Thursday, 23 January 2014

 பாட்டி வைத்தியம்

1. சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும்.

குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக்களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடி விடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.
 
4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.
 
5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப்பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து சுளுக்குக்குத் தடவ, சுளுக்கு விட்டுப் போகும்.
 
6. சிரங்கு தொல்லையா?
சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.
 
7. தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.
 
8. இரவின் பூவன் பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலவியாதி முச்சு காட்டாது.

9. சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
 
10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்
 
11. முக சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
 
12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.
 
13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.
 
14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.
50. கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
 
15. மெலிந்த உடல் பருக்க

i. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
 
ii.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
 
iii. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
 
iv. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
 
v. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.
 
vi. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
 
vii. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

16. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
 
17. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
 
18. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.
 
19. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.
 
20. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.
 
21. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
 
22. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
 
23. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
 
24. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

25. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
 
26. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
 
27. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
 
28. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
 
29. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
 
30. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
 
31. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
 
32. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
 
33. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
 
34. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
35. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
 
36. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
 
37. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
 
38. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
 
39. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
 
40. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
 
41. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
 
42. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
 
43. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
 
44. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
 
45. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
 
46. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
 
47. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
 
48. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
 
49. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
 
50. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
 
51. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
 
52. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
 
53. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
 
54. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
 
55. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
 
56. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
 
57. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
 
58. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
 
59. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
 
60. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.
 
61. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
 
62. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
 
63. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
 
64. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
 
65. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
 
66. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
 
67. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
 
68. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
 
69. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
 
70. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
 
71. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
 
72. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

73. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
 
74. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.
 
75. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.
 
76. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.
 
77. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.
 
78. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.
 
79. சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.
 
80. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.
 
81. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் சமப்படும்.

82. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

83. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

84. வயிற்று எரிச்சல் சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

85. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

86. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் ஐந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

87. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

88. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளுகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

89. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

90. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

91. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

92. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலானவற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

93. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

94. சோம்பு (பெருஞ்சீரகம்)பை லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

95. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

96. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.
பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.
வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

97. பெருங்காயம் கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும். சுவை சேர்க்க மட்டுமின்றி, உணவு செரிக்கவும் இது உதவும்.

98. 1 டேபிள் ஸ்பூன் ஓமத்தை மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடியுங்கள். பிறகு அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து அரையுங்கள் (வெல்லத்தின் நீர்ப் பசையே இதற்குப் போதும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை) இந்த பேஸ்ட்டை கரப்பான், சிரங்கு ஆகியவற்றால் வந்த தழும்புகள் மீது பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துத் குளித்தால் தழும்புகள் மறையும்.

99. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.
கிறுக்கிய கிறுக்கன்

Monday, 16 December 2013

விஸ்வநாதன் ஆனந்த்

அவனை வீட்டில் எல்லாரும் 'விஷி’னு கூப்பிடுவாங்க. வீட்டில் அவன்தான் கடைக்குட்டி. அதாம்பா... கடைசிக் குழந்தை. அவனோட அண்ணா பேரு சிவக்குமார். அக்கா, அனுராதா. அவன் பிறந்தது தஞ்சாவூர் பக்கம் மயிலாடுதுறை. அது அவனோட அம்மா ஊரு. அப்பா இந்திய ரயில்வேயில் பெரிய பதவியில் இருந்தார். அவர் பேரு விஸ்வநாதன். சென்னையில் ரயில்வே தலைமை அலுவலகம் இருந்ததால் அங்கேதான் குடும்பமும் இருந்தது.
விஷியோட குட்டி வயசுல அவனோட பொழுதெல்லாம் அம்மாவோடுதான் போச்சு. சுசீலா அம்மாவுக்கு தீபா ராமகிருஷ்ணன் என்ற தோழி இருந்தாங்க. அவங்க அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. விஷியின் அண்ணனும் அக்காவும் ஸ்கூலுக்குப் போய்டுவாங்க. அப்பா வேலை விஷயமா அடிக்கடி டூர் போயிருவார். விஷி என்ன பண்ணுவான்! டி.வி-யில் ஆர்வம் கிடையாது. அதனால் அம்மாவும் அவர் தோழியும் பொழுதுபோக்க என்ன செய்தாங்களோ அதையே தானும் செய்தான். அதுதான் செஸ் விளையாட்டு!
பக்கத்தில் இருந்த டான் பாஸ்கோ பள்ளியில் சேர்க்கலாம்னு பார்த்தால், அந்த நேரம் பார்த்து அப்பாவை வேலை விஷயமா ஒரு வருஷம் ஃபிலிப்பைன்ஸுக்கு மாத்திட்டாங்க. பாவம் விஷி. புது நாடு... ஊரு... அவனுக்கு எல்லாமே புதிரா இருந்தது. அங்கேதான் அவன் முதன்முதலில் பள்ளிக்குப் போனான். மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்துருவான். வந்ததும் அம்மாவோடு செஸ் ஆட உட்காருவான். அவனோட நண்பர்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் இல்லை. அம்மா அவனோடு விதம் விதமா செஸ் விளையாடுவாங்க.

அப்போது விஷிக்கு ஆறு வயசு. ஃபிலிப்பைன்ஸ் டி.வி-யில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை புதிர் நிகழ்ச்சி ஒன்றுவரும். ஒரு விடுமுறை நாளில் அந்த நிகழ்ச்சியில் கேட்ட எல்லாப் புதிர்களுக்கும் டாண்... டாண்னு விஷி விடை சொன்னதையும், அதில் அவனுக்கு இருந்த ஆர்வத்தையும் பார்த்த அம்மா, அவனுக்கு உதவ கோதாவில் இறங்கினாங்க.
தினமும் மதியம் நிகழ்ச்சியைப் பார்த்து அதில் கேட்கப்பட்ட படப் புதிர், கணிதப் புதிர், வார்த்தைப் புதிர், கட்டப் புதிர் என எல்லாத்தையும் எழுதிவெச்சுருவாங்க. விஷி ஸ்கூலில் இருந்து வந்ததுமே ரெண்டு பேருமா உட்கார்ந்து அதற்கான விடையைத் தேடுவாங்க. விஷி விடையைச் சுலபமாச் சொல்லிடுவான்.

அதோடு கதை முடியலை. அவனோட அம்மா, விடைகளை எழுதி விஷி பேரில் அந்த டி.வி-க்கு அனுப்பினாங்க. முதல் பரிசு கிடைச்சது. அழகான புத்தகம் ஒன்று பரிசாக வந்தது. அது 'செஸ்’ விளையாட்டுப் பற்றிய புத்தகம். விஷிக்கு உற்சாகத்துக்கு கேட்கணுமா! அடுத்தடுத்து வந்த எல்லாப் புதிர்களுக்கும் விடை எழுதி நிறையப் பரிசுகளை வாங்கினான்.
ஒருமுறை பரிசுக்குப் பதிலாக அந்த டி.வி. நிலையத்தில் இருந்து ஒரு தபால் வந்தது 'எங்கள் டி.வி. நிலையத்துக்கு வந்து எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும். ஆனால், இனி விடை அனுப்ப வேண்டாம். நீங்கள் இந்தப் புதிர் போட்டியின் நிரந்தர 'சாம்பியன்’ என்ற அந்தஸ்து பெறுகிறீர்கள்.’ என்று எழுதியிருந்தார்கள்.
அந்த விஷி பின்னாளில் செஸ்ஸில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், உலகச் சாம்பியன் எனப் பல சாதனைகளைப் படைத்து, விஸ்வநாதன் ஆனந்த் என்ற தனது பெயரை உலகம் முழுக்க பதிவுசெய்தார்.
thanks :v
கோவைக்காய்க்கு... ஜே!
Photo: கோவைக்காய்க்கு... ஜே!

கோவைக்காய் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு, சீரகம், இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து உண்ண வேண்டும். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று உண்டால் வாய்ப்புண்ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும். கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும். இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும். கோவை இலையை அரைத்து சாதாரண புண்ணுக்கும், அம்மையினால் உண்டான இரணங்களுக்கும் மேலே பூச புண் ஆறும்.

வயிற்றுப்புண்ணை விரட்டும் சீதாப்பழம்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர். ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.

'' 'அனோனோ டுமாஸ்ஸா’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும் இனிப்பாக இருக்கும்.

ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் இது நல்லதொரு மருந்தாகும். இதயநோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

சளித் தொல்லையைப் போக்கும். சிறுவர்களுக்கு ஏற்படும் பல்வலியைக் குணப்படுத்தும். பற்களை வலுப்படுத்தும். சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும்.

சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.

இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.

பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.

சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.

பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.

எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது'' என்கிறார்.

சீதாமணப்பாகு செய்வது எப்படி?

வெல்லம் அல்லது கருப்பட்டியைப் பதமாகக் காய்ச்சி, சீதாப்பழத்தின் விதைகளை நீக்கி, சதைப்பகுதியை காய்ச்சிய கருப்பட்டியில் போட்டு, நீர் அளவு வற்றும் வரை மீண்டும் காய்ச்சவேண்டும். பிறகு ஆறவைத்து பாட்டிலில் அடைக்கலாம்.

ஆறு மாதங்கள் வரை இந்த சிரப்பை மிதமான வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், நாள்பட்ட சளி, இருமல் தொடர்பான பிரச்னைகள் தீரும்.
 
thanks:v

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!
 Photo: டாக்டர் விகடன் 16 Jul, 2012 இதழிலிருந்து

நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்!

இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா... 

''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.

தினமும் காலையில் கம்பு, தினை மாவு, கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து கஞ்சிவைத்துக் குடிக்கிறேன். இந்தக் கஞ்சி விஷம் இல்லாதது. அதாவது, ரசாயனம் இல்லாதது. கரும்புக்கு ரசாயனம் இடுவதால் வெல்லத்தில் ரசாயனம் இருக்கிறது. பனை மரத்தில் ஏறி நம் ஆட்கள் இன்னும் பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதனால்தான் பனை வெல்லம் சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது.

பகல் வேளையில் ரசம் அல்லது மோர் மட்டுமே சேர்த்துக் கொஞ்சமாக சாதம் சாப்பிடுகிறேன். இடையில் காய்கறி ரசம். இரவில் இரண்டு அல்லது மூன்று இட்லி மட்டுமே ஆகாரம். பசிக்காவிட்டால் சாப்பிடுவது இல்லை. இதுதான் என்னுடைய சாப்பாட்டு அட்டவணை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விடுதிகளில் சாப்பிடுவது இல்லை. அதிகபட்சமாக நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் பழங்கள், கடலை மிட்டாய், பேரீச்சம்பழம் மட்டுமே என் உணவு. காபி, டீ சாப்பிடுவதைவிட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆண்டு ஒன்றுக்கு  ஒரு லட்சம் டன் அளவு பூச்சிக்கொல்லி நஞ்சுகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களையே இன்றைக்கு மக்கள் சாப்பிடுகிறார்கள். நோயோடு பலரும் வாழ்வதற்கு  பூச்சிக்கொல்லி நஞ்சுகள் ஒரு முக்கியமான காரணம்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் நன்றாக இருக்கும். உடல், மன ஆரோக்கியத்துக்கு இயற்கை ஒரு பெரிய வரப்பிரசாதம். செடி ஒன்றை நட்டுவைத்து, அது வளர்வதையும் மொட்டுவிடுவதையும் காய்ப்பதையும் கவனித்துவந்தால், மனதுக்குள் குதூகலம் பிறக்கும். இதை ஒரு சிகிச்சைமுறையாகக்கூட மருத்துவர்கள் சொல்வார்கள். தாவரங்களிடமும் செல்லப் பிராணிகளிடமும் அன்பு செலுத்திப் பாருங்கள். அதன் மகத்துவம் புரியும்'' என்றவரின் பேச்சு மெள்ள இன்றைய இளைஞர்களின் புகை, மதுப் பழக்கம் நோக்கிச் சென்றது.

''மது, புகை வியாபாரிகள் தங்களது லாபத்துக்காக இளைஞர்கள் மீது இந்தப் பழக்கத்தைத் திணிக்கிறார்கள். வருங்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள், மது - புகைப் பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரலையும் குடலையும் கெடுத்துச் சீரழிகிறார்கள். இதன் தொடர்ச்சியாகச் சமூகச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல், குடும்ப உறவில் சிக்கல் என்று எல்லாத் தரப்பிலும் பிரச்னைகள் குவிகின்றன. இதை அனைவரும் சேர்ந்து ஒருமித்துக் கண்டிக்க வேண்டும். 'உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலையும் நாம் செய்யக் கூடாது’ என்ற உறுதியான சுயக் கட்டுப்பாடு ஒன்றே இதுபோன்ற தீய பழக்கங்களின் பிடியில் சிக்காமல் நம் சமூகத்தை காக்கும்.

'இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்’

- என்கிறார் வள்ளுவர்.

அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்படி வரும் வியாதி? எல்லாமே கலைதான்!

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு. நான் நாள் தவறாமல் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்கிறேன். முதுகெலும்பை நேராக வைத்திருக்கும் வஜ்ராசனமும் செய்வேன். இவைதான் என் ஆரோக்கிய ரகசியம்'' என்று தனது வெண்தாடியை நீவியபடி பளிச்செனச் சிரிக்கிறார் பசுமை நாயகன்!

.
நிலவேம்பு பொடி

கஷாயம் தயாரிக்கும் முறை: ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.

எத்தனை வேளை, யாரெல்லாம் சாப்பிடலாம்?
வாரம் இருமுறை (சனிக்கிழமை / புதன்கிழமை) இந்த கஷாயத்தை செய்து சாப்பிடவேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.

பலன்கள்:
* மூட்டு வலி, உடல் வலி வராது.
* சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
* மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, காய்ச்சல் மற்றும் இதரப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குறிப்புகள்:
* கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பலன் தராது.
* 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.
* மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மழலைகளுக்கு கொடுக்கக்கூடாது.
Photo: நிலவேம்பு பொடி

நீங்கள் பித்தமா? வாதமா? கபமா?

உடலை இயங்க வைப்பது வாதம், பித்தம், கபம். இதில் எது அதிகமாக உள்ளது என்பதைப் பொருத்து உடலமைப்பைப் பித்த உடம்பு, வாத உடம்பு, கப உடம்பு என்று மூன்றாகப் பகுத்துப் பார்க்கிறோம். சிலருக்குப் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கும். இப்படி உடல் அமைப்பைப் பிரிப்பதை ‘பிரகிருதி’ என்று கூறுவோம். அந்தந்த உடல்வாகுக்கு ஏற்ப குணாதிசயத்தில் இருந்து அனைத்துமே வேறுபடும்.

வாத உடலமைப்புக் கொண்டவர்கள் எப்போதும் பரபரப்புடன் வேலை செய்பவர்கள். ஆனால் முடிவெடுக்கும் விஷயத்தில் திணறுவார்கள். உடல் எப்போதும் குளிர்ச்சியாகச் சில்லிட்டு இருக்கும். எனவே வெப்பத்தை அளிக்கும் உணவு வகைகள் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

கப உடலமைப்புக் கொண்டவர்கள் அமைதியானவர்கள், பொறுமையாகச் செயல்படக் கூடியவர்கள். உடலில் ஆற்றல் அதிகமாவே இருக்கும். ஆனால் அதைச் செலவிடுவதில்தான் பிரச்னை. சாப்பிட்ட உணவு அப்படியே உடலில் சேர்ந்துவிடும். இவர்கள் கொஞ்சம் பருமனாகவே இருப்பார்கள். இனிப்பு, உப்பு, புளிப்பு வாதத்திற்கு நல்லது.

பித்த உடலமைப்புக் கொண்டவர்கள் பரபரப்புடன் செயலாற்றுவார்கள், முடிவெடுக்கும் திறனும் உண்டு. ஆனால் இவர்கள் பொதுவாக நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள். முயற்சித்தால் ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இவர்களால் முடியும். பித்த உடல்வாகு கொண்டவர்களுக்குக் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு நல்லது.

கப உடல்வாகு கொண்டவர்கள் ஏற்கெனவே கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள். மந்தத்தில் இருந்து வெளிவரக் கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியன நல்லது.

நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் அது பித்தத்தைக் கூட்டாது. தேன் கபத்தைக் கூட்டாது. இதுபோல ஒவ்வொரு சுவையிலும் சில விதி விலக்குகளும் உள்ளன. எனவே, ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகித் தங்களது உடல் அமைப்பைத் தெரிந்துகொண்டால் அதன்படி உணவை எடுத்துக் கொள்ளலாம்.

டாக்டர் ரமேஷ் ஆர்.வாரியார்
ஆயுர்வேத மருத்துவர்.
 
thanks :v