Monday, 16 December 2013

நீங்கள் பித்தமா? வாதமா? கபமா?

உடலை இயங்க வைப்பது வாதம், பித்தம், கபம். இதில் எது அதிகமாக உள்ளது என்பதைப் பொருத்து உடலமைப்பைப் பித்த உடம்பு, வாத உடம்பு, கப உடம்பு என்று மூன்றாகப் பகுத்துப் பார்க்கிறோம். சிலருக்குப் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்கும். இப்படி உடல் அமைப்பைப் பிரிப்பதை ‘பிரகிருதி’ என்று கூறுவோம். அந்தந்த உடல்வாகுக்கு ஏற்ப குணாதிசயத்தில் இருந்து அனைத்துமே வேறுபடும்.

வாத உடலமைப்புக் கொண்டவர்கள் எப்போதும் பரபரப்புடன் வேலை செய்பவர்கள். ஆனால் முடிவெடுக்கும் விஷயத்தில் திணறுவார்கள். உடல் எப்போதும் குளிர்ச்சியாகச் சில்லிட்டு இருக்கும். எனவே வெப்பத்தை அளிக்கும் உணவு வகைகள் இவர்களுக்கு ஏற்றவையாக இருக்கும்.

கப உடலமைப்புக் கொண்டவர்கள் அமைதியானவர்கள், பொறுமையாகச் செயல்படக் கூடியவர்கள். உடலில் ஆற்றல் அதிகமாவே இருக்கும். ஆனால் அதைச் செலவிடுவதில்தான் பிரச்னை. சாப்பிட்ட உணவு அப்படியே உடலில் சேர்ந்துவிடும். இவர்கள் கொஞ்சம் பருமனாகவே இருப்பார்கள். இனிப்பு, உப்பு, புளிப்பு வாதத்திற்கு நல்லது.

பித்த உடலமைப்புக் கொண்டவர்கள் பரபரப்புடன் செயலாற்றுவார்கள், முடிவெடுக்கும் திறனும் உண்டு. ஆனால் இவர்கள் பொதுவாக நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள். முயற்சித்தால் ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இவர்களால் முடியும். பித்த உடல்வாகு கொண்டவர்களுக்குக் கசப்பு, துவர்ப்பு, இனிப்பு நல்லது.

கப உடல்வாகு கொண்டவர்கள் ஏற்கெனவே கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள். மந்தத்தில் இருந்து வெளிவரக் கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியன நல்லது.

நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் அது பித்தத்தைக் கூட்டாது. தேன் கபத்தைக் கூட்டாது. இதுபோல ஒவ்வொரு சுவையிலும் சில விதி விலக்குகளும் உள்ளன. எனவே, ஓர் ஆயுர்வேத மருத்துவரை அணுகித் தங்களது உடல் அமைப்பைத் தெரிந்துகொண்டால் அதன்படி உணவை எடுத்துக் கொள்ளலாம்.

டாக்டர் ரமேஷ் ஆர்.வாரியார்
ஆயுர்வேத மருத்துவர்.
 
thanks :v

1 comment:

  1. Dear sir,
    im suffering with stroke(pakkavatham)(left Hemiplegia) since one year.my left leg and hand has been disabled. plesae help me for recovery...
    for my recovery im struggling since one year physically and financially
    name: saravanan
    Age:32
    Place: Hosur , tamilnadu,india
    whatsapp: +91 9500964277
    e mail- ssaravanan2004@gmail.com

    please find the attached my medical records here


    regards
    saravanan

    ReplyDelete