Tuesday, 15 April 2014

கங்கையை காப்போம்!
''கங்கையைப் பார்த்துக்கொண்டிருப்பதே மகத்தான ஞானத் தவம். அதன் புண்ணிய வரலாற்றில், பாரதத்தின் பண்டைய கலாசாரத்தையும், நாகரிகப் பெருமைகளையும், ஆன்மிகப் பண்பு களையும் அறியலாம். அதன் ஓட்டத்தில் புராதன நிகழ்ச்சிகளையும், புராணக் காட்சிகளையும் காணலாம்.
கங்கையின் தூய நீரில், மகரிஷிகளின் தூய உள்ளங்களைத் தரிசிக்கலாம். அதன் ஆழத்தில், ஞானிகளின் சலனமற்ற மன நிலையை உணரலாம். அதன் வேகத்தில், கவிஞனின் கற்பனாசக்தியை அளவிடலாம். அதன் சலசலப்பில், கலைஞனின் இதயத் துடிப்பைக் கேட்கலாம்!
கண்காணா இடத்தில் பிறந்து, காண முடியாத இடங்களிலெல்லாம் பாய்ந்தோடி, கரை காணா கடலில் கலக்கும் அதன் புனிதப் பயணத்தை நினைக்க நினைக்க, பார்க்கப் பார்க்க, கேட்கக் கேட்க, கோடி சிறுகதைகள் இணைந்து கோலமிகு தொடர்கதையாக அது வளர்வதையும், புண்ணிய பாரதத்தின் ஜீவ நாடியாக அது திகழ்வதை யும், நம் ஆத்ம கீதத்தின் ஆதார சுருதியாக இயங்குவதையும் உணர முடியும்.''
- 1973-ம் வருடம், காஞ்சி ஸ்ரீஜெயேந்திரருடன் பத்ரிநாத் யாத்திரை சென்ற குழுவில் பங்கேற்ற பரணீதரன், தனது பயண அனுபவங்களை 'புண்ணிய பாரதம்’ என்ற தலைப்பில் விகடனில் வெளியான தொடர் கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார். அதில் சில துளிகளே, நீங்கள் மேலே படித்தது.
வர்ண ஜாலம் புரியும் அவருடைய வர்ணனைகளைப் படிக்கும்போது, கங்கையில் மூழ்கி எழும் உற்சாகமும் உவகையும் நம் மனத்தை ஆக்கிரமிக்கின்றன. வாருங்கள், அவரது பார்வையிலேயே கங்கையை மேலும் சற்றுத் தெரிந்துகொள்ளலாம்...
''ரிஷிகேசத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது லட்சுமண ஜூலா. கங்கையின் மீது அந்தரத்தில் தொங்கியபடி ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் பாலம் இது. பாலத்தைக் கடந்து, கங்கையின் இடக் கரையில் ஸ்ரீஆதிசங்கரர் மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்துக்கு எதிரே இருக்கும் கங்கைப் படித்துறைக்கு 'லட்சுமண குண்டம்’ என்று பெயர்.
அங்கு நின்று சுற்றுப்புறக் காட்சியைப் பார்க்கும்போது, இயற்கை அன்னை நடத்தும் பேராட்சியின் மாட்சியை உணர முடிகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைத் தொடர்ச்சிகள். வாரிக் கொண்டு வரும் வளத்தால் நம் உடலை வளர்த்து, தேடிச் சேர்த்த புனிதத்தால் நம் உள்ளத்தை உயர்த்தி, பிறர் வாழ தாம் பிறவியெடுக்கும் பெருந்தகையைப்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது கங்கையின் பிரவாகம்.
ரிஷிகேசத்திலிருந்து தெற்கே பதினைந்து மைல் பயணித்தால் ஹரித்துவாரம். இமய மலையில் பிறக்கும் கங்கை, முதன்முதலாக சமவெளியில் பாயத் தொடங்கும் அந்தப் புனித இடம், கேதார்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் பயணம் தொடங்கும் நுழைவாயில். அதனால், அதை ஹரத்துவாரம் என்றும், ஹரித்துவாரம் என்றும் அழைக்கிறார்கள்.
இமாலயத்தில் நாம் உயரே போகப் போக, ஹரித்துவாரத்திலும் ரிஷிகேசத்திலும் நம்முடன் பழகிப் பேசிய கங்கை, மெள்ள மெள்ள ஒதுங்கி, பதுங்கி ஓடத் தொடங்குகிறாள். பள்ளத்தாக்கு களில் பாறைகளுக்கிடையே நுழைந்தும், மரங்களுக்கிடையே மறைந்தும் அவள் பாய்ந்து வரும் காட்சி, சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதை நினைவுபடுத்தும்.
கடியாலாவில் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு எதிரில் கங்கை ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், நூறு அடி இறங்கிச் சென்றால்தான், அதன் கரையை அடைய முடியும்.
சுற்றிலும் மலைப் பாறைகள். அதன் மத்தியில் கங்கை ஓடி வருகிறது. பாறையில் மோதி, அதன் ஓட்டம் தடைப்பட்டு, திசைமாறி அங்கேயே சுழன்றுகொண்டிருப்பதால், அது சக்கர தீர்த்தம் போலிருக்கிறது.
மானுடரின் பாவங்களைக் கரைத்து, விமோசனம் தந்தருள வானுலகிலிருந்து கீழிறங்கி வந்து, தன்னலம் கருதாது, கைம்மாறு எதிர்பாராது, கருணையுடன் கடமையாற்றி, ஓய்ச்சல் ஒழிவின்றி ஓடி, மூலை முடுக்குகளில் எல்லாம் தேடித்தேடி தன் மக்களைக் கரையேற்றுவதாலேயே அவள் புனித கங்கை ஆகின்றாளோ! நாடு முழுவதும் பாய்ந்தோடும் நதிகளிலெல்லாம் அவள் கலந்திருப்பதால், இது புண்ணிய பாரதம் ஆகின்றதோ!
தென் கோடியிலிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார், இமாலயத்திலுள்ள திவ்விய தேசங்களைத் தரிசிக்க வந்தபோது, தேவப் பிரயாகையின் இயற்கை வனப்பில் மனத்தைப் பறிகொடுத்து, அங்கு உறையும் புருஷோத்தமனின் பக்தியில் கரைந்துருகி, தீந்தமிழ்ப் பாசுரங்களால் பாமாலை
சூடியிருக்கிறார். அந்தப் பத்துப் பாசுரங்களை ஓதுபவர்கள், தினமும் திருமாலின் திருவடி தொழுது, அத்திருவடிக்குக் கீழே பாயும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பலனைப் பெறலாம் என்று பலஸ்ருதியில் கூறியிருக்கிறார்.
ஒவ்வொரு பாசுரத்திலும் முதல் இரண்டு அடிகளில் புருஷோத்தமனின் கீர்த்தியையும், பின்னிரண்டு அடிகளில் கங்கையின் மகிமையையும் புகழ்ந்து பாடுகிறார் அவர்.
இரண்டாவது பாசுரத்தில்...
'நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்
நாரணன் பாதத்துழாயும்
கலந்து இழிபுனலால் புகர்படு கங்கை’
- என பாகீரதி- அலகநந்தா நதிகளின் சங்கமத்தின் தத்துவத்தைக் கவிநயத்துடன் அனுபவிக்கிறார். சிவபெருமானின் சிரசை அலங்கரிக்கும் கொன்றை மலரும், நாராயண மூர்த்தியின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட துளசியும் அங்கு கலக்கிறதாம். அந்தப் புண்ணியத் தின் பிரவாகம் எழில்மிகு கங்கையாகப் பாய்கிறதாம்.
சரி! கங்கையின் வேகம் எப்படி? அதைப் பெரியாழ்வார் திருமொழியிலேயே கேட்போம்.
'தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்பற்றிக் கரைமரம் சாடிக்
கடலினைக் கலங்கக் கருத்து இழிகங்கை’
அப்பப்பா... அது என்ன வேகம்!
அது என்ன முரட்டுப் பிரவாகம்!
அதன் ஓட்டத்தைக் கண்டு, பெரிய பெரிய மலைகளெல்லாம் நடுங்குகின்றனவாம்; பூமியே பிளந்து உள்ளே விழுகிறதாம்; கரையிலுள்ள மரங்களெல்லாம் வேரோடு பெயர்ந்து, நீரில் அடித்துக் கொண்டு போகின்றனவாம்; கடலையும் குழம்பச் செய்யும் வேகத்துடன் கங்கை ஓடி வருகிறதாம்.
மற்றொரு பாசுரத்தில், 'கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை’ என்று வர்ணித்து, அக்காலத்தில் கங்கைக் கரை முழுதும் யாகம் வளர்த்த தவச் சீலர்கள் மண்டிக்கிடந்த மாட்சியைக் கூறுகிறார்.
'எழுமையும் கூடி ஈண்டிய பாவம்
இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கை’
- என்று கூறி, 'நாம் ஏழேழு பிறவியிலும் சேர்த்துக்கொண்ட பாவங்களை ஒரே நொடியில் அகற்றும் ஆற்றல் கொண்டது கங்கை’ என்று மிக உறுதியோடு நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.''
பாகீரதியாம் கங்கை குறித்து பரணீதரன் வியந்ததையும் விவரித்ததையும் படித்தீர்களா? ஆமாம்! கங்கை வெறும் நதி அல்ல; தெய்விகமாகப் போற்றப்படும் அன்பு அன்னை அவள். அவளுடைய கரையோரம் வாழ்ந்து கொண்டிருக்கும் 500 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழ்பவள்.
ஆன்மிகம் துவங்கி விவசாயம் வரையிலும், குடிநீர்த் தேவை துவங்கி மோட்சப்பேறு வரை யிலும் இந்திய மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் பின்னிப் பிணைந் திருப்பவள் அவள். தன்னுள் மூழ்கி எழும் ஒவ்வொருவரின் கடந்த கால பாவங்களையும், கர்ம வினைகளையும் களையக்கூடியவள் கங்கை. ஆன்ம விடுதலை நோக்கிய அவர்களுடைய பாதையைச் செப்பனிட்டு, செம்மைப்படுத்திக் கொடுப்பவள்.
கங்கை ஜலத்தை சிறு குடுவையில் பத்திரப் படுத்தி வைத்துப் பூஜிக்காத இந்து இல்லங்கள் அரிது. பிணி தீர்க்கும் மாமருந்தாகக் கருதப்படும் கங்கை நீரை நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்குக் கொடுப்பது உண்டு. எந்த ஓர் இடத்தை, பொருளைத் தூய்மைப்படுத்தவும் கங்கை நீரைப் பயன்படுத்துகிறோம். சாதாரண நீரில் ஒரு சொட்டு கங்கை ஜலம் கலக்கப்பட்ட உடனேயே, மொத்த நீரும் புனிதமடைந்து, சக்தியும் வீரியமும் மிக்கதாகிவிடுகிறது.
மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் ஒரு துளி கங்கை ஜலம் விடப்பட்டால், அவருடைய கடந்த கால பாவங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. அதே காரணத்தால்தான், இறந்தவரின் அஸ்தியை கங்கை நீரில் கலப்பதற்காக நீண்ட நெடுந்தூரம் பயணிக்கிறோம். இறந்தவரின் ஆன்மா அமைதியாகவும், சலனமில்லாமலும் இந்த உலகை விட்டு அகலச் செய்கிறது கங்கை நீர். கங்கை நதியோரம் தங்களது கடைசி மூச்சு அடங்கவேண்டும் என்பதற்காகவே நிறைய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வது உண்டு.
கர்ம வினைகளை நீக்கும் சக்தி ஒருபுறமிருக்க, கங்கை உணர்த்தும் நல்வினைகளுக்காகவும் அவள் போற்றிப் பாராட்டப்படுகிறாள். இந்திய மக்களுக்கு ஆன்மிக, கலாசார மையமாகத் திகழ்வதுடன், தனது கரையோரம் வாழ்பவர் களுக்கு வாழ்வாதாரமாகவும் திகழ்கிறாள் கங்கை. இந்தப் புனித நதி பாயும் கரையோரங்களில் முப்பது நகரங்களும் எழுபது சிறு நகரங்களும், ஆயிரக்கணக்கில் கிராமங்களும் இருந்து வருவதாகத் தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம்.
விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கங்கை ஓர் வரப்பிரசாதம். நெல், கரும்பு, உருளை, பருத்தி போன்ற பலவற்றை கங்கை நீரின் உதவியுடன் பயிரிட்டு வருகிறார்கள்; பசு, ஆடு போன்று பல்வேறு கால்நடைகளைப் பராமரித்து வருகிறார்கள்.
தவிர, நூற்றுக்கணக்கான மீனவ சமூகத் தினருக்கு வருமானம் ஈட்டவும், வயிறு நிரப்பவும் மூலாதாரமாகத் திகழ்கிறாள் கங்கை. அதேபோல், கங்கை நதியோரம் பயிரிடப்படும் செடிகளில் இருந்து அபூர்வ மருந்து வகைகளும் நமக்குக் கிடைக்கின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமின்றி, விஞ்ஞானப் பூர்வமாகவும் கங்கை நீரின் தனித்தன்மை நிரூபிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. காலரா நோய்க்குக் காரணமான பாக்டீரியாவை கங்கை நீரின் உதவியுடன் மூன்று மணி நேரத்துக்குள் உயிரிழக்கச் செய்துவிட முடியும் என்பதும், அதே பாக்டீரியா, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 43 மணி நேரத்துக்கும் மேலாக உயிருடன் இருக்கும் என்பதும் 1896-ம் வருடத்திலேயே கண்டறியப்பட்டது!
1927-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி, நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் காலரா காரணமாக இறந்துவிட்ட உடல்கள் மிதக்கும் கங்கையின் பகுதியைக் காணும்போது, அங்கே கோடிக்கணக்கான கிருமிகள் இருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றும். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கங்கையின் மேற்பரப்புக்கு சில அடிகள் கீழேயிருந்து எடுக்கப்பட்ட கங்கை நீரில் கிருமிகள் எதுவுமே இல்லையாம். எத்தனை நாள் சேமித்து வைக்கப்பட்டாலும், கங்கை நீர் கெடுவதில்லை என்பது அதன் இன்னொரு சிறப்பு. இதற்குக் காரணம், ஆக்ஸிஜனைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கங்கை நீருக்கு மிக மிக அதிகம். இன்னும் சொல்லப்போனால், உலகிலுள்ள எந்த நதிநீரைவிடவும், கங்கை நீருக்குப் பிராண வாயுவைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை 15 முதல் 25 மடங்கு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இத்தனை பெருமைமிக்க புனித கங்கையின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
ஒவ்வொரு நாளும் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து 1.3 பில்லியன் லிட்டர் மாசு கலந்த தண்ணீர், கங்கை நதியில் நேரடியாகக் கலக்கப்படுகிறது.
கங்கையிலும், அதன் கிளை நதிகளிலும் கரையோரம் ஏராளமான குப்பைகள்
குவிந்துகிடக்கின்றன. மக்களின் அலட்சியப்போக்காலும், பலத்த மழை காரணமாகவும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீரிலிருந்து பிராண வாயு அதிகம் உறிஞ்சப்படுவதால், மீன்களும் டால்ஃபின் களும் இறந்துவிடுகின்றன.
இப்படி விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாகவும், கங்கையின் புனிதத்தைக் காப்பதில் நமக்கெல்லாம் ஒர் உந்துதலாகவும் செயல்பட்டுவருகிறது,  சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகளின் தலைமையில் இயங்கும் 'கங்கா ஆக்ஷன் பரிவார்’.
ரிஷிகேசத்தில் இயங்குகிறது கங்கா ஆக்ஷன் பரிவார். இந்த அமைப்பு, 2010-ம் வருடம் ஏப்ரல் 4-ம் தேதி, ரிஷிகேசத்தில் பரமார்த் நிகேதன் ஆசிரமத்தில் துவங்கப்பட்டது. துவக்க விழாவில் தலாய்லாமா, சிதானந்த் சரஸ்வதி, முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
மரங்களை விருட்ச தேவதைகளாகவும், காடுகளை வன தேவதைகளாகவும், மலைகளை கிரி தேவதைகளாகவும் நாம் வணங்குகிறோம். அதேபோல், நதிகளை தேவியர்களாகப் போற்றுகிறோம். நீரானது நம்மைப் புனிதப்படுத்துகிறது என்று நம்புகிறோம். ஆனால், திருக்கோயிலுக்குள் புனிதமான கங்கா மாதாவை தெய்வமாக வழிபடும் நாம், கோயிலுக்கு வெளியே நதியுருவில் பாய்ந்தோடும் கங்கையில் பிளாஸ்டிக் பைகளையும், இதர ரசாயனக் கழிவுகளையும் வீசியெறிந்து, அவளது புனிதத் துக்கு பங்கம் ஏற்படுத்துகிறோம்
சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயிலுக்குச் சமமானவள் கங்கா தேவி. கோயிலுக்குள் செல்லும் நாம் இறை திருவுருவங்கள் மீது குப்பைகளை வீசியெறிவோமா என்ன? அதேபோல்தான், கங்கை யின் புனித நீரிலும் நாம் குப்பைகளையும் அழுக்குகளையும் கலக்காமல் அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை.
வெறும் அறிவுரையுடன் மட்டும் நின்றுவிடாமல், தமது பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கங்கையின் புனிதம் காக்க பெரும் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, ஸ்வாமி களின் 'கங்கா ஆக்ஷன் பரிவார்’ அமைப்பு'' என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த நந்தினி திரிபாதி.  
இன்று கங்கை நதி எதிர்கொண்டுள்ள பிரச்னைகள்,  அவற்றுக் கான தீர்வுகள், கங்கா ஆக்ஷன் பரிவாரின் செயல்பாடுகள் குறித்து அவர் தந்த தகவல்கள் நம்மை மலைக்கவைக்கின்றன.
பிரச்னைகள்: ஒவ்வொரு நாளும் வீடுகள் மற்றும் தொழிற்சாலை களிலிருந்து கங்கையில் கலக்கும் கழிவு நீரால், அதன் தூய்மை கெடுகிறது; புனிதத் தன்மை மாசுபடுகிறது. சில நகரங்களில், கழிவு நீரை சுத்திகரித்துவிட்டுப் பின்னரே கங்கையில் கலக்கிறார்கள்.ஆனாலும், கழிவு நீரின் அளவு மிக அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கும் இயந்திரங்களின் திறன் போதுமானதாக இல்லை.
'நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது, பிராண வாயுவை அதிகம் தக்க வைத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது’
என்றெல்லாம் விஞ்ஞானம் வியந்த கங்கை நதி நீரின் தூய்மை இன்று கேள்விக்குறியாகிவிட்டது.
வாரணாசியில் மட்டும் கங்கை நீரைப் பயன்படுத்துபவர்களில் 66 சதவிகிதம் பேர் டைஃபாய்டு, காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீர் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவலத்துக்கு மக்களின் பொறுப்பின்மையும் அலட்சியப் போக்குமே காரணம்.
தீர்வுகள்: தொழிற்சாலைக் கழிவுகள் நதியில் கலக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீராகவே இருந்தாலும், அதை நதியில் கலக்காமல், பாசனத்துக்கும், டாய்லெட்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
கங்கா ஆக்ஷன் பரிவார் நடவடிக்கைகள்: கங்கையின் படுகையிலுள்ள ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், வீட்டிலும் முறையான கழிப்பிடம் உருவாக்கி, கங்கை நதியை பாத்ரூமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.
* ஒவ்வொரு வீட்டிலும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வழி செய்வது. இதனால் சமைக்கவும், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் மாசுபட்ட நீரை இவர்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம். சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் கழிவு நீர் எத்தனை ஆபத்தானது என்பது குறித்தும், வீடுகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கங்கையிலோ வேறு நதிகளிலோ கலந்துவிடாமல் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் கல்வி மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது.
பிரச்னைகள்: மக்களின் அசிரத்தையாலும், சில தருணங்களில் பலத்த மழை போன்ற இயற்கை நிகழ்வுகளாலும் கங்கை மற்றும் அதன் கிளைநதிகளின் கரையோரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் கங்கை வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
தீர்வுகள்:  சேருமிடத்திலேயே குப்பைகளை அள்ளி, அப்புறப்படுத்த வேண்டும்.
* குப்பைகளை ரீ-சைக்கிள் செய்து பயன்படுத்தும் முறையைக் கண்டறிந்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.
'க.ஆ.ப.’ நடவடிக்கைகள்:
நீரில் உள்ள அசுத்தங்களை அகற்றுவதோடு, எதிர்காலத்தில் தொடர்ந்து அசுத்தமாகாதவாறும் தடுத்து, கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் தூய்மையைக் காப்பாற்றுவது. இது திடக் கழிவு மேலாண்மையில் (Solid waste management) அடங்கும்.
* சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்து, பாலிதீன், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கச் செய்வது. பதிலாக துணி மற்றும் சணல் பைகளைப் பயன்படுத்தத் தூண்டுவது.
- இப்படி விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விஷயங்களில் கங்கை நதிக்கு ஏற்பட்டிருக்கும் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலும் நீக்குவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, கங்கா ஆக்ஷன் பரிவார்.
இதுபோன்ற அமைப்புகள் மட்டுமின்றி, குடிமக்கள் ஒவ்வொருவருமே நதிநீர் தூய்மையைப் பாதுகாப்பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். கங்கை மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டின் புண்ணிய நதிகள் யாவற்றையும் மிகத் தூய்மையுடன் பாதுகாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.
இயற்கையைப் போற்றுவோம்; பாதுகாப்போம்! அப்போதுதான் அது நம் வாழ்வையும் வளத்தையும் மேம்படுத்தும்.

புண்ணிய கங்கையின் புனிதப் பயணம்!
கங்கை நதியின் நீளம் சுமார் 2,510 கி.மீ.
இமயத்தில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தி ஆகிறது கங்கை.
உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் ஒரு கோயில் அமைந்துள்ளது. இதற்கு கங்கோத்ரி என்று பெயர்.
இங்கிருந்து 250 கி.மீ தூரம் பாய்ந்து, ஹரித்து வாரை அடைகிறது கங்கை. அங்கிருந்து சுமார் 785 கி.மீ தூரம் பாய்ந்து, அலகாபாத் நகரை அடையும் கங்கை, அங்கே யமுனையுடன் கலக்கிறது.
சுமார் 10,300 அடி உயரத்தில் பாகீரதியாக வெளிப்படுகிறது.
 தேவப்பிரயாகை எனும் இடத்தில் பாகீரதி நதி அலகநந்தா என்ற நதியுடன் இணைந்த பிறகு, கங்கையாகப் பாயத் தொடங்குகிறது.
 சுமார் 2,500 கி.மீ தூரம் பயணித்து, வங்காளத்தில் நுழைந்ததும், பத்மா நதி என்ற பெயருடன் ஷிவாலயா என்ற நகரம் வரையில் பாய்கிறது கங்கை. அதன் பிறகு, மீண்டும் பாகீரதியாக வங்கக் கடலில் கலக்கிறது.
சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகள்
கடவுளுக்கும் மனிதகுலத்துக்கும் சேவை செய்வதையே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பவர் சிதானந்த் சரஸ்வதி ஸ்வாமிகள். எட்டு வயதில் இல்லத்தை விட்டு வெளியேறி, இமாலயம் சென்று, அமைதியான தியான வாழ்க்கையை மேற்கொண்டவர் அவர். பின்னர், தமது 17-வது வயதில் இல்லம் திரும்பினார். படிப்பில் கவனம் செலுத்தினார். சம்ஸ்கிருதம் மற்றும் வேதாந்தத்தில் உயர் கல்வி முடித்தார். மனித குல சேவைக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். 'கங்கா ஆக்ஷன் பரிவார்’ அவற்றில் பிரதானமான ஒன்று.
புராணச் சிறப்புகள்...
''பெருமாள் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது விண்ணை அளந்தார் அல்லவா, அப்போது பிரம்மதேவன் தமது கமண்டல நீரால் அவரது திருப்பாதத்தைக் கழுவி பூஜிக்க, அந்த நீர் ஆகாய கங்கையாகப் பரிணமித்தது என்கின்றன புராணங்கள்.
பகீரதனின் பெருமுயற்சியாலும் கடும் தவத்தாலும் பூமிக்கு வந்ததால், கங்கா நதிக்கு பாகீரதி என்று திருப்பெயர் வந்தது.
புண்ணிய கங்கை ஒட்டுமொத்தமாக விண்ணிலிருந்து வீழ்ந்தால், பூலோகம் தாங்காது என்று கருதிய சிவபெருமான், அதைத் தன் திருமுடியில் தாங்கிக்கொண்டு, சிறு தாரையை மட்டுமே பூமியில் விழச் செய்தார் எனப் புராணங்கள் கூறும். இதனால் சிவனாரை கங்காதரன் எனச் சிறப்பிப்பார்கள்.
அஷ்ட வசுக்களும் சாபத்தின் காரணமாக மண்ணில் பிறந்தனர். அவர்களில் முதல் ஏழு பேர், பிறந்ததும் பூவுலக வாழ்வில் இருந்து விடுபடவேண்டும் என்பது விதி. எல்லோருக்கும் இளையவர் பூமியில் நெடுநாள் வாழ்ந்து இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது சாபத்தின் சாரம். அதன்படி கங்கையின் புதல்வனாகப் பிறந்தவரே, மகாபாரதம் போற்றும் பீஷ்மர்.
கங்கையில் புண்ணிய நீராடுவது என்பது எல்லோருக்கும் எளிதானது அல்ல. இந்தக் குறை நீங்க... தீபாவளித் திருநாளில் எல்லா நீர் நிலைகளிலும் கங்கா எழுந்தருளி, எல்லோருக்கும் அந்த புண்ணிய வாய்ப்பை அவள் தந்தருள்வது, நாம் பெற்ற வரம்!''

thanks:v

Thursday, 10 April 2014

எவ்வளவோ பண்ணிட்டாங்க... அதைப் பண்ண மாட்டாங்களா?!












ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீதான மற்ற தலைவர்களின் குபீர் விமர்சனம், அவர் 'றெக்கை கட்டிப் பறக்கிறார்’ என்பதுதான்!
''ஆகாயத்தில் தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா பறக்க... பூமியில் ஆயிரக்கணக்கில் போலீஸ் குவிப்பு. ஆகாய வழிக்குக்கூட காக்கிகள் பாதுகாப்பா?'' என ஸ்டாலின் பின்னியெடுக்க, ''வான் வழியாகச் செல்பவருக்கு மண்ணில் நடப்பது எப்படித் தெரியும்? தமிழக மண்ணில் கால் பதிக்காத ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்!'' எனச் சாத்துகிறார் ப.சிதம்பரம்.
அகில உலகத் தலைவர்கள் பாணியில் 'பறந்து பறந்து பிரசாரம்’ செய்யும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பயணங்களுக்கான முஸ்தீபுகள் என்னென்ன?
தேர்தல் காலத்தில் அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரை முதல்வர் பயன்படுத்த முடியாது. அதனால் தனியார் நிறுவனம் ஒன்றில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது புத்தம் புதிய BELL 412 VT - NAV ரக ஹெலிகாப்டர். இதில் இரண்டு விமானிகள், பராமரிப்பு இன்ஜினீயர் ஒருவர் உள்பட ஒன்பது பேர் பயணிக்கலாம். மெரூன் நிற ஹெலிகாப்டரில்தான் இந்தத் தேர்தலுக்கான அனைத்துப் பயணங் களையும் வகுத்துக்கொண்டிருக்கிறார் ஜெ.
இந்த வகை ஹெலிகாப்டரில், பைலட்களின் காக்பிட்டுக்குப் பின்புறம் எதிரெதிர் திசையில் நான்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஜெயலலிதா பயணிக்கும் ஹெலிகாப் டரில் மூன்று இருக்கைகள் மட்டுமே. ஜெயலலிதா அமரும் இருக்கைக்கு முன்புற இருக்கை நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் மேலும் வசதியாக அமர்ந்துகொள்ளலாம். ஜெயலலிதா இருக்கைக்கு அருகில் டீபாய் வடிவில் சிறிய மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தண்ணீர், பழரசம்... போன்ற பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிறிய டி.வி. இருக்கும்.
ஹெலிகாப்டரில் ஜெயலலிதாவின் பி.ஏ. பூங்குன்றன், ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, கமாண்டோ வீரர் ஒருவர், இவர்கள் தவிர போயஸ் கார்டனில் வேலை பார்க்கும் இளம் பெண்கள் ஆகியோர் ஜெயலலிதாவுடன் பறக்கிறார்கள். பைலட் இருக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இருக்கைகளில் இரண்டு பணிப்பெண்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள்தான் தண்ணீர், பழரசம், சூப், கைக்குட்டை போன்ற ஜெயலலிதாவின் தேவைகளை அவரது கண் அசைவுக்கேற்ப நிறைவேற்றுகிறார்கள்.
பொதுவாக, இந்த ரக ஹெலிகாப்டருக்கு படிக்கட்டுகள் கிடையாது. ஆனால், ஜெயலலிதாவின் வசதிக்காக சின்னச் சின்ன படிக்கட்டுகள் கொண்ட 'ஏர் ஸ்டேர்’ ஒன்றை தயாரித்துவைத்திருக்கிறார்கள். தரையில் இருந்து ஹெலிகாப்டரில் ஏறி-இறங்குவதற்காக, சிவப்பு நிற தரை விரிப்புடன் ஒரு பக்கம் மட்டும் கைப்பிடி கொண்ட இந்த ஏர் ஸ்டேரில் மூன்று அடி உயரத்தில் ஆறு படிக்கட்டுகள் உள்ளன. இதை வெள்ளைத் துணியால் மூடி வைத்திருப்பார்கள். ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் துணியை எடுத்துவிட்டு ஹெலிகாப்டர் அருகே தூக்கி வருகிறார்கள் காவலர்கள்.
பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானங்களுக்கு அருகிலேயே ஹெலிபேட் அமைக்கப்பட்டிருக்கிறது. சில லட்சங்கள் செலவில் உருவாகும் அந்த ஹெலிபேட், பூமி பூஜை எல்லாம் செய்யப்பட்டு பக்காவாகத் தயாராகிறது.
ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது  ஜெயலலிதா பத்திரிகைகளையும் புத்தகங்களையும் புரட்டுகிறார். தேவைப்பட்டால் பூங்குன்றனிடம் சில தகவல்களைக் கேட்டுக்கொள்கிறார். கூட்டம் நடக்கும் இடத்துக்கு ஹெலிகாப்டர் வந்ததும், கூட்ட மைதானத்தை ஏரியலாக ஒரு வட்டமடித்த பிறகே தரை இறங்கும். 'ஏரியல் வியூ’வாக ஜனத்திரளை ஜெயலலிதா காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு!
ஜெயலலிதா வான் வழிப் பிரசாரத்துக்கு மாறியது 2009 எம்.பி. தேர்தலின்போதுதான். 'ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து’ என்று தரைவழிப் போக்குவரத்தைத் தவிர்க்கச் சொல்லி அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுத, அதன் பிறகே ஆகாயமார்க்கமாகப் பிரசாரங்களில் பங்கெடுத்து வருகிறார் ஜெயலலிதா.
''கோடையில் உங்களை எல்லாம் வெயிலில் நிற்கவைத்தற்காக என்னை மன்னித்துவிடுங்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நீங்கள் சிரமப் படுவதைப் பார்த்து வேதனைப்படுகிறேன். உங்களை நேரிலேயே வந்து சந்திக்கத்தான் எனக்கு ஆசை. ஆனால், எனது உயிருக்கு ஆபத்து என்று எச்சரித்திருப்பதால் என்னோடு சேர்ந்து அப்பாவி பொதுமக்களும் பலியாக நேரிடுமே என அஞ்சித்தான் ஹெலிகாப்டர் மூலமாக உங்களைச் சந்திக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறேன்!'' என்று 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் 40 தொகுதிகளிலும் இந்த வசனத்தை மறக்காமல் உச்சரித்தார் ஜெ.
சரி... ஹெலிகாப்டர் பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்? ஒரு மணி நேரத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல் ஐந்து மணி நேரத்துக்கு எட்டு லட்சம் வரை ஹெலிகாப்டரின் வசதிகளைப் பொறுத்து வாடகை வசூலிக்கப்படும். 2009-ம் ஆண்டு  தேர்தலில் மொத்தம்
1 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 171 ரூபாயை வான் வழிப் பிரசாரத்துக்கு எனச் செலவழித்தார் ஜெயலலிதா. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் செலவு, தற்போது மூன்று மடங்காக உயரலாம் என்கிறார்கள். ஹெலிபேட், பொதுக்கூட்ட ஏற்பாடுகள், ஹெலிகாப்டர் வாடகை... என எல்லாவற்றையும் கணக்கிட்டால், செலவு ஏகத்துக்கும் எகிறும். வேட்பாளர்கள் தவிர கட்சித் தலைவர்களின் தேர்தல் செலவுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், தேர்தல் கமிஷனுக்குக் கணக்குக் காட்ட வேண்டும்.
எவ்வளவோ பண்ணிட்டாங்க... அதைப் பண்ண மாட்டாங்களா?!
ஒருவேளை இதுவே நான் கலந்துகொள்கிற கடைசித் தேர்தலாக இருக்கலாம்!'' 

'91 வயதில், உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறேன்’ என்று கருணாநிதி புறப்பட்டதே பெரிய விஷயம்!
நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் போது, கோபாலபுரம் வீட்டில் முடங்கிக்கிடப்பாரா கருணாநிதி?
இதோ கோவையில் இருந்து தன்னுடைய கொள்கை முழக்கங்களைத் தொடங்கிவிட்டார்!
''எந்த உடல்நிலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். கடந்த சில மாதங்களாகவே மிகுந்த உடல்நலிவுற்றுச் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிற நான், தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியினரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதற்காகவே வந்துள்ளேன்.
கடந்த ஓராண்டு காலமாக என் உடல் நலிவுற்று உள்ளதையும், அதன் காரணமாகத்தான் பல நிகழ்ச்சிகளை ரத்துசெய்து, கழகத்தினரை மனச் சங்கடத்துக்கு ஆளாக்கி இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் அப்படிச் செய்ய வேண்டியதாகிறது. யார் கண்டார்..? ஒருவேளை இதுவே நான் கலந்துகொள்கிற கடைசித் தேர்தலாக இருக்கலாம்!'' என்று சொல்லும்போது மேடையில் இருப்பவர்கள், எதிரில் இருப்பவர்கள்... என அத்தனை பேரின் இதயங்களும் கனத்துப்போகின்றன. அந்த வார்த்தைகள் வெறும் தேர்தல் ஸ்டன்ட் அல்ல என்பதை கருணாநிதியின் பிரசாரத்தை நேரில் கண்டவர்களால் உணர முடியும்.
உடன்பிறப்புகளை ஒரே சொடுக் கில் உற்சாகம் கொள்ளவைக்கும், 'எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற வரியை, திருப்பூர் பொதுக்கூட்டத்தில் சொல்ல மறந்துவிட்டார் கருணாநிதி. அந்த வரிக்காக ஆவலுடன் கருணாநிதியின் முகம் பார்த்திருந்த தி.மு.க-வினருக்கு ஏக ஏமாற்றம். அருகில் இருந்த ஆ.ராசா, கருணாநிதியிடம் நினைவுபடுத்த, 'எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற வரியை ஒன்றுக்கு மூன்று முறை சொல்லிச் சமாளித்தார் கருணாநிதி. அவரின் பிரசாரம் முழுக்க, இப்படியான உருக்கமான நிமிடங்கள்தான்.
இந்தத் தேர்தல் முடிவு தி.மு.க-வுக்கு எப்படி இருந்தாலும், நீலகிரியில் ஆ.ராசா வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கருணாநிதி. அதனால்தான் நீலகிரியை ஒட்டி கோவையில் தன் முதல் பிரசாரப் பயணத்தை அமைத்துக்கொண்டார். வீதி வீதியாக அலைய முடியாது என்பதால், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி என மூன்று தொகுதி தி.மு.க. வேட்பாளர்களையும் ஆதரித்து ஒரே மேடையில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டார்கள். தேர்தல் கமிஷனின் தேர்தல் செலவுக் கெடுபிடியும் இன்னொரு காரணம்!
கருணாநிதி உற்சாகமாகத்தான் கோவை வந்து இறங்கினார். ஆனால், கொங்கு மண்டல வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை அந்த உற்சாகத்தைக் குறைத்துவிட்டது. கம்யூனிஸ்ட்கள் மற்றும் கொங்கு பெல்ட் கட்சிகள் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்தால் மட்டுமே கோவை, திருப்பூரில் வெற்றியை நோக்கி முன்னேறலாம் எனச் சொந்தக் கட்சியினரே சொன்னதை அவர் ரசிக்கவில்லை. 'இதை என்கிட்டயே சொல்லிட்டு நிக்கிறீங்க. தேர்தல் வேலையை வேகப்படுத்துங்கய்யா!’ எனச் சீறிவிட்டுத்தான் பிரசாரத்துக்குக் கிளம்பியிருக்கிறார்.
பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதிக்கு முன் பேசிய அனைவருமே, 'கடல் போல கூட்டம்... வெள்ளம் போல எழுச்சி’ என்று பேசிச் செல்ல, பேசத் தொடங்கியதுமே அந்த 'எழுச்சி மகிழ்ச்சி’க்குத் தடை போட்டார் கருணாநிதி.
'' 'கடல் போலக் கூட்டம்’ என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இதைவிடப் பிரமாண்டமான கூட்டத்தை இதே கோவையில் செம்மொழி மாநாட்டில் கண்டோம். வெள்ளம் போல தமிழர் திரண்ட அந்தச் செம்மொழி மாநாட்டு மகிழ்ச்சியையும், அதன் பின்னர் வந்த தேர்தல் கொடுத்த மனக்கசப்புகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. செம்மொழி மாநாட்டுக்குத் திரண்ட கூட்டத்தால் அடைந்த மகிழ்ச்சிக்கும் எல்லை இல்லை; அதன் பிறகு பெற்ற தோல்விகளுக்கும் எல்லை இல்லை. அந்த மாநாட்டால் நமக்கு என்ன பலன் கிடைத்தது என்பதை நாம் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும்!'' என்று சற்றே கடுகடுப்புடன் குறிப்பிட்டார்.
'91 வயதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து சக்கரம் போல் சுழன்று பணியாற்றக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர்தான்!’ என முன்னாள் கொறடா முபாரக் பேசியதைக் குறிப்பிட்ட கருணாநிதி, ''தள்ளாடும் பருவத்தில் இருந்தாலும் என்னுடைய மொழி தள்ளாடக் கூடாது; என்னுடைய இனம் தள்ளாடக் கூடாது; என்னுடைய சுயமரியாதை தள்ளாடக் கூடாது. பெரியார், அண்ணா வழியிலும் சிந்தித்து, அவர்கள் இட்ட கட்டளையை என் வாழ்நாள் முடிகிற வரையில் உழைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டவன் இந்தக் கருணாநிதி. அதே சமயம், எனக்கு 91 வயது என்பதை வெளியில் சொல்லிக்கொள்ள விருப்பம் இல்லை. அதுவும் எனது துணைவியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எனக்கு 91 வயது என்று சொல்வது சங்கடம்தான்!'' என்று கருணாநிதி சிரித்துக்கொண்டே சொல்ல, ராஜாத்தி அம்மாள் முகத்தில் வெட்கம்.
வென்றால் அண்ணா வழி... தோற்றால் பெரியார் வழி என இரு வழிப் பாதையை வைத்தி ருக்கும் கருணாநிதி, இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கையில் எடுத்திருப்பது பெரியார் வழியான இன நலன்.
''தமிழகம், திறந்த வீடு அல்ல. மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இங்கே யார் வேண்டுமா னாலும் நுழையலாம் என்றால், இந்தியா சீர் குலைந்துபோகும். தமிழ்நாட்டின் சிறப்பே திராவிட இயக்கம் கட்டிக்காத்த வீரமும் சுயமரியாதையும்தான். அந்தக் கொள்கைகளுக்குப் பங்கம் வரும் என்றால், இந்திய ஒருமைப்பாடு சீர்குலைந்துபோகும். நாங்கள் கட்டபொம்மன்கள். இங்கே எட்டப்பன்களுக்கு இடம் இல்லை. தமிழ்நாட்டில் போக்கொடி தூக்கிய வர்கள் நாம். அந்தக் கொடி இன்னும் தளரவில்லை. தளரவும் விட மாட்டோம்!'' என்று தமிழ் உணர்வுக்குத் திரி கிள்ளினார்.
பேச்சின் இடையே கருணாநிதியின் வார்த்தைகள் அவ்வப்போது குழற, கையில் இருந்த பேப்பரைப் புரட்டக்கூட சிரமப்பட்டார். அப்போதெல்லாம் அருகில் அமர்ந்திருந்த ஆ.ராசா, கருணாநிதி பேசவேண்டிய வரிகளை தாளில் சுட்டிக்காட்டி உதவினார். இடையிடையே வெதுவெதுப்பான வெந்நீரை அருந்தியபடியே பேச்சைத் தொடர்ந்தார் கருணாநிதி.
திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகத் திரண்டிருந்த தொண்டர்களை முறைப்படுத்த போதுமான போலீஸார் இல்லை. இருந்த சொற்ப போலீஸாரும் கடமைக்கு நின்று கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
கோவையில் இன உணர்வு ஊட்டிய கருணாநிதி, அவிநாசியில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய திட்டங்களை அடுக்கினார். ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலை எல்லாக் கூட்டங்களிலும் தவறாமல் நினைவுபடுத்திய கருணாநிதி, ''மின்வெட்டால் இருண்டுகிடக்கும் தமிழகத்துக்கு ஒளி வேண்டாமா?'' என்று மறக்காமல் மின்வெட்டைச் சுட்டிக் காட்டினார். முன் எப்போதையும்விட ஜெயலலிதா மீது கடும் காட்டம் காட்டுகிறார் கருணாநிதி.
''தமிழக முதல்வர்தான் ஏதோ இளைஞர் போல மற்றவர்களைப் பற்றி பேசுகிறார். ஒன்று மட்டும் சொல்கிறேன். நாம் எப்படிப்பட்ட முதல்வரைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு பெங்களூரிலே நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றே போதும். ஜெயலலிதாவுக்கு சென்னை வாலாஜாபாத்தில் 100 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர், நீலாங்கரையில் இரண்டு ஏக்கர், கொடநாட்டில் 898 ஏக்கர், கோவையில் ஒரு ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடியில் 200 ஏக்கர், 30 வண்ணங்களில் கார், நகை, வைரம், முதலீடு... எல்லாம் சேர்த்து 5,107 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதை நான் சொல்லவில்லை; அரசு வக்கீல் கூறுகிறார். இவ்வளவு சொத்துகளைக் குவித்து வைத்துக்கொண்டு 'நான் ஏழை’ என்று சொல்வதில் என்ன அர்த்தம்? தமிழன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றுதானே அர்த்தம்.
'இவ்வளவு சொத்தா?’ என்று நீங்கள் மூக்கின் மீது விரலை வைக்க வேண்டாம். இந்தத் தேர்தலிலே வென்றால், இன்னும் பல கோடி ரூபாய் சம்பாதிப்பார்கள்!'' என்று ஏகத்துக்கும் ஜெயலலிதாவை விமர்சிப்பவர், அதே கோபத்தை வாக்காளர்கள் மீதும் காட்டினார்.
''எங்கள் பேச்சை, வேட்பாளரை, அலட்சியப்படுத்தினால், ஏமாறத் தயாராகி விட்டோம் என்றால் அவர்களை ஆதரியுங்கள். தமிழ்நாடு பொட்டல் காடு ஆக வேண்டுமென்றால், அவர்களுக்கு வாக்கு அளியுங்கள். இல்லையென்றால், எங்கள் பேச்சைக் கேளுங்கள். எங்களை அலட்சியப்படுத்தினால், 'வந்ததை அனுபவியுங்கள்’ எனச் சாபம் இடுவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால், நீங்கள் அந்த நிலைமைக்கு ஆளாக மாட்டீர்கள் என நம்புகிறேன். உங்கள் முன் என் உணர்வுகளைக் கொட்டிய திருப்தியோடு விடைபெறுகிறேன்'' என்று கூறி விடைபெறுகிறார் கருணாநிதி.
தன் அரசியல் வாழ்வில் யாருடைய உதவியும் இன்றி கருணாநிதி துள்ளித் திரிந்த காலம் ஒன்று உண்டு. கருணாநிதி, காலத்தைக் கைபிடித்து அழைத்துச் சென்ற நாட்கள் அவை. இப்போது கருணாநிதியை, காலம் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. ஒரு குழந்தையைக் காணும் குதூகலத்துடன்தான் தொண்டர்கள், கருணாநிதியின் பிரசாரத்துக்குக் கூடுகிறார்கள். ஆனால், கரகரக் குரலில் பேசும் அந்தக் குழந்தையின் பணிச்சுமை இப்போதைக்கு இறங்காது போல!

களத்தில் ராஜாத்தி அம்மாள்!
இப்போது கருணாநிதியின் பிரசாரப் பயணம் என்பது ஒரு குழுவின் பயணம். அவரது தனி மருத்துவர் டாக்டர் கோபால், பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பெருமாள், சமையல்காரர் பிரகாஷ் ஆகியோருடன் அவரை சக்கர நாற்காலியில் வைத்துப் பத்திரமாக அழைத்து வருபவர்கள் என ஒரு குழுவே கருணாநிதிக்காக இயங்குகிறது.
 வழக்கமாகக் கட்சிக் கூட்டங்களில் மேடையில் பின்வரிசையில் அமர்வார் ராஜாத்தி அம்மாள். ஆனால், இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதிக்கு அருகில் முதல் வரிசையிலேயே அமர்ந்திருந்தார். கருணாநிதியின் உடல்நிலை காரணமாக அவரை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.  
கோவையில் துரைமுருகன், ஆ.ராசா, முபாரக், 'பொங்கலூர்’ பழனிச்சாமி... எனக் கட்சிப் பிரமுகர்கள் வெகுசிலர் மட்டுமே கலந்துகொண்ட ஆலோசனையில், கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருக்கிறார் ராஜாத்தி அம்மாள்.
 கருணாநிதியின் உடல் நலம் கருதி பகல் பிரசாரத்தைத் தவிர்த்து மாலை தொடங்கி இரவு வரை பிரசாரத்தை வடிவமைத்தி ருக்கிறார்கள். இரவுப் பிரசாரங்கள் பகல் பிரசாரங்களைவிட மூன்று மடங்கு செலவு பிடிப்பவை. இதனால் பிரசாரப் பொதுக்கூட்டம் என்று அறிவிக்காமல், மினி மாநாடு போல கோவைப் பிரசாரத்தை வடிவமைத்திருந்தார்கள். ஆனாலும் மொத்த மாநாட்டுச் செலவையும் மூன்றாகப் பிரித்து மூன்று வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் தேர்தல் கமிஷன் வரவு வைத்தால் என்ன செய்வது என்று குழப்பத்திலேயே இருந்தார்கள் உடன்பிறப்புகள். அந்தச் சூழ்நிலையைச் சமயோஜிதமாகச் சமாளித்தார் கருணாநிதி. மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, 'இவர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று சொல்லாமல் 'கட்சிக்காகக் களப்பணியாற்றிய இவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை’ என்றரீதியில் பேசி சமாளித்தார்

thanks:v
நாடாளுமன்றத் தேர்தல்:கட்டம் என்ன சொல்லுது? - தலைவர்களின் சுவாரசிய ஜாதக கணிப்பு!

தமிழக ஜோதிட உலகத்தில் மாயவரம் ரமேஷ் ஸ்வாமி முக்கியமானவர்.  பாரம்பரியமான ஜோதிடக் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதிலேயே இக்கலையை கூர்ந்து கற்றுக் கொண்டார். மேலும் கோள்களை பற்றி ஆராய்கிற வானவியல் சாஸ்திரங்களிலும் ஆய்வு செய்தவர்.  இந்தியாவின் முக்கிய பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை துல்லியமாகக் கணித்து, பிரபல இதழ்களில் வெளியிட்டிருக்கிறார்.
மலேசியாவில் பிரதமருக்கான தேர்தல் நடந்தபோது உலகின் அத்தனை நாடுகளின் கருத்துக் கணிப்பாளர்களும் அங்கிருந்தனர். அந்த நாட்டில் ஜோதிடத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள். அப்போது அங்கு ரமேஷ் ஸ்வாமியை வரவழைத்து ''கணிப்பு'' கேட்டார்கள். பெரும்பாலான ஜோதிடர்கள் அரசுக்கு ஆதரவான கணிப்பை வெளியிட்டனர். ஆனால், இவர் மட்டும் ''அரசுக்கும், பிரதமருக்கும் செல்வாக்கு இழப்பு'' என்று கணிப்பை வெளியிட்டார். இவரது கணிப்பு மெய்யானது.
இதனால் மனம் நெகிழ்ந்த மலேசிய பிரதமர் மஹாதீர்,  ரமேஷ் ஸ்வாமிக்கு மலேசியாவில் நிரந்தர குடியுரிமை தர விரும்பினார். ''கோள்கள் சூழல்கிற தஞ்சை மண்டலத்திலேயே என் வாழ்க்கை கழிக்க விரும்புகிறேன்'' என்று அன்போடு மறுத்து ஊர் திரும்பியிருக்கிறார். நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வு, எதிர் தரப்பு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை அரசியல் பிரமுகர்கள் கருத்து கேட்கின்றனர். திரையுலகத்தினர் படங்களின் தலைப்பு, நட்சத்திரங்களின் வெற்றிப் பலன், படங்களின் வெளியீட்டுத் தேதி போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர் தலைப்பு, வெளியீட்டு தேதி குறித்துக் கொடுத்த படங்கள் வெள்ளிவிழா கண்டவை என்ற புள்ளி விவரங்களும் உண்டு.
ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் முக்கிய தலைவர்களின் ஜாதகங்கள் எப்படி இருக்கும் என்று மாயவரம் ரமேஷ் ஸ்வாமி தற்போது கணித்திருக்கிறார். தலைவர்களின் ஜாதங்கள் எப்படி கிடைத்தது என்றால், 'கடந்த காலங்களில் இந்தத் தலைவர்களின் ஜாதங்களை அவர்களது நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் கொண்டுவந்து என்னிடம் காட்டி நிலவரம் கேட்டறிந்தார்கள். அந்தவகையில், என் கைக்கு வந்த ஜாதகங்களை வைத்து இப்போது பலன்களை சொல்கிறேன்'' என்கிறார் ரமேஷ் ஸ்வாமி.
இனி, தலைவர்களின் ஜாதங்கங்கள் பற்றி...
நரேந்திர மோடி
பிறப்பு -
ராசி - விருச்சிகம், நட்சத்திரம் - அனுஷம்
லக்னம் - விருச்சிகம்
* விருச்சிகராசி அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த நரேந்திரமோடி ஜாதகத்தில் தற்சமயம் ராஜ கிரகமாகிய சூரியன் இவருடைய ஜாதகத்தில் புதனுடன் அமர்ந்துள்ள காரணத்தினாலும் குரு பகவான் நான்காம் இடமாகிய பதவிஸ்தானத்தில் ஜாதகத்தில் வலுவாக இருக்கின்றதாலும் செவ்வாய் பலம் பெற்று ஆட்சியில் இருப்பதால் எதிரிகள் இவரை வெல்வது கடினமாகும். தற்சமயம் ஏழரை நாட்டு சனி நடைப் பெற்றாலும் இவருக்கு அதிக பாதிப்புகளைக் கொடுக்காது.
வரும் பாராளுமன்ற தேர்தல் வரும் மாதத்தில் கோள்களின் ஆதிக்கங்கள் வலுவாக இருப்பதாலும் கூட்டணி கிரகங்களின் ஆதிக்கம் வலுவாக இருப்பதாலும் இவர் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகள்.
இவருடைய கட்சியான பாரதிய ஜனதா கட்சி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
சோனியா காந்தி
பிறப்பு: 06.12.1946
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - மிருகசீரிஷம்
லக்னம் - கடகம்
* மிருகசீரிஷம் நட்சத்திரம் கடக லக்னத்தில் பிறந்த சோனியா காந்தி ஜாதகத்தில் தற்சமயம் இவருக்கு புதன் திசை நடைபெற்று வருகிறது.
* இவர் ஜாதகத்தில் பதவி வகிக்கக்கூடிய புதன் சூரியனுடன் இணைந்து இருப்பதால் சூரியன் மறைவுப் பெற்றக் காரணத்தினால் இவரால் பிரதமர் ஆக முடியவில்லை.
* இவருக்கு எதிரிக்கிரகமாகிய கேது, சூரியன், செவ்வாய், புதன் இவர்களுடன் 6-ம் இடத்தில் இணைந்துள்ள காரணத்தினால் தற்சமயம் எதிரிகளால் வெல்லக்கூடிய கோள்களின் நிலைகள் சரியில்லாத காரணத்தினால் இவர் பிரதமராக கூடிய சூழ்நிலைக் கிடையாது.
* இவருடைய ஜாதகத்தில் பகை கிரகமாகிய சனிபகவான் இவர் பிறக்கும்பொழுது குடும்பத்தில் செல்வாக்கு நிலையில் அமர்ந்த காரணத்தினால் அந்த சனி பகவான் தற்சமயம் துலாம் ராசியில் உச்சம் பெற்றுக் காரணத்தினால் இவருடைய முயற்சிகள் பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்கின்றது.
* கூட்டு கிரகங்களின் ஆதிக்கம் தற்சமயம் வலுவாக இருப்பதால் எதிரிகளை சிரமப்பட்டு வெல்ல வேண்டிய சூழ்நிலை இவரது ஜாதகத்தில் உள்ளது.
* இவருக்கு புத்திர கிரகமாகிய குருபகவான் ஜாதகத்தில் பிறந்தபொழுது வலுவாக இருப்பதால் வருங்காலத்தில் இவருடைய மகன் - ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
 ஜெ.ஜெயலலிதா
பிறப்பு: 24.02.1948
ராசி: சிம்மராசி, நட்சத்திரம்: மகம்
லக்னம் - மிதுனம்
* சிம்மராசி மகநட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதாவின் ஜாதகத்தில் தற்சமயம் குருதிசை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்.
*இவர் ஜாதகத்தில் பிறக்கும் பொழுது ராஜகிரகமாகிய செவ்வாய் பதவி ஸ்தானத்தில், தைரிய ஸ்தானத்தில் அமர்துள்ள காரணத்தினால் இவர் செவ்வாய் திசையில் முதல்முதலாக முதலமைச்சர் ஆனார்.
* அரசியல் கிரகமாகிய சூரியனும், புதனும் ஜாதகத்தில் ஒன்பதாம் (9) இடத்தில் வலுபெற்ற காரணத்தினால் பிரபல அரசியல் தலைவியாக திகழ்கிறார்.
இவருக்கு ஜாதகத்தில் சனியானவர் பிறக்கும்பொழுதே வக்கிரத்தில் இருப்பதால் இவர் மூன்று முறை தேர்தலில் ஜெயித்து முதல்வர் பதவியில் மர்ந்தார்.
* தற்சமயம் சனிபகவான் வக்கிரத்தில் இருப்பதால் இவருடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து தமிழ்நாட்டில் அதிக பாராளுமன்ற தொகுதிகளை பெறுவதற்கு உறுதுணையாக கோள்களின் நிலைகளும் இவருக்கு சாதகமாக இருப்பதால் அதிகமான இடங்களை வெல்வார்.
கலைஞர் கருணாநிதி
பிறப்பு: 03.06.1924
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - மிருகசீரிஷம்
லக்னம் - கடகம்
* ரிஷபராசி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி ஜாதகத்தில் தற்சமயம் சுக்கிரமகா திசை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்சமயம் இவருக்கு பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கூட்டுகிரகங்களின் ஆதிக்கம் வலுவாக இல்லாததால் இவருக்கு சாதக பலன்கள் குறைவாகவே உள்ளது. காரணம்! சனியானவர் துலாம் ராசியில் உச்சம்பெற்று எதிரிகள் ஸ்தானத்தில் இருப்பதால் எதிரிகளுடன் போராடவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
* இவருடைய கட்சியான திராவிட முன்னேற்றம் கழகம் (தி.மு.க) வரும் பாராளுமன்ற தேர்தலில் போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில் ஜாதகம் இவருக்கும், இவருடைய கட்சிக்கும் சில இடையூறுகள் ஏற்பட்டு சில தொகுதிகளில் வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்படும். 
நடிகர் விஜயகாந்த்
பிறப்பு: 25.08.1952
ராசி - துலாம், நட்சத்திரம் - சித்திரை
லக்னம் - கும்பம்
* துலாராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த விஜயகாந்த் ஜாதகத்தில் தற்சமயம் இவருக்கு புதன் மகாதிசை நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
* இவருடைய ஜாதகத்தில் புதன், கேது ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள காரணத்தினால் இவருக்கு எப்பொழுதும் எதிரிகள் இருந்துக்கொண்டே இருப்பார்கள்.
* அரசியல் கிரகமாகிய சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகியோர் வலுவாக இருப்பதால் இவர் அரசியலுக்கு வரமுடிந்தது.
* தற்சமயம் இவருக்கு ஏழரை சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் சனியும், ராகுவும் ஒன்றாக இருப்பதால் பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கோள்களின் நிலைகள் இவருக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால் இவருடைய கட்சி அதிக இடங்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை இவருக்கு ஏற்படும்.
* கூட்டுகிரகங்களின் ஆதிகத்தில் வரவிருக்கும் தேர்தல் அமைந்திருப்பதால் கூட்டணி கட்சிகளால் இவருக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளை பெறுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.
வை.கோபால சாமி
பிறப்பு: 22.05.1944
ராசி - ரிஷபம், நட்சத்திரம் - கார்த்திகை
லக்னம் - சிம்மம்
* ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த வை.கோபாலசாமி ஜாதகத்தில் தற்சமயம் சனி திசையில் குரு புக்தி நடைபெறுகின்ற காரணத்தினாலும் ஜாதகத்தில் அரசியல் கிரகமாகிய குரு வலுவாக உள்ள காரணத்தினாலும் பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கோள்களின் ஆதிக்கம் இவருக்கு சாதகமாக இருப்பதால் இவருடைய கட்சி அதிக இடங்களை தமிழ்நாட்டில் பெறுவதற்கு இவருடைய ஜாதகம் சாதகமாக உள்ளது.
* 2015ம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு அரசியலில் மிகபெரிய திருப்பம் ஏற்படும் வாய்ப்பு இவருடைய ஜாதகத்தில் உள்ளது.
thanks:v

அறுவகைச் சுவை என்ன என்ன??...

காரம்: 

உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: 

உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்
.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: 

உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு:

இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு:

 இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: 

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு:

 ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்

கிடைக்கும் உணவுப் பொருட்கள்:

 கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

கழிப்பறையை சுத்தம் செய்த நாசர்

ஷகிலாவும், சன்னி லியோனும்

பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது.

ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை செய்ய முடியாது. இதுதான் இன்றைய தேதியில் ஷகிலாவின் சமூக அந்தஸ்து.

சன்னி லியோனை எடுத்துக் கொண்டால் அவர் நீலப்பட உலகில் பிரவேசித்தது ஏழ்மையாலோ, நிர்ப்பந்தத்தாலே அல்ல. அவரே விரும்பி அந்தத் துறைக்குள் நுழைகிறார். அப்பட்டமான நீலப்படங்களில் நடித்து அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார். இன்று அவரது சமூக அந்தஸ்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்திப் படவுலகின் சூப்பர் ஸ்டார்கள் சல்மான், ஷாருக், அமீர்கான் குறித்து சன்னி லியோனிடம் கருத்து கேட்கிறார்கள். விழாக்களுக்கு தலைமையேற்க அழைக்கிறார்கள். அவரை ஒரு ரோல் மாடலாக மாற்றுகிற அனைத்தும் நடந்து வருகிறது.

ஷகிலாவுக்கும், சன்னி லியோனுக்கும் சமூக அந்தஸ்தில் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? சன்னி லியோன் புழங்கியது மேட்டுக்குடியினரிடம். ஷகிலா ஊருக்கு வெளியே இருக்கும் திரையரங்குகளின் நாயகி. பாலியல் தொழிலாளியோ, பாலியல் படங்களில் நடிக்கும் நடிகையோ... யாராக இருப்பினும் மேட்டுக்குடி என்றால் அது தனி அந்தஸ்து. நிர்வாணப் படங்களால் விற்கக் கூடியது என்றாலும் ப்ளே பாய்க்கு இருக்கும் மரியாதை சாதாரண தமிழ் செக்ஸ் புத்தகங்களுக்கு இருப்பதில்லை.

இதனை கரகாட்டம் - பரதநாட்டியம், கிராமிய பாடல்கள் - கர்நாடக சங்கீதம் என்று வேறுபல துறைகளுக்கும் நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒருவரின் சமூக அந்தஸ்து அவர்கள் செய்யும் தொழிலால், அவர்களின் குணத்தால் ஏற்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே கட்டமைக்கப்படுகிறது.

இந்த இடத்தில்தான் கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார்.

கழிப்பறையை சுத்தம் செய்த நாசர்

நடிகர் நாசர் சென்னை அரசு திரைப்படக் கல்லூரியின் மாணவர். அவர் மட்டுமில்லை. ரஜினிகாந்த் போன்ற பெரிய பிரபலங்களும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள். இன்று கல்லுnரியின் நிலை சொல்லும்படி இல்லை. கல்லூரிக்கு சொந்தமான நிலம் வேறு துறைகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக சின்ன ஒண்டுக் குடித்தனம்தான் இப்போது எஞ்சியுள்ளது. அதுவும் பாழடைந்துபோய்.

தான் படித்த கல்லூரிக்கு மார்ச் இறுதியில் ஒருநாள் நாசர் வந்திருக்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள் என சகலரையும் கோபித்துக் கொண்டதாக தெரிகிறது. பிறகு ஆவேசத்துடன் அங்கிருந்த கழிப்பறையை துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். நாம பயன்படுத்துற கழிப்பறையையே சுத்தமாக வச்சுக்கத் தெரியலைன்னா எப்படி வெளியே வந்து நல்ல சினிமா எடுப்பீங்க என்று கேட்டுக் கொண்டே சுத்தம் செய்திருக்கிறார். மாணவர்களும், ஆசிரியர்களும் பதறிப்போய், நாங்களே செய்துக்கிறோம் என்றதை நாசர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம். கடைசியில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி துடைப்பத்தை அவரிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.

நாசர் இதனை நிச்சயம் விளம்பரத்துக்காக செய்யவில்லை. எந்த ஊடகத்திலும் இது வெளிவரவில்லை என்பதுடன், திட்டிவாசல் இணையப் பக்கத்தை எதேச்சையாக பார்க்காமல் போயிருந்தால் நமக்கும் இது தெரியவந்திருக்காது.

நல்ல சினிமா என்பது சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. சினிமா என்றில்லை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையது. ஒரு பொருளை உருவாக்குகிறோம் என்றால் அது உருவாகிவரும் ஒவ்வொரு படிநிலையிலும் அதன் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். என்றால் மட்டுமே முழுமையடைந்த பொருள் தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைத்திலும் பொறுப்பில்லாமல் செயல்பட்டுவிட்டு இறுதி வடிவத்தில் மட்டும் தரத்தை எதிர்பார்க்கிறோம்.

பொருள்முதல்வாதம் இங்கேயும் தேவைப்படுகிறது.

மேலும், சிதிலமடைந்த தங்களின் பள்ளிக்கூடங்களை முன்னாள் மாணவர்கள் சரி செய்து தருகிற செய்தியை அவ்வப்போது படிக்கிறோம். அரசு திரைப்படக் கல்லூரி என்பதால் அப்படியொரு மாணவன் இந்த கல்லூரிக்கு கிடைக்காமல் போனது கல்லூரியின் துரதிர்ஷ்டம்

Wednesday, 9 April 2014

உலகக் கோப்பை கால்பந்து : சுவையான தகவல்கள்!

பல்வேறு சர்ச்சைகள், பொருளாதார சிக்கல்களுக்கு இடையே பிரேசிலில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் 65 நாட்கள் உள்ளன. உலகக் கோப்பை கால்பந்து பற்றிய சில சுவையான தகவல்களைப் பார்ப்போம்:

நாள் முழுதும், வருடம் முழுதும், எப்போதும் கால்பந்தாட்டமே தங்களது உயிர் மூச்சு என்று காட்டிக்கொள்ளும் நாடு இங்கிலாந்து. ஆனால் இத்தனையாண்டு கால வரலாற்றில் அந்த அணி 1966ஆம் ஆண்டுதான் உலக சாம்பியன் பட்டம் வென்றது.

இங்கிலாந்து வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட் என்பவர் அந்த இறுதியில் ஹேட்ரிக் சாதனை புரிந்தார். அதுதான் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதலும் கடைசியுமான ஹேட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அடித்த 2வது கோல் இன்றும் பெரிய சர்ச்சைக்குரிய கோலாகவே உள்ளது. அது கோட்டைக் கடந்ததா இல்லையா என்பதுதான் பிரச்சனை.

முதலில் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய வீரர்:

1970ஆம் ஆண்டு மெக்சிகோ உலகக் கோப்பை போட்டிகளில்தான் சிகப்பு அட்டை, மஞ்சள் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அதில் எந்த வீரரும் வெளியேற்றப்படவில்லை.

1974ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனிக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் சிலி வீரர் கார்லோஸ் கேசிலே ரெட் கார்டு வாங்கி வெளியேறினார். இவர்தான் முதன் முதலில் ரெட் கார்டு வாங்கிய சர்வதேச வீரர்.

சர்வதேச கோல்கள்:

68 சர்வதேச கோல்கள் மூலம் ஜெர்ட் முல்லர், மிராஸ்லாவ் க்லோஸ் ஜெர்மனி வீரர்கள் இணை ரெக்கார்ட் வைத்துள்ளனர்.

இதில் அபாரம் யார் என்றால் ஜெர்ட் முல்லர்தான் அவர் 62 சர்வதேச போட்டிகைல் 68 கோல்கள் ஆனால் க்லோஸ் 131 போட்டிகளில் 68 கோல்கள் அடித்து சமம் செய்துள்ளார்.

அதிக ரசிகர்கள் பார்த்த உலகக் கோப்பை:

1994ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ.வில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். சராசரியாக ஒரு போட்டிக்கு 69,000 ரசிகர்கள் வர மொத்தமாக 35,87,538 பேர் மைதானத்தில் வந்து போட்டியைக் கண்டு களித்துள்ளனர்.

இதன் இறுதி போட்டி பிரேசிலுக்கும் இத்தாலிக்கும் இடையே நடைபெற்றது, இதனைப் பார்க்க 94,164 ரசிகர்கள் வந்ததே இதுவரை சாதனை. பெனால்டியில் பிரேசில் இத்தாலியை வீழ்த்தியது.