூ.1.50 காசுகளில் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த எந்திரம் இயங்கும் செயல்முறை பற்றி சி.என்.என். தொலைக்காட்சிக்கு விளக்கிய நிறுவனத்தின் சி.இ.ஓ. கோகவி கூறுகையில், ''இயந்திரத்திலுள்ள 'ஜீனியஸ் ஹீட் எக்ஸ்சேஞ்சர்' வழியாக காற்று செலுத்தப்படுகிறது. அப்போது சுத்தமான காற்றில் இருக்கும் ஈரப்பதம் அகற்றப்படுகிறது.
பிறகு நீராவியானது திரவ வடிவமாக மாறி காற்றிலிருந்து நீரானது பிரிகிறது. அந்த நீர் இயந்திரத்திற்குள் இருக்கும் சிறிய டேங்க் மூலமாக சேகரிக்கப்படுகிறது. அதன்பிறகு, இறுதியாக சேகரிக்கப்பட்ட நீர் 'எக்ஸ்டென்சிவ் வாட்டர் பில்ட்ரேஷன் சிஸ்டம்' வழியாக ரசாயனம் மற்றும் நுண்ணுயிர் கிருமிகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்து இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 800 லிட்டர்கள் வரை குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment