Thursday 5 June 2014

தமிழில் பேசினால் இங்கிலீசில் கேட்கும் – Skype அறிமுகம் செய்யும் புதிய வசதி

சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில், எதிர் முனையில்
பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து, அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை முயற்சிகள் பிப்ரவரியில் இருந்தே நடைபெற்று வந்து தற்போது. கலிபோனியாவல் நடந்து கோட் கான்பிரன்சில் இதை பொதுமக்களுக்கு டெமோ செய்து காண்பித்தனர்.
இதில் ஒருவர் ஜெர்மன் மொழியில் பேசுகின்றார். எதில் முனையில் இருப்பவர் அதை ஆங்கிலத்தில் கேட்கின்றார். பின்னர் எதிர் முனையில் இருப்பவர் ஆங்கிலத்தில் பேசுகின்றார். பிறகு ஜேர்மன் மொழியில் பேசியவர் அதை ஜேர்மன் மொழியில் கேட்கின்றார்.
இனி பேசுவதற்கு மொழி ஒரு தடையில்லை என்ற சூழலை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ளது.
எந்த மொழி தெரிந்தவர்களுக்கு எந்த மொழிகாரர்களிடமும் இனி பேசிக் கொள்ளலாம்.
Skype voice translation டெமோவை பாருங்கள்…

No comments:

Post a Comment