Thursday, 8 May 2014

ஒரு நாள் ஒரு பூ சாப்பிடுங்க... டாக்டருக்கு பை பை சொல்லுங்க...!

"ஒரு நாள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போகத் தேவையில்லை" என்று சொல்வார்கள். ஆனால், தற்போதைய சில ஆய்வுகளின் படி, 'ஆப்பிளெல்லாம் வேண்டாம், டெய்லி சில பூக்களைத் தின்றாலே போதும்; நோய்கள் பறந்து போகும்' என்று கண்டுபிடித்துள்ளனர்.
அப்படி சாப்பிடக்கூடிய பூக்களில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட வியாதிகள் குணமாகுமாம்!
இதுப்போன்று வேறு: தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!!குறிப்பாக இத்தகைய பூக்களை சாப்பிடும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் ரசாயன உரம் கலக்காத பூக்களே நல்லது, மகரந்தங்களை உதிர்த்து விட்டு, பூவிதழ்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும் மற்றும் ஏதாவது அலர்ஜி இருந்தால், முதலில் குறைவான அளவிலேயே உண்ண வேண்டும்.
'சாப்பிடக்கூடிய பூக்கள் எங்கே கிடைக்கும்?' என்று கேட்கிறீர்களா? பெரும்பாலும் அவை நமக்குத் தெரிந்த பூக்கள் தான். அத்தகைய சில பூக்களும் அவற்றின் பலன்களும் இதோ... குறிப்பாக இந்த பூக்களையெல்லாம் டீ வடிவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்த வழி.
மேலும் இத்தகைய பூக்களைக் கொண்டு பெரும்பாலும் சீனாவில் உள்ள மக்கள் தான் டீ போட்டு குடிப்பார்கள். அதனால் தான் அவர்கள் மிகவும் வலிமையுடன் இருக்கின்றனர்.
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: பச்சை நிற ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பூக்கள் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பூக்களில் உள்ள முழுமையான பலன்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், இவற்றைக் கொஞ்சமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீமைச்சாமந்தி சீமைச்சாமந்தியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலின் உட்பகுதியில் உள்ள காயங்களை ஆற்றலாம்.

செம்பருத்தி செம்பருத்தி பூவை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க வல்லது.

லாவெண்டர் லாவெண்டர் பூவை ஐஸ் க்ரீம்மில் சேர்த்தோ அல்லது டீ போட்டு சாப்பிட்டு வந்தால், இது உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும். மேலும் பொடுகுகளை நீக்க வல்லது.

பியோனி எனப்படும் வெண்சிவப்பு செடிவகை பூ (Peony) மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர், இந்த பூவை உட்கொண்டால், நல்ல மனநிலையைப் பெறலாம்.

மல்லிகை பெண்களுக்கு பிடித்த மல்லிகைப்பூ சில வைரஸ் நோய்களுக்கு எதிரானது. இத்தகைய மல்லிகைப்பூவை க்ரீன் டீயில் சேர்த்தோ அல்லது சாலட்டுகளில் தூவியோ எடுத்துக் கொள்ளலாம்.

சாமந்திப்பூ சாமந்திப்பூவை டீ போட்டு சாப்பிட்டால், இவை கண் நோய்களைத் தீர்க்க வல்லது.

பான்சீஸ் (Pansies) பான்சீஸ் பூவில் பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதை உட்கொள்ள இதயம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ரோஜாப்பூ காதல் சின்னமான ரோஜாப்பூவை அப்படியே அல்லது அவற்றை டீ போட்டு சாப்பிட்டால், புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவைகள் அண்டாமல் தடுக்கலாம்.

டெய்ஸி வகைப்பூ (Chrysanthemum) சீமைச்சாமந்திப் பூவைப் போன்றே இந்த வகை டெய்ஸி பூவை டீ வடிவில் சீனாவில் உள்ள மக்கள் அருந்துகின்றனர். இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், கனிமச்சத்துக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் ஆன்டி-கார்ஸினோஜெனிக் போன்றவை நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.

No comments:

Post a Comment