வாந்தியை கட்டுப்படுத்தும் இஞ்சி
சென்ற மருத்துவத் தொடரில் அதிமதுரம் என்கிற அதிசய மருத்துவ மூலிகையைப் பற்றி பார்த்தோம். இன்று`இஞ்சி' யின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம். இஞ்சிக்கு "ஜிஞ்சிபெர் அபீசினாலே'' என்று தாவரப் பெயர் உண்டு. `ஜிஞ்சர்' என்று இதை ஆங்கிலத்தில் அழைப்பர்.
"ஆர்த்ரகா'' ஷ்ரிங்கவீரா, கடுபத்திரா என்று ஆயுர்வேதப் பெயர்களை உடையது. இஞ்சி உலர்ந்த பின் `சுக்கு' என்ற பெயரில், அழைக்கப்படுகிறது. சுக்கை வடமொழியில் `ஒளஷதா', `மஹா ஒளஷதா', `விஷ்வ ஒளஷதா' என்று உயர்வாக அழைப்பர் "சுந்தி'' என்றும் அழைப்பர்.
இஞ்சி வாந்தியை வரவொட்டாமல் தடுக்க கூடியது. இன்றைக்கும் பேருந்து நிலையங்களில் "இஞ்சி முரபா'' என்று இஞ்சியை பொடித்து சர்க்கரைப் பாகில் இட்டு வில்லைகளாக விற்கப்படுவதைப் பார்க்கிறோம்.
சிலருக்கு பேருந்து பயணத்தின் போதோ, மலைப்பகுதியின் மீது ஏறும்போதோ இறங்கும் போதோ குமட்டலோடு வாந்தி ஏற்படுவது இயற்கை ஆகும்.
இப்படி வருகின்ற வாந்தியைத் தடுக்கும் எளிமையான, இனிமையான, பாதுகாப்பான மருந்து இஞ்சி ஆகும். மழலையர் முதல் முதியவர்வரை இது உபயோகப்படுத்தக் கூடியது.
இஞ்சியை உபயோகப்படுத்துவதால் இருமல், கெட்டியான நாட்பட்ட சளி (ஈ.ளை), குமட்டல், வாந்தி, உடல் சூடு, வாய்வு, வயிற்று வலி, பலதிறப்பட்ட வாத, பித்த, சிலேத்தும நோய்கள், செரிமானம் இன்மையால் ஏற்படுகின்ற வயிற்றுப் போக்கு ஆகிய துன்பங்களைப் போக்குவதோடு நன்கு பசியையும் தூண்டிவிடும்.
இஞ்சியைச் சாறெடுத்து தேனுடனோ அல்லது நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்பு சேர்த்து தேநீராகவோ எடுத்துக் கொள்வது எளிது. இஞ்சியை கற்ப மருந்தாகச் சொல்லியுள்ளனர். `கற்பம்` என்றால் நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று பொருளாகும்.
இஞ்சியைத் தோல் நீக்கிச் சுத்தப் படுத்தி கீற்றுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்துக் கொண்டு அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சுமார் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வரும்போது நரை என்று சொல்லக்கூடிய தலைமுடி வெளுத்தல்.
திரை என்று சொல்லக் கூடிய தோல் சுருக்கம், மூப்பு என்று சொல்லக்கூடிய இயலாமை ஆகியவை நம்மை எளிதில் நெருங்காது. மகோதரம் என்று சொல்லக் கூடிய பெருவயிற்று நோயில் இஞ்சிச் சாற்றை பத்து மி.லி.என்று தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்று அன்றாடம் 25 மி.லி.வரை நோய் நீங்கும் வரை கொடுக்க பெருவயிறு, கனத்த வயிறு குணமாகும்.
சீரணமின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு இஞ்சிச் சாற்றை எடுத்து தொப்புளைச் சுற்றி சிறிதளவு தடவி வைக்க செரிமானம் ஆகும். மருந்து சாப்பிட மறுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் இது பயன்தரும்.
மலச்சிக்கல் அதைத் தொடர்ந்து வயிற்று வலி என்று ஏற்பட்டால் இஞ்சியைத் தோல் நீக்கிச் சுத்திகரித்து சாறு எடுத்து ஒரு தேக்கண்டி சாறுடன் சிறிது உப்பும் சேர்த்து கால்டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்க குணமாகும்.
இஞ்சி கொழுப்புச்சத்தை குறைக்க கூடியது. இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இதயநோய், மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்க இயலும். இஞ்சியில் அடங்கியுள்ள "இஞ்சரால்'', ஷோகுவால் என்னும் வேதிப் பொருள்கள் வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பை குறைக்கக் கூடியது.
இதயத்தை பலப்படுத்தக் கூடியது. இஞ்சியில் அடங்கியுள்ள "ஜிஞ்சரால்'' மற்றும் "ஷாகுவால்'' ஆகிய வேதிப் பொருள்கள் மென்மையான மயக்கத்தை (செடேடிவ்) தரக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக் கூடியது.
காய்ச்சலைத் தணிக்கக் கூடியது, வலியைப் போக்கக்கூடியது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது, ஈரலை பலப்படுத்துவதோடு பாதுகாக்கவும் செய்வது என்று நவீன ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இஞ்சியில் உள்ள ரசாயணப் பொருள்கள் ரத்தம் உறைவதால் (பிளேட்லெட் அக்ரிகேஷன்) ஏற்படுகின்ற `மைக்ரெய்ன்' என்னும் ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.
எனவே ஒற்றைத் தலைவலிக்கு அதிகமான பக்க விளைவினைத் தருகின்ற மாத்திரை மருந்துகளை நீக்கிவிட்டு இஞ்சிச்சாற்றையும் தேனையும் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் காண இயலும்.
ஒருநாள் இஞ்சிச்சாறு 10மி.லி. தேன் கலந்து சாப்பிட்டுவிட்டு மறுநாள் 5 கிராம் மஞ்சள் பொடியுடன் போதிய தேன் கலந்து சாப்பிட புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
மேலும் "ஹிமோ பீலியா'' என்னும் ரத்தம் உறைவதில் ஏற்படும் சிக்கலைப் போக்குவிக்கும் மனித உடலின் உட்சுரப்பிகளை பலப்படுத்தத் தேவையான "ப்ரோஸ்டோ கிளாண்டினை'' இஞ்சிச்சாறு தூண்டக்கூடிய வல்லமை படைத்தது.
இஞ்சியில் மோனோ டெர்பின், குர்குமின், அல்பா ஜிஞ்சிபெரின், ஜின்ஜிசல்போனிக் ஆசிட் ஆகியவை அடங்கியுள்ளன. இப்படி பல சிறப்புகளை உடைய இஞ்சியை கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்தப் பயன்படுத்தலாம். நெஞ்சகக் கோளாறுகளுக்கும், மூட்டு வலிகளுக்கும் இது மகத்தான பயன்தருவது

No comments:
Post a Comment