Wednesday, 2 April 2014

வலி நிவாரண மாத்திரைகளால் ஆபத்து!


எந்த ஒரு பிரச்னைக்கும் மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே சுய மருத்துவம் செய்வது தவறானது. குறிப்பாக வலிகளை விரட்ட  நீங்களாகவே வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்…’’ எச்சரிக்கிற உதாரணங்களுடன்  ஆரம்பிக்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார். வலி நிவாரண மாத்திரைகளின் பின்னணியில் மறைந்திருக்கிற பேராபத்துக்களைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.
‘‘இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிற மக்கள் 35 சதவிகிதம் பேர். அவர்களில் பாதி பேர்  படித்தவர்கள், வசதியானவர்கள். 70 சதவிகித மக்கள் வலி நிவாரண மாத்திரைகளைப் பற்றித் தெரிந்தும், 30 சதவிகிதத்தினர் அவற்றைப் பற்றித்  தெரியாமலும் எடுத்துக் கொள்பவர்கள். இவர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மருத்துவரின் பழைய மருந்துச்சீட்டை வைத்துக் கொண்டு, வருடக்  கணக்காக மாத்திரைகள் எடுப்பவர்கள். இன்னும் ஒரு பிரிவினர், தெரிந்தவர்கள் சொல்வதைக் கேட்டு மாத்திரைகள் எடுப்பவர்கள்.

இப்படி சுய மருத்துவம் செய்வதால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
- நோயின் ஆரம்பக் கட்ட அறிகுறி அப்படியே அமுக்கப்படும்.
- நோய் சரியாகத் தீர்க்கப் படாமல் முற்றிப் போகலாம்.
- நோயும் சரியாகாமல், அறிகுறிகளும் மறைக்கப்படுவதால், நீண்ட காலமாக எடுத்துக் கொள்கிற மருந்துகளின் பக்க விளைவுகள் ஒரு பக்கம் பாதிக்க  ஆரம்பிக்கும். பண விரயமும் அதிகமாகும்.

ஒரு முறை எடுத்துக் கொள்கிற மாத்திரை வலியைக் குறைப்பதால், அடுத்தடுத்த முறைகளும் அதையே தொடர்ந்து எடுத்துக் கொள்ளப் பழகுவார்கள்.  பிரச்னைக்கான உண்மையான காரணம் அறியாமல், தவறான மருந்தை, தவறான அளவுகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வலிக்கான காரணம்  உடம்புக்குள் ஒரு பக்கம் தீவிரமடைவதுடன், மருந்துகளின் பக்க விளைவுகளும் இன்னொரு பக்கம் மறைமுகமாகத் தீவிரமடையும். சாதாரண  வலிதானே, இதற்குப் போய் மருத்துவரைப் பார்ப்பதா என்கிற அலட்சியம் வேண்டாம்.


மருத்துவரிடம் போனால் ஏதேனும் வியாதியைச் சொல்லி பயமுறுத்துவாரோ என்கிற எண்ணமும் பலருக்கு உண்டு. மருத்துவரால் மட்டுமே  வலிக்கான காரணத்துக்கேற்ப, நோயாளியின் வயது, உடல்நலம், ஏற்கனவே உள்ள பிரச்னைகள் போன்றவற்றைப் பார்த்து சரியான மருந்தைப்  பரிந்துரைக்க முடியும். யாருக்கு, என்ன மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, எல்லா வலிகளுக்கும் தாமாக சுய மருத்துவம் செய்வதும், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதும், உயிருக்கே  ஆபத்தாக முடியலாம். ரத்த அணுக்களைக் குறைப்பது, குடல் புண்களை ஏற்படுத்துவது போன்ற சின்னச் சின்ன பிரச்னைகளில் தொடங்கி, சிறுநீரக  பாதிப்பு, கல்லீரல் பழுது வரை பெரிய பயங்கரங்களுக்கும் அது காரணமாகலாம்…’’
ht2378

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்-யாழ்மீடியாகுதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம். 

தேவையான பொருட்கள்
:முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் வெற்றி பெற இணை தேர்வு வழிமுறைகள்

காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது. அதுபோல் காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண் தனக்கு தகுந்த சரியான இணையை தேர்ந்தெடுக்க வேண்டும் ht2154
என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.

1. இருவரும் ஒரே நிலையில் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்

2. ஆணை விட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.

3. தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

4. மணந்து கொள்ளும் முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து அறிந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

5. முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்க கூடாது.

6. ஆணை விரும்புவதை பெண் சொல்லமாட்டாள் என்றாலும் கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில்  இருந்து அறிந்துகொள்ள முடியும்.

7. மனதுக்கு பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவாள்.

8. நல்ல ஆடை அணியாத நேரத்தில் மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.

9. பனக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.

10. சந்தேகப்படுபவர்களும் அடிக்கடி வெளியுர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.

Saturday, 29 March 2014

ரஜினி என்னும் மாயமான்


அது என்னமோ தெரியலை தலைவரைப் பற்றி எழுதாமல் தூக்கம் வருவதில்லை. கோச்சடையான் வெளியாகிறது என்றதும் திருப்பதிக்கு முடி தானம் செய்ய ஒரு குரூப் கிளம்பியது. பழனிக்கு பாத யாத்திரை, காவடி தூக்குதல் என்று எட்டு திக்கும் திணறுகின்றன. இந்த நேரத்தில் நாம் மட்டும் வேடிக்கைப் பார்த்தால் எப்படி?

தலைவரைப் பற்றி பேசும் எழுதும் அனைவரும் குறிப்பிடும் சில விஷயங்கள் இவை. தலைவரைப் போல் வள்ளல் யார்? அவரைப் போல் தன்னலம் கருதா தலைவன் யார்? அவரைப் போல் எளிமை உண்டா?

இந்த கேள்விகளையெல்லாம் சீரியஸாக எடுத்து ஆராய்ந்தால் தலைவர் அப்படியெல்லாம் எந்த வரமும் தமிழகத்துக்கோ, அவரின் ரசிகர்களுக்கோ தந்ததில்லை என்பது தெரிய வரும்.

அவரின் ராகவேந்திரா மண்டபம் இருக்கும் இடம் குறித்து சர்ச்சை கிளம்பிய போது, என்னுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதியான இந்த மண்டபத்தை தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அறிவித்தார்.

அதனை அன்று எல்லா பத்திரிகைகளும் கொண்டாடி எழுதின. தலைவர் தமிழக மக்களுக்கு மண்டபத்தை அர்ப்பணித்ததாக அறிவித்து பல பத்து வருடங்கள் ஓடிவிட்டது. தமிழக மக்களுக்கு அந்த மண்டபம் எந்தவகையிலாவது பயன்பட்டிருக்கிறதா? அதை இன்றும் ஆண்டு அனுபவிப்பது யார்? தலைவரை வள்ளல் என்று ஓயாமல் பரப்புரை செய்யும் பக்தர்கள் இது பற்றி எப்போதாவது கேட்டிருக்கிறார்களா? சிந்தித்திருப்பார்களா?

தனது படம் வெளியாகும் போது மட்டுமே தலைவருக்கு பக்தர்களின் நினைவு வரும். கடமையை செய் பலனை எதிர்பார் என்பார். என்ன கடமை? போஸ்டர் ஒட்டி ஆர்ப்பாட்டமாக அவரின் படத்தை அதிகமுறை பார்ப்பது. பக்தர்கள் அதனை கச்சிதமாக செய்வார்கள். பலன்?

ராகவேந்திரா மண்டபத்தில் கடமையை செய் பலனை எதிர்பார் பேனருடன் தலைவர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டி தந்த நிர்வாகிகள், தலைவர் அரசியலுக்கு வருவார், அதைத்தான் பலனை எதிர்பார் என்று சொல்கிறார் என்றனர். தலைவரும் அப்படியொரு அர்த்தத்தில் பக்தர்களை டெம்ப்ட் செய்யவே அந்த பேனரை வைத்தார். படம் ஓடியது, கல்லா நிறைந்தது. பலன்? எந்த பக்தராவது தலைவரிடம் அதுபற்றி கேட்டிருக்கிறார்களா?

தலைவரின் மகளின் திருமணத்துக்கு பக்தர்களுக்கு அழைப்பில்லை. போகட்டும். ட்ராபிக் ஜாம் ஆகிவிடும் அந்தப் பக்கம் வராதீங்க என்று அறிவிக்க வேண்டுமா? அதேநேரம் பாபா படப்பெட்டியை கடத்திய விவகாரத்தில் பக்தர்களை புரட்டி எடுத்த பாமக தலைவர்களை வீடு தேடிச் சென்று அழைப்பிதழ் தந்து அழைத்தார் தலைவர். பக்தர்களில் யாராவது ஏன் என்று கேட்டார்களா? சில பத்திரிகைகள் இதனை கோடிட்டு காட்டியதும், ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றார். குஸ்காகூட இன்னும் வந்து சேரவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும் கோச்சடையான் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்தின் வெற்றி விழாவில் ரசிகர்களை சந்திப்பேன் என்று அதே பழைய துருப்பிடித்த தூண்டிலைதான் தலைவர் வீசுகிறார். பக்தர்களும் படத்தை வெற்றிபெற வைக்கும் நேர்த்திக்கடனுடன் வெங்கடாசலபதிக்கு முடி தானம் செய்ய கிளம்பிவிட்டனர்.

தலைவரைப் பொறுத்தவரை பக்தர்களுக்கு பிரியாணியெல்லாம் போட வேண்டியதில்லை, வீண் செலவு. வெற்றி விழாவில் சந்திப்பேன், பிரியாணி போடுவேன் என்று வாய் வார்த்தையில் அடித்துவிட்டாலே போதும். அப்புறம் கவிப்பேரரசை வைத்து தமிழ்ப்பால், வியர்வை, ஒரு பவுன் தங்கக் காசு என்று இரண்டு வரி. பக்தர்கள் பணால். தமாஷ் என்னவென்றால் தலைவரைப் போன்ற வெள்ளந்தி மனிதருக்கு சாக்கடை அரசியல் செட்டாகாது என்று கமெண்ட். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் தந்து நிறைவேற்றாமல் எஸ்ஸாகும் கட்சிக்காரனைப் போலத்தானே, ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ஏதாவது வாக்குறுதி தந்து எஸ்ஸாகும் தலைவரும்.

தனிப்பட்ட முறையில் தலைவர் பலருக்கு உதவியிருக்கிறார். தனக்கு படம் தந்தவர்கள், கைதூக்கிவிட்டவர்கள், நண்பர்கள்... இதெல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெய்சங்கர் தொடங்கி விஜய் சேதுபதிவரை செய்கிற, செய்து வருகிற தனிப்பட்ட விஷயங்கள். அதில் தலைவரை மட்டும் தனித்துவப்படுத்தி பேச எதுவுமில்லை.

இதற்கு மேலும் மண் சோறு தின்பதும், அலகு குத்தி காவடி எடுப்பதும் பக்தர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் எங்க தலைவரைப் போல வள்ளல் உண்டா, தன்னலம் கருதா தலைவர் உண்டா என்று மட்டும் கோஷமிடாதீர்கள். காதில் தேள் வந்து பாயுற மாதிரி இருக்கு.

ஞாபகசக்தியைப் பெருக்க வழிகள்

மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபகசக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும்.
சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம்.
மூளை வேலையின்போது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு சில பொருட்கள் அவசியம். குளுடாமினிக் அமிலம், மெதியனைன், வைட்டமின் பி-1, பி-2, பி-6 ஆகியவை அந்தப் பொருட்களாகும். மத்திய நரம்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு சரியான உழைப்பு முறையும், உள்ளத் தூண்டல்களும்கூட அவசியமாகும்.
ஒருவரைப் பெரிதும் களைப்படையவும், சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு அல்ல, குறைவான உழைப்பே என்பது உண்மை. இரவு நேரத்தில், குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது.
அவனது இயக்கங்களும் மிகவும் மந்தமடைகின்றன. அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும். அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.
ஆரம்பத்தில் 20 நிமிடங்களில் இருந்து 60 நிமிடங்கள் வரை மனிதன் தான் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்பத்தன்னை தகவமைத்துக்கொள்கிறான். மிகத் தீவிரமான உழைப்புக்குப் பிறகு சோர்வு தட்டுப்படத் தொடங்குகிறது. தீவிரமான வேகத்துடன் மூளையால் எந்த நேரத்தில் பணிபுரிய முடிகிறதோ, அந்த நேரத்தை நாம் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அந்த நேரம் அதிகம் கிடைப்பதில்லை. எனவே அந்நேரத்தில் நமது கவனத்தை அங்குமிங்கும் அலைய விடக்கூடாது. அப்போது வேறு வேலையையும் மேற்கொள்ளக்கூடாது. சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதன் மூலம் ஒரு மனிதனின் திறனை அதிகரிக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இசை, பல்வேறு வண்ணங்கள் போன்ற தூண்டல்கள் இதமளிக்கக்கூடும். சிலருக்கு எரிச்சலூட்டவும் கூடும். சிலருக்கு வேலையில் ஈடுபாடு கொள்ளத் தூண்டும் அவை, வேறு சிலருக்கு கவனக்குறைவை ஏற்படுத்தக்கூடும். அவை, அந்தந்த நபரின் தனிப்பண்புகளைப் பொறுத்தவை.
இதெல்லாம் தனிப்பட்ட நபரின் ரசனை சார்ந்தது என்பதால் நம்மால் பொதுவாக எதுவும் கூற முடியாது. எரிச்சல் ஏற்படும் சூழ்நிலையில் உங்களை இதப்படுத்த இசை அல்லது வண்ணங்கள் அல்லது வேறு என்ன தேவை என்று நீங்களே அறிந்து கொள்ள வேண்டும்.
மூளையும் உடம்பும் களைத்திருக்கும் போது உற்சாகமூட்டும் இசைப் பாடல்கள் அல்லது சிவப்பு சார்ந்த வண்ணங்கள் பயனளிக்கும். மீண்டும் நினைவுகூர்தல் அல்லது கற்றலே ஞாபகசக்தியின் அடிப்படை.
அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை படுக்கைக்குப் போகும் முன்பும், படுக்கையிலிருந்து எழுந்தபின்பும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது பலனளிக்கும். அதோடு, நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தோடு அது தொடர்பான இன்னொன்றை ஞாபகத்தில் இருத்துவது நல்ல பலன் கொடுக்கும்.

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும்.
இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
இனிமையான உறவுக்கு இலுப்பை பூ இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
குழந்தை வரத்திற்கு ஆலம்பழம் சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும்.
பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.
48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

மினி ரவை ஊத்தாப்பம்

காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டால், அப்போது உடனே ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், ரவை ஊத்தாப்பம் செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் அந்த அளவில் இதனை விரைவில் செய்யலாம்.
மேலும் பலருக்கு இந்த ரெசிபியானது விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பேச்சுலர்கள் கூட இதனை விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த மினி ரவை ஊத்தாப்பத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு 3-4 நிமிடம் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு குளிர வைத்து, ஒரு பௌலில் போட்டு, தயிர், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு மற்றொரு பௌலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

30 நிமிடம் ஆன பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி ரவை மாவை ஊற்றி, லேசாக தேய்த்து, பின் அதன் மேல் வெங்காய கலவையை தூவி, எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் கழித்து, கவனமாக திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் மினி ஊத்தாப்பமாக சுட்டு எடுக்க வேண்டும்