Monday 16 December 2013

கோவைக்காய்க்கு... ஜே!
Photo: கோவைக்காய்க்கு... ஜே!

கோவைக்காய் சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு, சீரகம், இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து உண்ண வேண்டும். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று உண்டால் வாய்ப்புண்ஆறிடும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை உண்ணலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்றவற்றை நீக்கும். கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் நீங்கும். இலையை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

கோவை இலையை எண்ணெயில் கொதிக்க வைத்து படை, சொறி, சிரங்கு போன்றவைக்கு பூசலாம் சருமநோய்கள் குணமாகும். கோவை இலையை அரைத்து சாதாரண புண்ணுக்கும், அம்மையினால் உண்டான இரணங்களுக்கும் மேலே பூச புண் ஆறும்.

No comments:

Post a Comment